என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தேசிய சுகாதார ஆணையத்தில் வையாபுரி மணிகண்டன் புகார்
    • புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் புதுவையை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் தரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும் , முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் தேசிய சுகாதார பணி யாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஜிப்மரில் குரூப் டி பிரிவில் சுகாதார பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர்.

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஜிப்மரில் 500 சுகாதார பணியாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது.

    இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்ட்டதால் ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்களில் பலர் வேலை இழந்துள்ளனர்.

    புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் புதுவையை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் தரவில்லை.

    புதிதாக தேர்வு செய்யப்படும் தொழிலா ளர்கள் ரூ. 1 லட்சம் கட்டாயம் நன்கொடை தர வேண்டும் என நிர்பந்திக்கப் படுகின்றனர். இந்த முறைகேடு குறித்து தேசிய சுகாதார பணியாளர்கள் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    ஜிப்மர் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்தின் தகுதி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் குற்றச்சாட்டு
    • கால தாமதத்தால் பல நிறுவனங்கள் புதுவை மாநிலத்தை விட்டு வெளி யேறும் நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆபத்தில் இருக்கும் குடிமக்களை மீட்க எப்போதும் தயாராக தீயணைப்பு துறை இருக்க வேண்டும்.

    இந்நிலை மாறி மக்களுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் துறையாக மாறி வருகிறது. கட்டிடங்களுக்கு அனுமதி தரும் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சுயநலமாக செயல்படுகின்றனர். தொழில் தொடங்க அனைத்து துறை அனுமதி கொடுத்தாலும் தீயணைப்பு துறை இழுத்தடிக்கிறது.

    கால தாமதத்தால் பல நிறுவனங்கள் புதுவை மாநிலத்தை விட்டு வெளி யேறும் நிலை உள்ளது.

    பல கட்டிடங்கள் கட்டப்பட்டு அனுமதி வழங்கப்படாததால் திறக்கப்படாமல் உள்ளது. கட்டிட அளவை மீறி உபகரணங்கள், அவர்கள் கூறும் நிறுவனத்தில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.

    கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுத்து தீயணைப்பு துறையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நட வடிக்கை எடுக்கா விட்டால் தீயணைப்பு துறை முன்பு போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • என்.ஆர். இலக்கிய பேரவை வலியுறுத்தல்
    • பொதுமக்கள் மட்டுமின்றி, இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் பெரும் நன்மை உண்டாகும் என்பது நிதர்சன உண்மை.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது 133 பணிகள் ரூ. 930 கோடி நிதியில் நடைபெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

    புதுச்சேரி பஸ் நிலையம், அண்ணா திடல், பெரிய மார்க்கெட், பழைய ஜெயில் போன்ற இடங்கள் இத்திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்று, நமது புதுச்சேரி மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிப்பதாகும்.

    இந்த மத்திய அரசின் திட்டம் நமது புதுச்சேரி மாநிலத்திற்கு ஒரு வரப் பிரசாதம் என்றே கூறலாம். இதன் மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி, இங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும் பெரும் நன்மை உண்டாகும் என்பது நிதர்சன உண்மை.

    ஆனால், இதற்கு முன் மாநில அரசால் தொடரப்பட்ட பல பணிகளும், தற்போது ஸ்மார்ட் சிட்டி மூலம் பணி நடைபெற்று வரும் ரூ.12 கோடியே 19 லட்சம் மதிப்பிலான, அண்ணா திடல் பணிகளும் தாமதமானதை முன் உதாரணமாகக் காட்டி, மேற்கண்ட புதிய பணிகளும் தாமதமாகும் என வியூகத்தின் பேரில், வியாபாரம் பாதிக்கும் என்று வியாபாரிகள் போராட்டம் உள்ளிட்டவை நடத்தி திட்டப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவது வருந்தத்தக்கதாக உள்ளது.

    இந்த திட்டங்கள் நிறைவு பெற்றால், நீண்ட காலத்திற்கு, தற்போதிருப்பதை விட சிறப்பாக வியாபாரம் செய்ய முடியும், வருங்கால சந்ததியினரும் பயனடைவார்கள் என்பதை வியாபாரிகள் சிந்திக்க வேண்டும்.

    புதுவை நகரப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது தகராறுகள் ஏற்படுவதால் பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெரிய மார்க்கெட் கட்டுமான பணி தொடர்பாகவும் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் இழுபறி நிலையே நீடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எனவே, புதுச்சேரி மாநிலத்திற்கு நீண்ட காலத் தீர்வாக, பல்வேறு நன்மைகளை உருவாக்கும் நல்லதொரு மத்திய அரசின் திட்டம் நிறைவேற, வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பா.ஜனதா வலியுறுத்தல்
    • நகராட்சியால் கட்டப்பட்டுள்ள முருங்கப்பாக்கம் மார்க்கெட் செயல்படாமல் உள்ளதே முக்கிய காரணமாக உள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-

    புதுச்சேரி- கடலூர் சாலையில் இருந்து கொம்பாக்கம் செல்லும் முருங்கப்பாக்கம் சந்திப்பில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு புதுச்சேரி நகராட்சியால் கட்டப்பட்டுள்ள முருங்கப்பாக்கம் மார்க்கெட் செயல்படாமல் உள்ளதே முக்கிய காரணமாக உள்ளது.

    மார்க்கெட்டில் மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் வியாபாரிகள் கொம்பாக்கம் சாலை ஓரத்தில் கடைகளை வைத்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நகராட்சி அதிகாரிகளின் பொறுபபற்ற செயலால் முருங்கப்பாக்கம் பகுதி மக்கள் மட்டுமின்றி கொம்பாக்கம் வழியாக செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே முருங்கப்பாக்கம் மார்க்கெட்டை சீரமைத்து மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்து. சாலையோர வியாபாரிகளை மார்க் கெட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    • வேலை செய்வதற்கு உண்டான சூழல் எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.
    • முகாமில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூாரி மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில் சென்னை சைடஸ்பெக்டரம் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் சைட்ஸ் பெக்ட்ரம் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவன மனிதவள துறை மேலாளர் ரமேஷ், அதிகாரி ஜோஸ்வின், விற்பனை துறை மேலாளர் கிரிஷ் ஆகியோர் நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல் எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து குழு கலந்துரையாடல் நேர்காணல் மற்றும் வேலைவாயப்பு முகாம் நடந்தது.

    மணக்கு விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூாரி மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் பேராசிரியர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை.
    • போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய சந்திப்புகளில் நின்று கொண்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஹெல்மெட் அணியாதது, வேகமாக செல்வது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு அபராதம் வசூலிக்கின்றனர்.

    வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனம் ஓட்டி வந்தால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்கிறார்கள். அந்த அபராதத்தை அவர்கள் உடனடியாக செலுத்துகின்றனர்.

    போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை. அவர்களிடம் 'கூகுள் பே' மூலம் பணத்தை செலுத்துமாறு போலீசார் வசூலித்து வருகின்றனர்.

    ஆனால் அதற்குரிய ரசீது வழங்குவதில்லை. அந்த பணத்தை போலீசார் தங்களது உறவினர்களின் 'கூகுள் பே' செல்போன் நம்பரில் பெற்று மோசடி செய்வது தற்போது அம்பலமாகியுள்ளது.

    சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் கடந்த மே மாதம் 9-ந்தேதி தனது குடும்பத்துடன் காரில் புதுவை ராஜீவ்காந்தி சிக்னல் அருகே சென்றபோது, போக்குவரத்து சிக்னலை மீறிவிட்டதாக அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், கூகுள் பே மூலம் ரூ.500 வசூலித்துள்ளார். ஆனால் அதற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படவில்லை

    இதனால் சந்தேகம் அடைந்த முரளிதரன், போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் செய்தார். இதுபற்றி சம்பந்தப்பட்ட கூகுள் பே எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், போக்குவரத்து போலீஸ்காரர் வசூலித்த அபராத பணம் தனிப்பட்ட நபருக்கு சென்றது தெரியவந்தது.

    அந்த போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான புதுவை சார்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    இதே போல் மேலும் பல சுற்றுலா பயணிகளிடம் போக்குவரத்து போலீசார் சிலர் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் பணம் வசூலித்த போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
    • நிலத்துக்கும் அனுமதி கிடைத்துள்ளது. திருத்திய பட்ஜெட்டில் ரூ.ஆயிரத்து 400 கோடிக்கு மேல் மத்திய அரசு கொடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    இந்திய தொழிலங்கள் கூட்டமைப்பின் தெற்கு மண்டலம் சார்பில் சிறு, குறு தொழிற்சாலைகளின் திறன் மேம்பாட்டு திட்டம் தனியார் ஒட்டலில் நடந்தது. திட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி கூறிய பெஸ்ட் புதுவையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் முனைவோருக்கு 2017-ல் தர வேண்டிய ஊக்கத்தொககை ரூ.30 கோடி அளித்துள்ளோம். சேதராப்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்திய 750 ஏக்கர் நிலத்தை தொழில் முனைவோருக்கு தர மத்திய அரசு அனுமதி யளித்துள்ளது. 2016-17-ல் தொழில்கொள்கை உருவாக்கப்பட்டு, சில அரசாணைகள் வெளியிட ப்பட்டது.

    மீதமுள்ள முத்திரை த்தாள், மின்கட்டணம், ஜி.எஸ்.டி. விலக்கு, சலுகை தர அரசாணை வெளியிட ப்படும். புதுவையில் தொழில்புரட்சி ஏற்படும். சிறு, குறு தொழில்கள் தொடங்க அரசு அனுமதி தேவையில்லை. 3 ஆண்டுக்கு பின் அனுமதி பெற்றால் போதும் என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். இதற்கான அரசாணையும் வெளியிடப்படும். புதிய தொழில்பூங்கா, ஐ.டி நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.

    ஏ.எப்.டி. வளாகத்தில் ஜவுளி பூங்கா அல்லது சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கி பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கவர்னர் பரிந்துரைத்துள்ளார். இந்த ஆண்டு நடைமுறை ப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும். இவ்விவகாரத்தில் மாநில அரசு அரசாணை வெளி யிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒது க்கீடு அமல்படுத்தமுடியுமா? என சட்டத்துறையிடம் கருத்து கேட்கப்படும்.

    இது தொடர்பான கோப்பை மத்திய அரசுக்கு எப்போது அனுப்பினார் என்பது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமிக்குத்தான் தெரியும். அது எங்கு கிடப்பில் உள்ளது என கூறினால் அதை பின்தொடர சவுகரியமாக இருக்கும். மத்திய அரசு தற்போது அனைத்து விஷயங்களையும் செய்து தருகிறது. பல காலமாக கிடப்பில் போடப்பட்ட கோப்புகளுக்கு கூட மத்திய அரசு அனுமதி தருகிறது.

    மாணவர் உள் ஒதுக்கீடு கோப்பு இருந்தால் அதற்கு அனுமதி வாங்குவது பெரிய விஷயம் இல்லை. பட்டானூர் நிலத்தை விற்க நாராயணசாமி அனுமதி கேட்டார். அது கிடைக்கவில்லை. எங்கள் ஆட்சியில் அனுமதி கிடைத்துள்ளது.

    சேதராப்பட்டு நிலத்துக்கும் அனுமதி கிடைத்துள்ளது. திருத்திய பட்ஜெட்டில் ரூ.ஆயிரத்து 400 கோடிக்கு மேல் மத்திய அரசு கொடுத்துள்ளது.

    இதுவரை இப்படி பணம் வாங்கியது கிடையாது. மத்திய அரசு இப்போது அளிக்கிறது. தேசிய பஞ்சாலைக்ககழகம் சுதேசி, பாரதி பல்கலை அரசே பெற அசலும், வட்டியும் கோரினர். மத்திய அரசை நாடினோம். இதையடுத்து ரூ.37 கோடி அசல் மட்டும் தந்தால் போதும் என ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் ரூ.29 கோடி ஒதுக்கியுள்ளோம். இந்த நிதியை கொடுத்துவிட்டு, மீதியை அடுத்து தருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வடக்கு பகுதியில் கடைகளுக்கு நடுவே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். ‌

    புதுச்சேரி:

    புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனையில் 4 வழி சாலை மற்றும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

    சாலையின் வடக்கு பகுதியில் கடைகளுக்கு நடுவே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

    அதேபோல் சாலையின் தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் சாராயக்கடை உள்ளது. இதன் அருகில் தற்போது பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக கட்டுமான பொருட்களை வைத்து ஊழியர்கள் பயணியர் நிழற்குடை கட்டி வருகிறார்கள். பயணியர் நிழற்குடை பின்புறம் சாராயக்கடை இருப்பதால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பஸ் பயணிகள் இந்த இடத்தில் நின்று பஸ்சுக்காக காத்திருக்கும் போது மது பிரியர்களின் தொந்தரவு காரணமாக பல்வேறு பிரச்சனைகள் எழும் நிலை உள்ளது.

    எனவே சாராயக்கடை அருகில் பயணியர் நிழற்குடை அமைக்க அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சாராயக்கடையை அங்கிருந்து அகற்றி வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். 

    • வாலிபர் மீது தாக்குதல்-வீடு சூறை
    • காயமடைந்த விஜயை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே நல்லூர் பகுதியில் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியை யொட்டி இரவு தெருக்கூத்து நடைபெற்றது.

    இதனை அதே பகுதியை சேர்ந்த ஏழையப்பன் என்பவரின் மகன் விஜய் பார்க்க சென்றார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரதாப் ஆகியோர் விஜயை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த விஜயை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து ஏழையப்பன் திருபுவனை போலிசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே விஜயை தாக்கியதை பற்றி அறிந்த அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்து சுரேஷின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு சுரேஷ் இல்லாததால் ஆவேசமடைந்த அவர்கள் சுரேஷ் வீட்டின் கதவு, ஜன்னல் களை உடைத்து விட்டு சென்று விட்டனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20-ந் தேதி நடைபெற்று வருகிறது.
    • கவிஞர் ஆனந்த ராசன், தொழிலதிபர் பொற்செழியன், இளங்கோவன், ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20-ந் தேதி நடைபெற்று வருகிறது.

    அதுபோல் இந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.

    நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து, செயலர் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம்,ஆட்சிக்குழு உறுப்பினர் தமிழ்மாமணி உசேன், ராஜா, என்ஜினீயர் சுரேசு குமார், சிவேந்திரன், கவிஞர் ஆனந்த ராசன், தொழிலதிபர் பொற்செழியன், இளங்கோவன், ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போதை அதிக மானதால் அருகில் உள்ள காலி இடத்தில் தூங்கிவிட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    புதுச்சேரி:

    காலாப்பட்டு அருகே பிள்ளைச்சாவடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்கி ருஷ்ணன் (வயது 42) இவர் அங்குள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு பணி முடிந்து முத்துக்கிருஷ்ணன் கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மதுக்கடைக்கு மதுகுடிக்க சென்றார். தனது மோட்டார் சைக்கிளை மதுக்கடை எதிரே நிறுத்திவிட்டு மது குடித்தார். பின்னர் போதை அதிக மானதால் அருகில் உள்ள காலி இடத்தில் தூங்கிவிட்டார்.

    மறுநாள் காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணா மால் திடுக்கிட்டார்.

    யாரோ மர்ம நபர்கள் முத்துக்கிருஷ்ணன் போதையில் படுத்து தூங்கு வதை பயன்படுத்தி அவரது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து முத்துக்கிருஷ்ணன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • 60 லடசத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர்.
    • ப்ராவிடென்ஸ் வணிக வளாகத்தை புகையிலை பயன்பாடு இல்லாத வணிக வளாகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    உலகில் ஆண்டுதோறும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்ப டுவோர்எண்ணிக்கை பெருகி வருகிறது.

    உலக அளவில் புகை யிலை பயன்பாட்டினால் பன்னிரண்டில் ஒருவர் உயிரிழக்கின்றனர். இதனால்60 லடசத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்து வருகின்றனர்.

    இந்தியாவில் 40 சதவீதம் புற்றுநோய் இறப்புகள் புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் புகையிலை பயன்பாட்டை குறைத்து புகையிலை இல்லாத புதுச்சேரியை அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    அதன் ஒரு பகுதியாக ப்ராவிடென்ஸ் வணிக வளாகத்தை புகையிலை பயன்பாடு இல்லாத வணிக வளாகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி இவ்வளாகத்திற்கு வரும் பொதுமக்கள், வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும் புகையிலை பொருட்களை வளாகத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கான சான்றிதழை புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டாக்டர் வெங்கடேஷ், மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் ப்ரொவிடென்ஸ் மால் நிர்வாக இயக்குனர் பிரேம்ராஜாவிடம் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் டாக்டர் சூரியகுமார், மாநில ஆலோசகர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×