என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை தி.மு.க.மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்குகிறார்.

    புதுச்சேரி:

    மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பா.ஜனதா அரசைக் கண்டித்து புதுவை தி.மு.க.மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    சுதேசி மில் அருகே காலை 10 மணிக்கு தொடங்கும் ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்குகிறார். இதில் மாநில தி.மு.க. நிர்வாகிகள்,

    முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏக்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், நிர்வாகி கள், மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தி.மு.க. தலைமை சார்பில் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதுவை அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாற்றுத்திறனாளிகள் அல்லது நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குநர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதுவை அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி களுக்காக வேலைவாய்ப்பு அளிப்பதில் சிறந்த அரசு துறை, தன்னாட்சி அமைப்பு, உள்ளாட்சி துறை, பொதுத்துறை நிறுவனங்கள் விருது, மாற்றுத்திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு அளிப்பதில் சிறந்த தனியார் நிறுவனங்கள் விருது, சிறப்பாக பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அரசு துறை, தன்னாட்சி அமைப்பு உள்ளாட்சி துறை, பொதுத்துறை நிறுவனங்கள் விருது, சிறப்பாக பணிபுரி யும் தனியார் நிறுவன மாற்றுத்திறனாளி ஊழியர்கள் விருது, சிறப்பாக சுய தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி விருது வழங்கப்படும்.

    ஒவ்வொரு விருதுக்கும் சான்றிதழ் வழங்குவது மட்டுமில்லாமல் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். நடப்பு ஆண்டு மாநில விருதுகளுக்காக தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அல்லது நிறுவனங்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்து ஆதார ஆவணங்களுடன் வரும் செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு ஏற்கப்படமாட்டாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூக்கு தொண்டை பிரிவின் சிறப்பு நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.
    • புதுவை அரசு மருத்து வமனையின் மருத்துவர்கள் சிவசங்கர், சண்முகநாதன், ஷைலஜா ஆகியோ ர் உரையாற்றினார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு தலைமை மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரியின் காது, மூக்கு தொண்டை பிரிவின் சிறப்பு நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.

    இதில் சுவாச ஒவ்வாமைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அதன் நோயறிதல் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வெங்கடேஸ்வரா கல்லூரியின் காது. மூக்கு.

    தொண்டை பிரிவு டாக்டர் பிரபு, ஜிப்மர் மருத்து வமனையின் துறை தலைவர் சிவராமன், பேராசிரியர் கலையரசி, மகாத்மா காந்தி கல்லூரியின் பேராசிரியர் விஜய சுந்தரம், ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ரவி கண்ணன், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியின் நெஞ்சக மருத்துவ துறை தலைவர் வெங்கடேஸ்வரபாபு, புதுவை அரசு மருத்து வமனையின் மருத்துவர்கள் சிவசங்கர், சண்முகநாதன், ஷைலஜா ஆகியோ ர் உரையாற்றினார்கள்.

    • தொகுதி தலைவர் கே.பி. சண்முகம் தலைமையில் நடந்தது
    • தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தமிழகத்தின் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வானூர் ஒன்றிய தலைவர் கே.பி. சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே. ராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் நிர்வாகிகள் சிவலிங்கம் ஆதிமுத்து லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு வழங்க உள்ள பெண்களுக்கான உரிமை தொகையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஆளும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    கஞ்சா கள்ளச்சாராய, விற்பனையை அரசு தடுக்க வேண்டும். தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    னதா நிர்வாகிகள் ஜீவா, குப்புசாமி, அய்யனார், மேகநாதன் ரமேஷ், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ. 1000 உதவித் தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசு பொருட்கள் மற்றும் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒத்தவாடை வீதியில் தொடங்கப்பட்டது.

    தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமாகிய கோபால் தலைமை தாங்கினார்.

    மாநில தி.மு.க. அமைப்பாளரும், புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வீடு, வீடாக சென்று தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ. 1000 உதவித் தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஆதிநாராயணன், துணை செயலாளர்கள் முருகன், கண்ணதாசன், புவனேஸ்வரி, பொருளாளர் சசிகுமார், மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், தொண்டரணி மதனா, ராஜேஷ், வர்த்தகர் அணி குரு என்ற சண்முகசுந்தரம், ஜெயப்ரகாஷ், இலக்கிய அணி ஆளவந்தார், தர்மராஜ், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரெமி எட்வின், தாமரைக் கண்ணன், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்

    தொடர்ந்து, அம்மன் கோயில் வீதி, முல்லை நகர், செங்கேணி அம்மன் நகர், பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மாணவ மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்டது.

    • புதுவை அரசியலில் ஜொலிப்பாரா?
    • புதுவையின் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசில் சபா நாயகர், அமைச்சர், எம்.பி. என பல்வேறு பதவி களில் இருந்தவர் ப.கண்ணன். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். சிறு வயதிலேயே தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர்.

    இவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது புதுவை மாநிலம் முழுவதும் பாத யாத்திரை சென்று காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டினார்.

    மேலும் இவர் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த போது புதுவையின் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். இதனால் அவருக்கு புதுவையின் அனைத்து பகுதிகளிலும் ஆதரவாளர்கள் இருந்து வந்தனர்.

    இதற்கிடையே மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி த.மா.கா. கட்சியை தொடங்கிய போது அவருக்கு கண்ணன் ஆதரவு தெரிவித்தார். மேலும் புதுவை த.மா.கா. தலைவராக இருந்து வந்தார். அதன்பிறகு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என கண்ணன் தனிகட்சி தொடங்கினார். இதன் பின்னர் தாய் கட்சியான காங்கிரசில் மீண்டும் ஐக்கியமாகி எம்.பி.யானார்.

    இதன்பிறகு மீண்டும் காங்கிரசில் இருந்து விலகிய கண்ணன் அ.தி.மு.க.வில் இணைந்து சட்டசபை தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவரது சிஷ்யனான தற்போது அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.

    அதன்பிறகு கண்ணன் அ.தி.மு.க.வில் கட்சி பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்தார். அதனை தொடர்ந்து கடந்த 2021 மார்ச் மாதம் டெல்லியில் மத்திய மந்திரிகள் முன்னிலையில் கண்ணன் பா.ஜனதாவில் இணைந்தார்.

    ஆனால் அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் கடந்த 2 ஆண்டுகளாக மவுனமாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மணிப்பூரில் நடந்த கலவரம் மற்றும் சம்பவத்தை கண்டித்து முன்னாள் எம்.பி. கண்ணன் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்தேறிய பெண்களுக்கு எதிரான மிகவும் அவமானகரமான செயல் இந்தியர்களை மட்டுமல்ல உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி மிகப் பெரிய கேவலமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

    இந்த செயலுக்கு எந்தவித சாக்குபோக்கும் சொல்லாமல் மணிப்பூர் முதல்-அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

    பெண் குலத்துக்கு அளிக்கப்பட்ட இந்த மாதிரியான கொடூரத்தை எந்த வகையான மற்ற குற்றங்களுடன் ஒப்பிடவே முடியாது. இந்த கொடுமையை கண்டிக்க எந்த வ ா ர் த் தை யு ம் எனக்கு கிடை க்கவில்லை. இதுதொடர்பாக என்னுடை ய கடுமையான கண்டனங்களை மத்திய பா.ஜ.க. அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும் தெரிவித்து க்கொள்கிறேன்.

    அதிகாரப்பூர்வமாக இப்போது நான் அறிவிக்க விரும்புவது, பா.ஜ.க.வுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் அறவே இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுமக்களுக்கான எனது பணியும், போராட்டமும் என்றும் தொடரும் என தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அறிவித்ததன் மூலம், அக்கட்சியில் இருந்து கண்ணன் விலகியது உறுதியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்து கண்ணன் விலகியிருப்பது அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • 113 மையங்களில் நடந்தது.
    • தேர்வு பணியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணி யிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    அதன்அடிப்படையில், புதுவையில் 37 ஆயிரத்து 602, காரைக்காலில் 5 ஆயிரத்து 148, மாகியில் ஆயிரத்து 128, ஏனாமில் 2 ஆயிரத்து 122 பேர் என மொத்தம் 46 ஆயிரம் பேர் விண்ணப்பம் ஏற்கப்பட்டது. இவர்க ளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடந்தது.

    தேர்வுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 13, மாகியில் 5 மற்றும் ஏனாமில் 8 என மொத்தம் 133 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு பணியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    தேர்வர்கள் தங்கள் நுழைவு சீட்டில் அவர்களது மார்பளவு பாஸ்போர்ட் புகைபடத்தை ஓட்டி கையொப்பமிட்டு கொண்டு வர அறிவுருத்தப்பட்டி ருந்தது. மைய நுழைவு வாயிலில் நுழைவு சீட்டு உள்ளோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு அலுவலர்கள் நுழைவு சீட்டுடன் தேர்வர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வருமான வரி, பான் கார்டு ஆகிய வற்றுள் ஒன்றின் அசலையும் கேட்டு பெற்று உறுதி செய்தனர்.

    தேர்வர்கள் கைப்பைகளை வெளி யில் விட்டு வர அறிவுருத்தப்பட்டனர். கைபேசி, புளு டூத் சாதனங்கள், ஹெட் போன்கள், கால்குலேட்டர்கள், பென் டிரைவ் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வர்களிடம் இவை ஏதும் உள்ளதா? என சோதனை செய்தனர்.

    கருப்பு வண்ண பால்பாயிண்ட் பேனா, நுழைவு சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை ஆகியவை மட்டுமே தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

    சரியாக காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கிய வுடன் மையத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டது. அதற்கு பின் காலதாம தமாக வந்தவர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

    அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 12 மணிக்கு தேர்வு முடிந்தது. விண்ணப்பித்த வர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர்.

    தேர்வு நேர்மையாக நடத்தப்பட்டு மெரிட் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலை அருகே மவுன போராட்டம் நடந்தது.
    • கையிலும், வாயிலும் கறுப்பு துணி கட்டியிருந்தனர்.

    புதுச்சேரி:

    மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத மத்திய மோடி அரசையும் மற்றும் மாநில பா.ஜனதா அரசையும் பதவி விலக வலியுறுத்தி புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலை அருகே மவுன போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுவை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாநில பொதுச்செயலாளர் தனுசு, திருமுருகன் இளையராஜா, வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன, மாநில செயலாளர் செந்தில், சந்திரிகா மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ரத்னா, பேபி, எழில், ஜெயலட்சுமி பானு வரலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

    இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பெருமாள், குருமூர்த்தி, சத்யநாராயணன், பிரதீப், விக்னேஷ், சித்தீக், முகிலன், தமிழரசன், மனோஜ், ராஜ் கெனேடி, வினோத், ஜனா, மாவட்ட நிர்வாகிகள் பிரவீன், கார்த்திகேயன், பாலா, விக்னேஷ், தொகுதி நிர்வாகிகள் கண்ணன், ராஜேஷ், சுகல், உதயா, மாறன், ஹரீஷ், நௌபல், பாலாஜி, அந்த்வான், சூரியா, அத்வானி, ஆகாஷ் உள்ளிட்ட இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மற்றும் மணிப்பூர் மாநில முதல் அமைச்சரை கண்டித்தும் பதாகைகள் வைத்திருந்தனர். கையிலும், வாயிலும் கறுப்பு துணி கட்டியிருந்தனர்.

    காமராஜர் சிலை முன்பு இளைஞர் காங்கிரசார் பதாகை ஏந்தி வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்திய காட்சி

    • மின் கம்பி அறுந்து கொடி கம்பியில் விழுந்ததை தனம் கவனிக்காததால் அவரை மின்சாரம் தாக்கியது.
    • அவரது மகள் பிரியதர்ஷினி மற்றும் காந்தலட்சுமி ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு அருகே கரசூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வீரம்மாள் (வயது 43) கணவன்-மனைவி இருவரும் சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று வீரம்மாள் குடியிருக்கும் பகுதியில் வசிக்கும் தனம் என்பவர் கொடியில் துணி காயவைக்க முயன்றார்.அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து கொடி கம்பியில் விழுந்ததை தனம் கவனிக்காததால் அவரை மின்சாரம் தாக்கியது.

    இதனால் தனம் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு அவரது மகள் பிரியதர்ஷினி ஓடி வந்து தாயை காப்பாற்ற முயன்ற போது அவரையும் மின் சாரம் தாக்கியது.

    இதனை பார்த்த வீரம்மாள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த காந்தலட்சுமி ஆகியோர் பதறியடித்து ஓடிவந்த போது அவர்கள் மீது அறுந்து கிடந்த மின் கம்பி விழுந்ததில் அவர்களையும் மின்சாரம் தாக்கியது.

    இதில் படுகாயமடைந்த 4 பேரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தனம் அவரது மகள் பிரியதர்ஷினி மற்றும் காந்தலட்சுமி ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வீரம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி  வீரம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது கணவர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆண்டுதோறும் தை மாதத்தில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • மூலநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    புதுச்சேரி:

    பாகூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ மூலநாதர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆற்றுத் திருவிழா அன்று சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் பாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுவாமிகள் மேளதாளத்துடன் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆற்றில் 5 அஸ்திரங்களுக்கும் தீர்த்தவாரி நடைபெற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.

    பின்னர் ஆற்றங்கரையில் அருகே ஸ்ரீ மூலநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த நிலையில் சோரியாங்குப்பம் பகுதியில் விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை மண்டபம் வழியாக செல்ல வேண்டி இருந்ததால் அந்த கருங்கற்களால் ஆன மண்டபத்தை அகற்றி அதன் அருகில் உள்ள இடத்தில் புதிய மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

    இந்த பூமி பூஜையை பாகூர் தாசில்தார் பிரிதிவ், நிர்வாக அதிகாரி பாலமுருகன், ஆலய அர்ச்சகர், மணியகார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை பணியை தொடங்கி வைத்தனர். ஆனால் இதுவரை அம்மண்டபம் அகற்றப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அரியாங்குப்பம் மாதாகோவில் அருகே பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர்.

    அவர் சட்டைபையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தை போலீசார் கண்டனர். மொத்தம் 125 கிராம் கஞ்சா வைத்திருந்தார்.

    கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அரியாங்குப்பம் மணவெளி ராஜபிரியா நகரை சேர்ந்த அப்துல் கலாம் (வயது 20) என்பதும் இவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • 3 நாதஸ்வரம், மற்றும் முடி திருத்துவதற்கான சுழற்நாற்காலியுடன் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பத்துக்கண்ணு ஊசுடு எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 15 இஸ்திரிப்பட்டி, 10 தவில், 3 நாதஸ்வரம், மற்றும் முடி திருத்துவதற்கான சுழற்நாற்காலியுடன் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் சாய் தியாகராஜன், ஆதிதிராவிடர் பொறுப்பாளர் ஜெகதலபிரதாபன் மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள், கமிட்டி நிர்வாகிகள், ஓபிசி அணி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×