என் மலர்
புதுச்சேரி
- சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
- பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக் கிழமை தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரி சையாக நடைபெறவுள்ளது.
அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், ஆடி பூரத்தை முன்னிட்டும், நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்கா லில் குவிந்தனர். அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை கள் செய்து சாமிதரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- கோரிமேடு பகுதியில் மதுகுடித்து வாகனம் ஓட்டி வந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்களை கண்டறிய சோதனைகளை தீவிரப்படுத்த உள்ளோம்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக விபத்துகள் நடந்து வருகின்றன. போதையில் வாகனங்களை ஓட்டுவதால் உயிர் சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கபோலீசார் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் புதுச்சேரி நகரப்பகுதியான புஸ்சி வீதி, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் கேமராவுடன் கூடிய, மதுகுடித்திருப்பதை கண்டறியும் நவீன கருவி மூலமாக சோதனை நடத்தினார்கள். இதில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இது போல் கோரிமேடு பகுதியில் மதுகுடித்து வாகனம் ஓட்டி வந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் கிருமாம்பாக்கம் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 15 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திர குமார் யாதவ் கூறியதாவது:-
வார இறுதி விடுமுறை நாட்களில் புதுவைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள்வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவ்வாறு 10 இடங்களை கண்டறிந்துள்ளோம். அனைவரும் போக்குவரத்து விதிகளை மதிக்கவேண்டும்.
நாங்கள் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், புதுவை உள்ளூர் மக்கள் என அனைவரையும் சமமாக தான் பார்க்கிறோம். விதிமுறைகளைமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கிறோம்.
குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்களை கண்டறிய சோதனைகளை தீவிரப்படுத்த உள்ளோம். அவர்களுக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேர், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் தலா ரூ.2 கோடி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியேற்றவுடன் அறிவித்தார். அதன்படி கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 33 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக மேலும் ரூ.40 கோடியே 59 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.1 கோடியே 23 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவினை உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் கார்த்திகேசன் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும் புதுவையில் அண்ணாதிடல், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காகவும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது நூலக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
- கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் கவிஞர் வாணிதாசன் 109-வது பிறந்தநாள் விழா சேலியமேட்டில் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி சேலியமேடு பகுதியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் ரூ. 17 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த நூலகத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சந்திர பிரியங்கா, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்த நூலகத்தில் சிறப்பு அம்சங்களான அரவிந்தர் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கான புதிய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான புத்தகத் தனிப்பிரிவு, வேலை வாய்ப்புக்கான தனிப்பிரிவு, செய்தித்தாளுக்கு தனிப்பிரிவு என்ன பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது நூலக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் கண்காணிப்பாளர் அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவுக்கான ஏற்பாடு களை கலை பண்பாட்டு துறை நூலகப் பிரிவு திருமாறன் செய்திருந்தார். பின்னர் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் கவிஞர் வாணிதாசன் 109-வது பிறந்தநாள் விழா சேலியமேட்டில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவரது நினைவிடத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
- வெட்டுப்பட்ட நபர் அலறியடித்து சத்தம் போடவே அவர் காமேஷின் அண்ணன் கதிர் என்பது தெரியவந்தது.
- வெட்டுப்பட்ட நபர் அலறியடித்து சத்தம் போடவே அவர் காமேஷின் அண்ணன் கதிர் என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரசூரில் புத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது. நேற்று இரவு இந்தக் கோயில் திருவிழாவையொட்டி தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது.
அப்போது பிரபல ரவுடியான மணி என்ற மாருமணியின் மைத்துனர் சின்ன அய்யப்பனுக்கும் காமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் காமேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சின்ன அய்யப்பனை சரமாரியாக தாக்கியதில் சின்ன ஐயப்பனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மருத்துவமனையில் இருந்து இன்று அதிகாலை வந்த சின்ன அய்யப்பன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொண்டு காமேசை கொலை செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றார்.
அங்கு போர்வையை போர்த்தி தூங்கிய நபர் காமேஷ் தான் என்பதை என்னி சின்ன அய்யப்பனும் அவரது கூட்டாளிகளும் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தலை கழுத்து கை உள்பட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். வெட்டுப்பட்ட நபர் அலறியடித்து சத்தம் போடவே அவர் காமேஷின் அண்ணன் கதிர் என்பது தெரியவந்தது.
ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தது கதிர் என்பதை உணர்ந்த சின்ன அய்யப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கதிர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொ ள்ளப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர்.
வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சின்ன ஐயப்பனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சின்ன அய்யப்பனும் பிரபல ரவுடி ஆவார். திருவிழாவில் நடந்த பிரச்சினையால் ஆள் மாறாட்டத்தில் வாலிபருக்கு சரமாரி விட்டு விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு பதட்டமான சூழல் வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
- மகளிர் காங்கிரசார் போராட்டத்தினை கைவிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில மகளிர் காங்கிரசின் சார்பில் லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்ச காந்தி தலைமை தாங்கினார்.
துணை தலைவிகள் ஜெயலட்சுமி, விஜி, நிஷா, பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதுபோல் நேற்று மாலை கொக்கு பார்க் அருகே மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து மகளிர் காங்கிரசார் போராட்ட த்தினை கைவிட்டனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை நகர கமிட்டி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்திவீதி, ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், கிளை செயலாளர்கள் ஸ்டாலின், ஆனந்த், ராமு, பாரி, கமிட்டி உறுப்பினர்கள் வீரா, ரஞ்சித், மணவாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- போக்குவரத்து சிக்னலை சீரமைத்து செயல்பட வைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வந்தனர்.
- அடிக்கடி இந்த சிக்னல் பழுதாகி வருவதால் தரமான மதர்போர்டு அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் தங்களது கடமையை சரிவர செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி-கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரியாங்குப்பம் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள கோட்டைமேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் பழுதாகி காட்சி பொருளாக உள்ளது.
இதனால் போக்குவரத்தை சீரமைக்க தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இந்த பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.
எனவே இந்த போக்குவரத்து சிக்னலை சீரமைத்து செயல்பட வைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அரியாங்குப்பத்தில் நூதன போராட்டம் நடைபெற்றது.
அமைப்பாளர் தீனா தலைமையில் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் துணை அமைப்பாளர் கர்ணா, ஒருங்கிணைப்பாளர் சந்திரன் மற்றும் பாரதி, வடிவேல், பரத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதில் அடிக்கடி இந்த சிக்னல் பழுதாகி வருவதால் தரமான மதர்போர்டு அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் தங்களது கடமையை சரிவர செய்ய வேண்டும்.
இதில் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கிறார்
- உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜ.க. மாநில துணை தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
விழுப்புரம் மண்டல தலைவர் இளவரசன் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு புதுவை மாநில பி.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் ஆசைத்தம்பி, மாநில செயலாளர் சிவக்குமார், பொதுச் செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் வீரமணி, ஆறுமுகம், கணேசன், நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வகிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பி.எம்.எஸ் சங்க தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் மற்றும் பேரவை தலைவருமான விமேஸ்வரன், மாநில செயலாளர் சி.எஸ் முருகன் ஆகியோர் சங்க கொடி ஏற்றி சிறப்புரையா ற்றுகின்றனர். இந்நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தின ர்களாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜ.க. மாநில துணை தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்க ண்ணன், முதலியார் பேட்டை பொறுப்பாளர் செல்வகணபதி, மாநில வணிக பிரிவு தலைவர் சத்யராஜ், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், முதலியார்பேட்டை தொகுதி தலைவர் இன்பசேகரன், உப்பளம் தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் சக்திவேல், ரவிச்சந்திரன், ஜெயரட்சகன், வெங்கடேஷ், கருணாநிதி, கார்த்திகேயன் சேகர் ஆகியோர் பங்கேற்கின்றனர். பணிமனை செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசுகிறார். பணிமனை தலைவர் ராஜசேகரன் நன்றி உரையாற்றுகிறார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் ஆண்டு விழா -விளையாட்டு மற்றும் கலை திருவிழா கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் டீன் . பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். இயக்குனர் (பொறுப்பு) ஆன்ட்ரூ ஜான் வரவேற்று பேசினார் மற்றும் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் கே.பி.ஒய். வினோத், பாலா மற்றும் புதுச்சேரி ஒலிம்பிக் அசோசியேஷன் தலைமை நிர்வாகி முத்துகேசவலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு விருந்தினர்களுக்கு டீன். டாக்டர் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
பிறகு விஜய் டிவி புகழ் பாலா மற்றும் வினோத் இருவரும் இணைந்து கலை நிகழ்ச்சியை நடத்தினர் . விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிக்கு வெற்றி சுழற்கோப்பை வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி திரு.சந்துரு, நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சவீதா, ஐயம்மா மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, அனிதா, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு வர்தன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் தாக்கு
- தேர்தலில் வாக்கு பெற கடன் வாங்கிய பணத்தை வறுமை ஒழிப்பு என்ற பெயரில் அரசு வீணடிக்கிறது. உண்மையான ஏழைகளுக்கு மட்டும் உதவிகள் செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 17-ந் தேதி இந்திய அரசின் நிதி ஆயோக் இந்திய வறுமை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புதுவையில் கிராமப்புற வறுமை 78.7 சதவீதம் ஆகவும், நகர்ப்புற வறுமை 7.14 சதவீதமாகவும் குறைந்துள்ளது. வறுமையை 2030-க்கு முன்பாக பாதியாக குறைக்க வேண்டும் என்ற இலக்கை புதுவை அடைந்து விட்டது. வறுமையை புதுவை வென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக புதுவை அரசு அதிக வறுமை இருப்பதாக அனுமானம் செய்து கொண்டு தனது திட்டங்களில் அரசின் நிதியை வீணாக்குகிறது.
புதுவையில் 54 சதவீத குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சிகப்பு ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள் எல்லாம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வர்களாக தீர்மானிக்கப் பட்டுள்ளனர்.
புதுவையில் 3 லட்சத்து 58 ஆயிரத்த 644 குடும்பங்கள் உள்ளன. அதில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 825 குடும்பங்கள் அரசு நேரடி பணம் அளிக்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர்
யூனியன் பிரதேசத்தில் பாதி மக்கள் தொகை வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக தெரிகிறது. இந்த முரண்பாடுக்கு காரணம் இதுவரை முறைப்படி தொழில்நுட்ப ரீதியாக ஒரு ஆய்வை நடத்தி புதுவையின் வறுமை நிலையை அரசு கண்டறியவில்லை.
தேர்தலில் வாக்கு பெற கடன் வாங்கிய பணத்தை வறுமை ஒழிப்பு என்ற பெயரில் அரசு வீணடிக்கிறது. உண்மையான ஏழைகளுக்கு மட்டும் உதவிகள் செய்ய வேண்டும்.
வசதி படைத்தவர்களுக்கு அரசு பணத்தை வீணாக்குவது சரியல்ல. இந்த முரண்பாடை துணிச்சலாக களைய வேண்டும்.
இதைத் தவிர்த்து தன் சொந்த நலனுக்காக ஆட்சியில் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காக பொது மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து புதுவை அரசையும், அரசியலையும் பாழ்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
- கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.
புதுவையில் உள்ள ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு போதிய பேராசிரியர்கள், நூலகம், ஆய்வக வசதிகள் இல்லை என பலவித புகார்கள் எழுந்து வருகிறது.
மேலும் மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு தேவையான அல்ட்ரா சவுண்ட் பயன்பாடு குறித்த வகுப்புகள் எடுக்க பேராசிரியர்கள் இல்லை. இதுகுறித்து மாணவர்களும் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனையறிந்த கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் அல்ட்ரா சவுண்ட் வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் நான் சிறப்பு நிபுணர்.
எனவே அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கான நேரத்தை ஒதுக்கி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளேன்.
என் பணி புதுவை மக்கள் மீது அன்பு வைத்து செய்யும் பணி. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் தற்போது சொல்ல முடியாது. நான் தற்போது கவர்னர். அந்த பணியை செய்து வருகிறேன். நான் போட்டியிடுவதை ஆண்டவரும், ஆண்டுகொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நகர அமைப்பு குழும அதிகாரிகள் நடவடிக்கை
- கோவில் இடத்தில் வீடு கட்ட ஆன்லைன் மூலம் 2 கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போ நகரில் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து விற்ற வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பதிவாளர் உட்பட 15 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கோவில் இடத்துக்கு மனை வரைமுறை அனுமதி, அங்கு கட்டப்படும் வீட்டுக்கான அனுமதி குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையறிந்து புதுவை நகர அமைப்பு குழும அதிகாரிகளும் அங்க சென்று எந்த வீடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்தனர்.
கோவில் இடத்தில் வீடு கட்ட ஆன்லைன் மூலம் 2 கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 4 கட்டிடங்களுக்கு நகராட்சி வரி செலுத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து நகர அமைப்பு குழும அதிகாரிகள் நகராட்சி வரியை பெற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். 2 கட்டிடத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யவும் நடவடிக்க எடுத்து வருகின்றனர்.
சட்ட ஆலோசனைக்கு பரிந்துரை செய்யாமல், ஆன்லைன் மூலம் நேரடியாக அனுமதி வழங்கியதால் உறுப்பினர் நகர அமைப்பு குழும அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர்.






