என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி:
புதுவையில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் அரியாங்குப்பம் மாதாகோவில் அருகே பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர்.
அவர் சட்டைபையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தை போலீசார் கண்டனர். மொத்தம் 125 கிராம் கஞ்சா வைத்திருந்தார்.
கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அரியாங்குப்பம் மணவெளி ராஜபிரியா நகரை சேர்ந்த அப்துல் கலாம் (வயது 20) என்பதும் இவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.






