என் மலர்
புதுச்சேரி
- குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
- இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
வில்லியனூர், நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
எம்.ஜி.ஆர். சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியில் ஆளுகின்ற பா.ஐனதா அரசு, மணிப்பூர் மாநிலத்தை ஆளுகின்ற பா.ஜனதா அரசை கண்டித்தும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்து பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள். மணிபாலன், தியாகராஜன், செங்குலத்தான், இன்னரசு ,முருகன் டாடா மேஜிக், மோகன், அருண்குமார், பிரகாஷ்,வேம்பரசி, ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- நாட்டு நலப்பணித் திட்ட 50 மாணவர்கள் கலந்து கொண்டு ஈடுபட்ட னர்.
- அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் ஜெயந்தி செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம், ஏரி மற்றும் இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 3-வது வாரமாக கனகன் ஏரி கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி 2-வது முறையாக நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 1½ டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன. இப்பணியில் நாட்டு நலப்பணித் திட்ட 50 மாணவர்கள் கலந்து கொண்டு ஈடுபட்ட னர். இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் ஜெயந்தி செய்திருந்தார்.
- ஏ.ஐ.டி.யூ.சி தீர்மானம்
- புதிய இடத்தில் பெரிய மார்க்கெட் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை மாநில ஏ.ஐ.டி.யு.சி நிர்வாக குழு கூட்டம் இன்று முதலியார் பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாகவும், எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் பேசினார். கூட்டத்தில் கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, துணைத்தலைவர்கள் சேகர், சிவகுருநாதன், மரி கிறிஸ்டோபர், மாநில செயலாளர் துரை செல்வம், முத்துராமன், ஹேமலதா, செந்தில்முருகன், பாஸ்கர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பெரிய மார்க்கெட் குபேர் அங்காடியை ஒட்டுமொத்தமாக இடித்துவிட்டு கட்டுவதை கைவிட்டு புதுவை அரசு நகராட்சி நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தேவையற்ற சில பகுதிகளை இடித்து விட்டு புதிய கடைகளை கட்டி இங்குள்ள வியாபாரிகளை இந்த கடைகளுக்கு மாற்றி கொடுக்க வேண்டும். பழைய கடைகளை இடிக்காமல் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது புதிய இடத்தில் பெரிய மார்க்கெட் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அ.ம.மு.க. மாநில இணைச்செயலாளர் லாவண்யா வழங்கினார்
- பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யாவின் மகன் சரண்ராஜ் 5-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி ரெட்டியார் பாளையம் ஜெயா நகரில் நடைபெற்றது.
இதனையொட்டி ரெட்டியார் பாளையத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயா நகரில் உள்ள இல்லத்தில் சரண்ராஜ் உருவ படத்திற்கு அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் உப்பளத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து வரும் சிறுவர், சிறுமிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் அ.ம.மு.க. தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர், இணைச் செயலாளர் லாவண்யா உள்ளிட்ட பலர் பங்கேற்று மதிய உணவு வழங்கினர்.
இதில் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் சீத்தாராமன், நிர்வாகிகள் ரகுபதி, ராமச்சந்திரன், சிவக்குமார், கலியமூர்த்தி, தினேஷ், வைத்தியநாதன், உழவர்கரை தொகுதி நிர்வாகிகள் மேல் அமைப்பு பிரதிநிதி லூர்துசாமி, தொகுதி துணைச் செயலாளர் ழில்பேர், சுப்பிரமணி, கில்பர்ட், மோகன்குமார், சபா, சுப்பு, அருண், சூரியா, கவுதம், மணிகண்டன், பாரதிராஜா, சுப்பிரமணி, சூசைராணி, ஜாக்குலின்மேரி, உமா, ரோசலின், கவிதா, எலன் செல்வராணி, இந்துமதி, இன்பம், சந்திரா, சரளா, உமா, திவ்யா, முத்துலட்சுமி, மாலா, மாலதி, சாந்தி, புனிதா, இலக்கியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் அவதி
- கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாவதோடு, தூர் நாற்றம் வீசி வருகிறது.
புதுச்சேரி:
கடலூர்-புதுவை சாலை எப்போதும் போக்குவரத்து அதிகமாக பரபரப்பாக காணப்படும்.
இந்த ரோட்டிற்கு புதிய சாலைகள் போடப்பட்டு சாலை ஓரத்தில் உள்ள கழிவு நீர் வடிதல் வாய்க்கால்களை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுபோல பிள்ளையார் குப்பம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலை தடுப்பு சுவர் அமைப்பதற்காக பணி கடந்த 6 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது.
இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாவதோடு, தூர் நாற்றம் வீசி வருகிறது.
மேலும் கழிவுநீர் அதிகரித்து வருவதால் வாய்க்கால்கால் நிரம்பி ரோட்டிலே தேங்கி நிற்கிறது.
இதனால் கடலூர்- புதுவை செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் ஊர்ந்து செல்கின்றது. மேலும் அவ் வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பிள்ளையார் குப்பம் மாஞ்சாளை ரோட்டில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பாதசாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- 2 குடும்பத்தில் இருக்கும் நடக்கும் பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
- சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
சென்னை வில்லிவாக்கம் ராஜா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் மகன் தினேஷ். இவருக்கும் காலப்பட்டு சாந்தி நகரை சேர்ந்த லோகநாதன் மகளுக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தவுடன் தினேசின் மனைவி இறந்துவிட்டார். இதனால் தினேஷ் குடும்பத்திற்கும் லோகநாதன் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. 2 குடும்பத்தில் இருக்கும் நடக்கும் பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த3 ஆண்டுகளாக குழந்தை லோகநாதன் பராமரிப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தினேஷ் தனது நண்பர்களுடன் நேற்று காலாப்பட்டு வந்தார். அங்குள்ள முருகன் கோவில் வாசலில் லோகநாதன் குழந்தையை தூக்கி வர சொன்ன தினேஷ் சிறிது நேரம் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தார்.
பின்னர் குழந்தையை தரச் சொல்லி லோகநாதன் கேட்கவே தினேசுக்கும் லோகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து குழந்தையை அங்கிருந்து தூக்கிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பாட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரனை நடத்தி தினேஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- தந்தை பிச்சை முத்து தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி, துப்ராயப்பேட்டையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி காலை 7 மணிக்கு அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு தேர் பவனி நடந்தது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் 22-ந் தேதி காலை 6.30 மணிக்கு இருதய ஆண்டவர் உதவி பங்கு தந்தை சின்னப்பன் தலைமையில் திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7 மணிக்கு புதுச்சேரி இருதய ஆண்டவர் பசிலிக்கா பங்கு தந்தை பிச்சை முத்து தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது.
ஆடம்பர தேர் பவனியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
- 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம்.
- மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 2010 முதல் 2017 வரை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி இயக்குனர் உதயசங்கர் வரவேற்றார். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பட்டம் பெற்ற 626 பேருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
விழாவில் பேசிய கல்லூரி இயக்குனர் உதயசங்கர், முதலமைச்சர் ரங்கசாமியால்தான் இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டது. அவரது கையால்தான் பட்டமளிப்பு விழா நடக்க வேண்டும் என இறைவனின் ஆசி இருந்துள்ளது என்றார்.
அடுத்து முதுநிலை மருத்துவ மாணவி மணிமொழி பேசும்போது, நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். எங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரில் 3 பேர் பெண்கள். 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம். இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி தான் காரணம் என்றார். இவர்களின் பேச்சை கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி, உணர்ச்சி வசப்பட்டு வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டார். இதைப்பார்த்து மேடையில் இருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
புதுவையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளே இருந்தது. மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார். இதற்கு பல தடைகளும், முட்டுக்கட்டைகளும் எழுந்தது.
ஒரு கட்டத்தில் மருத்துவ கல்லூரியை மாநில அரசு கைவிடும் நிலைக்கு சென்றது. இதனையெல்லாம் தாண்டியே இந்த கல்லூரி திறக்கப்பட்டது. இதன் நினைவாகவே முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.
- வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது.
- பைக் திருடிச்செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 10 நாட்களில் நகர பகுதியில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகள் திருடப்பட்டு வருகிறது. 'வீடு மற்றும் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களில் அரியாங்குப்பம், பாகூர், பெரியக்கடை, காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், சேதராப்பட்டு, திருபுவனையில் தலா ஒரு பைக், உருளையன்பேட்டை, தவளக்குப்பத்தில் தலா 2 பைக்குகள் திருடப்பட்டுள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதவிர வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி முழுவதும் 25-க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடப்பட்டுள்ளது.
ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பைக்குகளை 3 பேர் சேர்ந்து பூட்டை லாவகமாக உடைத்து திருடிச்செல்லும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்து வரு கின்றனர். பைக் திருடிச் செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது. பைக் திருட்டில் வெளிமாநில கும்பல் களம் இறங்கி உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.
- பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏவாக இருப்பவர் கல்யாணசுந்தரம். நேற்று காலை இவர் வழக்கம்போல் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது எம்.எல்.ஏவுக்கு போன் செய்த மர்மநபர், முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் தானே, எனக்கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அதற்கு கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. அந்த நபரிடம் யார் வேண்டும் எனக் கேட்ட போது, உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னை ஏதும் உங்களால் செய்ய முடியாது, பாக்குறீங்களா? எனக்கூறி மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. என்னுடைய தொலைபேசி எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது எனக்கேட்ட போது, காரைக்காலில் ஒருவரிடமிருந்து வாங்கினேன் என்றார்.
இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. இப்போது உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது, என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் எனக்கூறி போனை துண்டித்துவிட்டார்.
ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.
இதற்கிடையே திருபுவனை தொகுதி பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளனுக்கு நேற்று மாலை சொல்போனில் பேசிய மர்ம நபர், என்னிடம் மோத வேண்டாம், நீங்கள் முன்னாள் அமைச்சரா இருந்தா என்ன? என்கிட்ட வச்சுக்காதீங்க எனக்கூறி அங்காளன் எம்.எல்.ஏ.வை திட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் அங்காளன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் தொலைபேசியில் மிரட்டியது ஒரே நபர் என்றும், ஒரே எண்ணை பயன்படுத்தியதும் தெரியவந்தது.
மேலும் அந்த செல்போன் நாகை மாவட்டத்தில் இருந்து பேசியது பதிவாகி இருந்தது.
இதனால் உஷாரான போலீசார், காரைக்கால் மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த எண்னை வைத்து விசாரணை நடத்தியதில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வர் நாகப்பட்டினத்தை அடுத்த செம்பியன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த நரேந்திரன் (வயது40) என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்ய காரைக்கால் போலீசார் நாகப்பட்டினம் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்து நரேந்திரனை பிடித்து காரைக்கால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நரேந்திரன் எதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுத்தார்? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
- தொழிற்சங்கம் சுமூக தீர்வு கண்டு வருகிறது. தொழிலாளர்களின் உரிமையைப் பெற்றுத் தரும் தலைசிறந்த தொழிற்சங்கமாக பி.எம்.எஸ். விளங்குகிறது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா நிகழ்ச்சி இன்று நடந்தது.
விழுப்புரம் மண்டல தலைவர் இளவரசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் புதுவை மாநில பி.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் ஆசைத்தம்பி, மாநில செயலாளர் சிவக்குமார், பொதுச் செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் வீரமணி, ஆறுமுகம், கணேசன், நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிமனை செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பி.எம்.எஸ். சங்க தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் மற்றும் பேரவை தலைவருமான விமேஸ்வரன், மாநில செயலாளர் சி.எஸ்.முருகன் ஆகியோர் சங்க கொடி ஏற்றி சிறப்புரையாற்றினர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி உள்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
பி. எம். எஸ். தொழிற்சங்கம் வளர்ந்து வரும் தொழிற்சங்கமாகும். தொழிலாளர் பிரச்சினைகளுக்கு வி. எம். எஸ். தொழிற்சங்கம் சுமூக தீர்வு கண்டு வருகிறது. தொழிலாளர்களின் உரிமையைப் பெற்றுத் தரும் தலைசிறந்த தொழிற்சங்கமாக பி.எம்.எஸ். விளங்குகிறது.
நாட்டின் மீது முதன்மையான அக்கறை கொண்டு செயல்படும் பி. எம். எஸ். தொழிற்சங்கம் தேசத்திற்காகவும் தொழிலாளர்களுக்காகவும் சேவையாற்றி வருகிறது. இந்த சங்கத்திற்காக பா.ஜ.க.வும், கட்சி நிர்வாகி களும் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜனதா மாநில துணை தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகினர்.
நிகழ்ச்சியில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், முதலியார்பேட்டை பொறுப்பாளர் செல்வகணபதி, மாநில வணிக பிரிவு தலைவர் சத்யராஜ், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், முதலியார்பேட்டை தொகுதி தலைவர் இன்பசேகரன், உப்பளம் தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் சக்திவேல், ரவிச்சந்திரன், ஜெயரட்சகன், வெங்கடேஷ், கருணாநிதி, கார்த்திகேயன் சேகர் ஆகியோர் பங்கேற்கின்றனர். பணிமனை தலைவர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல், தாச சாகித்யா புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை வேதபாரதி பாரத பண்பாட்டு அமைப்பு சார்பில் சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் தேவி, பூதேவி சமேத திருமலை திருப்பதி பெருமாளின் ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு ஊஞ்சல் சேவை தொடங்கியது. சகஸ்ரநாம பாராயணம், திவ்யநாம சங்கீர்த்தனம், கீர்த்தனைகள் நடந்தது. தொடர்ந்து வேதகோஷம், புஷ்பயாகம், சாற்றுமுறை, நாதஸ்வர சேவையும், பிற்பகல் 12 மணிக்கு மகா ஆரத்தியும் நடந்தது.
ஊஞ்சல் சேவையில் புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் சாமியை தரிசித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல், தாச சாகித்யா புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஊஞ்சல் உற்சவ ஏற்பாடு களை புதுவை வேதபாரதி, பஜ னோத்ஷவ கமிட்டி தலைவரும், உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான சிவசங்கரன், தமிழ்நாடு வேதபாரதி செயலாளர் வெங்கட்ராமன், தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் பட்டாபிராமன், பொருளாளர் வரதராஜன், துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், வேதராமன், உறுப்பினர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






