search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு

    • கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேர், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் தலா ரூ.2 கோடி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியேற்றவுடன் அறிவித்தார். அதன்படி கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 33 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக மேலும் ரூ.40 கோடியே 59 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.1 கோடியே 23 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவினை உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் கார்த்திகேசன் தெரிவித்துள்ளார்.

    இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும் புதுவையில் அண்ணாதிடல், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காகவும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×