என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கம்யூனிஸ்டுகள் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    கோப்பு படம்.

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கம்யூனிஸ்டுகள் கண்டன ஆர்ப்பாட்டம்

    • குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
    • இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர், நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

    எம்.ஜி.ஆர். சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியில் ஆளுகின்ற பா.ஐனதா அரசு, மணிப்பூர் மாநிலத்தை ஆளுகின்ற பா.ஜனதா அரசை கண்டித்தும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்து பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    இதில் நிர்வாகிகள். மணிபாலன், தியாகராஜன், செங்குலத்தான், இன்னரசு ,முருகன் டாடா மேஜிக், மோகன், அருண்குமார், பிரகாஷ்,வேம்பரசி, ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×