search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசாணை மூலம் அமல்படுத்த சட்டதுறையுடன் ஆலோசனை
    X

    தொழிற்சாலைகளின் திறன் மேம்பாட்டு திட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அரசாணை மூலம் அமல்படுத்த சட்டதுறையுடன் ஆலோசனை

    • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
    • நிலத்துக்கும் அனுமதி கிடைத்துள்ளது. திருத்திய பட்ஜெட்டில் ரூ.ஆயிரத்து 400 கோடிக்கு மேல் மத்திய அரசு கொடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    இந்திய தொழிலங்கள் கூட்டமைப்பின் தெற்கு மண்டலம் சார்பில் சிறு, குறு தொழிற்சாலைகளின் திறன் மேம்பாட்டு திட்டம் தனியார் ஒட்டலில் நடந்தது. திட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி கூறிய பெஸ்ட் புதுவையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் முனைவோருக்கு 2017-ல் தர வேண்டிய ஊக்கத்தொககை ரூ.30 கோடி அளித்துள்ளோம். சேதராப்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்திய 750 ஏக்கர் நிலத்தை தொழில் முனைவோருக்கு தர மத்திய அரசு அனுமதி யளித்துள்ளது. 2016-17-ல் தொழில்கொள்கை உருவாக்கப்பட்டு, சில அரசாணைகள் வெளியிட ப்பட்டது.

    மீதமுள்ள முத்திரை த்தாள், மின்கட்டணம், ஜி.எஸ்.டி. விலக்கு, சலுகை தர அரசாணை வெளியிட ப்படும். புதுவையில் தொழில்புரட்சி ஏற்படும். சிறு, குறு தொழில்கள் தொடங்க அரசு அனுமதி தேவையில்லை. 3 ஆண்டுக்கு பின் அனுமதி பெற்றால் போதும் என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். இதற்கான அரசாணையும் வெளியிடப்படும். புதிய தொழில்பூங்கா, ஐ.டி நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.

    ஏ.எப்.டி. வளாகத்தில் ஜவுளி பூங்கா அல்லது சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கி பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கவர்னர் பரிந்துரைத்துள்ளார். இந்த ஆண்டு நடைமுறை ப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும். இவ்விவகாரத்தில் மாநில அரசு அரசாணை வெளி யிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒது க்கீடு அமல்படுத்தமுடியுமா? என சட்டத்துறையிடம் கருத்து கேட்கப்படும்.

    இது தொடர்பான கோப்பை மத்திய அரசுக்கு எப்போது அனுப்பினார் என்பது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமிக்குத்தான் தெரியும். அது எங்கு கிடப்பில் உள்ளது என கூறினால் அதை பின்தொடர சவுகரியமாக இருக்கும். மத்திய அரசு தற்போது அனைத்து விஷயங்களையும் செய்து தருகிறது. பல காலமாக கிடப்பில் போடப்பட்ட கோப்புகளுக்கு கூட மத்திய அரசு அனுமதி தருகிறது.

    மாணவர் உள் ஒதுக்கீடு கோப்பு இருந்தால் அதற்கு அனுமதி வாங்குவது பெரிய விஷயம் இல்லை. பட்டானூர் நிலத்தை விற்க நாராயணசாமி அனுமதி கேட்டார். அது கிடைக்கவில்லை. எங்கள் ஆட்சியில் அனுமதி கிடைத்துள்ளது.

    சேதராப்பட்டு நிலத்துக்கும் அனுமதி கிடைத்துள்ளது. திருத்திய பட்ஜெட்டில் ரூ.ஆயிரத்து 400 கோடிக்கு மேல் மத்திய அரசு கொடுத்துள்ளது.

    இதுவரை இப்படி பணம் வாங்கியது கிடையாது. மத்திய அரசு இப்போது அளிக்கிறது. தேசிய பஞ்சாலைக்ககழகம் சுதேசி, பாரதி பல்கலை அரசே பெற அசலும், வட்டியும் கோரினர். மத்திய அரசை நாடினோம். இதையடுத்து ரூ.37 கோடி அசல் மட்டும் தந்தால் போதும் என ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் ரூ.29 கோடி ஒதுக்கியுள்ளோம். இந்த நிதியை கொடுத்துவிட்டு, மீதியை அடுத்து தருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×