search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜிப்மர் சுகாதார பணியில் புதுவை மாநில இளைஞர்கள் புறக்கணிப்பு
    X

    கோப்பு படம்.

    ஜிப்மர் சுகாதார பணியில் புதுவை மாநில இளைஞர்கள் புறக்கணிப்பு

    • தேசிய சுகாதார ஆணையத்தில் வையாபுரி மணிகண்டன் புகார்
    • புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் புதுவையை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் தரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும் , முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் தேசிய சுகாதார பணி யாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஜிப்மரில் குரூப் டி பிரிவில் சுகாதார பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர்.

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஜிப்மரில் 500 சுகாதார பணியாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது.

    இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்ட்டதால் ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்களில் பலர் வேலை இழந்துள்ளனர்.

    புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் புதுவையை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் தரவில்லை.

    புதிதாக தேர்வு செய்யப்படும் தொழிலா ளர்கள் ரூ. 1 லட்சம் கட்டாயம் நன்கொடை தர வேண்டும் என நிர்பந்திக்கப் படுகின்றனர். இந்த முறைகேடு குறித்து தேசிய சுகாதார பணியாளர்கள் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    ஜிப்மர் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்தின் தகுதி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×