என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ரூ.5.20 லட்சம் மானியம் வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
    • விதைசான்று முகமைக்கு ரூ.51 லட்சம் மானியம், மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.5 1/4 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை பல்வேறு அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    பண்டசோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு திருவருட்பிரகாச வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளி என பெயர் மாற்றவும், ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கும், புதுவை மாநில சமூகநல வாரியத்துக்கு ரூ.6 3/4 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஏனாம் நகராட்சிக்கு ரூ.42 லட்சம் மானியம், ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளிக்கு ரூ.56 லட்சம் மானியம், புதுவை விஸ்வகர்மா சமுதாய ஐந்தொழிலாளர் சங்கத்துக்கு ரூ.2 1/4 லட்சம் மானியம், விதைசான்று முகமைக்கு ரூ.51 லட்சம் மானியம், மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.5 1/4 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    மேலும் வக்பு வாரியத்துக்கு ரூ.30 லட்சம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வரைநிலை மேம்பாட்டு கழக்திற்கு (பாட்கோ) ரூ.2 கோடி மானியம், காரைக்கால் மார்க்கெட் கமிட்டிக்கு ரூ.47 லட்சம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் இலவச அரிசி திட்டத்துக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத இலவச அரிசிக்கு பணம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஜவகர் சிறுவர் இல்லத்துக்கு பகுதிநேர பயிற்றுநர் நியமனம், கரியமாணிக்கம் கிராமத்தில் குடிநீர் மேம்பாட்டு பணி செலவுக்கு ரூ.3.20 கோடி, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ரூ.5.20 லட்சம் மானியம் வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    இலவச அரிசிக்கான பணமாக சிகப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.600 வீதம், 3 மாதத்திற்கு ரூ.ஆயிரத்து 800, மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.300 வீதம் 3 மாதத்திற்கு ரூ.900 பயனாளிகள் வங்கிகணக்கில் விரைவில் செலுத்தப்பட உள்ளது.

    • நேரு வீதி சந்திப்பில் புதுவை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பெண்கள் அமைப்பு சார்பில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதமாக கலவரம் நீடித்து வருகிறது. பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

    புதுவையில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். மணிப்பூர் அரசை டிஸ்மிஸ்ம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி காமராஜர் சிலை, நேரு வீதி சந்திப்பில் புதுவை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் லோகு அய்யப்பன், தமிழர் களம் அழகர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பஷீர், சிவமுருகன், ஜெகன், பன்னீர்செல்வம், முருகன், கிருட்டிணன், ராஜசேகர், முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பெண்கள் அமைப்பு சார்பில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மகளிர் அமைப்பு நிர்வாகி சுதாசுந்தர்ராமன் முன்னிலை வகித்தார். மத்திய அரசையும், மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    புதுவை ஏ.ஐ.டி.யூ.சி. உழைக்கும் பெண்கள் சார்பில் ஜென்மராக்கினி கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் ஹேமலதா மார்க்கெட் சங்க பொறுப்பாளர் லதா தலைமை வகித்தனர் உழைக்கும் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் அமுதவல்லி, அமுதா ,வசந்தி, பைரவி, லலிதா, சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா கவுரவத் தலைவர் அபிஷேகம் மாநில பொருளாளர் அந்தோணி மாநில துணைத்தலைவர் சிவகுருநாதன் மாநில செயலாளர் முத்துராமன் தயாளன் இவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதேபோல மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் வக்கீல் சங்கம் சார்பில் சரவணன் தலைமையில் கடலூர் சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • ஊர்வலம் ஆம்பூர் சாலையில் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் பொறுப்பு முதல்வரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

    அரசு நிதி ரூ.5 லட்சம் முறைகேடு புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காமராஜர் சிலை அருகே பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் திரண்டனர். மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ஊர்வலத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், திராவிடர் விடுதலை கழகம் லோகுஅய்யப்பன், திராவிடர் கழகம் சிவவீரமணி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், தமிழர்களம் அழகர், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், உட்பட தமிழ் தேசிய பேரியக்கம் வேல்சாமி உட்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

    ஊர்வலம் ஆம்பூர் சாலையில் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    • வழக்கம் போல் ஊழியர்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே கரையாம்பத்தூரை அடுத்த பனையடிகுப்பம் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி மக்களுக்கு என துணை ஆரம்ப சுகாதார நிலையம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின்பு டாக்டர் மற்றும் ஊழியர்கள் துணை ஆரம்ப சுகாதார நிலைய த்தை பூட்டிவிட்டு கரையம்புத்தூர் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.

    பின்னர்  வழக்கம் போல் ஊழியர்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வந்தனர்.

    அப்போது கதவை திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கம்ப்யூட்டர் குளுக்கோ மீட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். இதுகுறித்து டாக்டர் கிருத்திகா கொடுத்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் திறமை வாய்ந்த வல்லுனர்களை வைத்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து போட்டி தேர்வை நடத்தி வருகிறது.
    • ஏராளமான மாணவ-மாணவிகள் எழுதினர்

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் மேல்நிலை எழுத்தர் (யூ.டி.சி.) பணிக்கான தேர்வு நாளை மறுநாள்  நடைபெற உள்ளது.

    இத்தேர்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலியார் பேட்டையில் உள்ள விவேகானந்தா கோச்சிங் சென் டரில் இன்று யூ.டி.சி மாதிரி தேர்வு நடைபெற்றது.

    இதனை விவேகானந்தர் கோச்சிங் சென்டர் உரிமையாளர் வி.சி.சி. நாகராஜன் தொடங்கி வைத்தார்.

    இத்தேர்வில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். இது குறித்து விவேகானந்தர் கோச்சிங் சென்டர் உரிமையாளர் நாகராஜன் கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக புதுவை அரசு நடத்தும் வேலை வாய்ப்பு பணிக்குவிவேகானந்தர் கோச்சிங் சென்டரில் திறமை வாய்ந்த வல்லுனர்களை வைத்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து போட்டி தேர்வை நடத்தி வருகிறது.

    எங்களது கோச்சிங் சென்டரில் படித்து பயிற்சி பெற்று தற்போது காவல் துறையில் போலீசார் முதல் உயர் அதிகாரி வரையும் மற்றும் எல்.டி.சி., யூ.டி.சி. தேர்வுகளில் அதிக அளவில் தேர்சி பெற்று அரசின் பல்வேறு துறைகளில் ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

    தற்போது நாளை மறுநாள் நடைபெறும் யூ.டி.சி.தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது புதுவை சென் டக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி உடனிருந்தார்.

    விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் இதுவரை படித்து பயிற்சி பெற்றவர்கள் டி.இ.டி.,சி.டி.இ.டி. தேர்வில் 98 பேரும் 2012-ம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் 48 பேரும் 2015-ம் ஆண்டு நடந்த காவலர் மற்றும் ஐ.ஆர்.பி.என். போலீஸ் தேர்வில் 88 பேரும் அதே ஆண்டில் நடந்த யூ.டி.சி. தேர்வில் 20 பேரும் 2022-ம் ஆண்டு நடந்த போலீஸ் தேர்வில் 78 பேரும் தேர்சி பெற்றனர்.

    இதுவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊர் காவல் படை போட்டித்தேர்வில் விவேகானந்தர் கோச்சிங் சென்டர் மூலம் 672 பேர் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவேகானந்தர் கோச்சிங் சென்டர் 12 முறை சிறந்த கோச்சிங் சென் டருக்கான விருதை பெற்றுள்ளது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காஞ்சி ஸ்ரீ கங்கவராக நதீஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மாலையில் திருவீதி உலா நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா  நடைபெற்றது. ஸ்ரீ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம லக்னத்தில் எழுந்தருளி தேரில் அமர்ந்து அருள் பாலித்தார்.

    தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவிலை சுற்றி வலம் வந்த தேர் மீண்டும் கோவிலை நிறைவடைந்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்ப ட்டதாக தெரிவித்தனர்.
    • விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க என கோஷன் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள வானூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் இருக்கைக்கு பின்புறம் மேல் பகுதியில் இருந்த அம்பேத்கர் புகைப்படம்  முன்தினம் இரவு அகற்றப்பட்டது.

    இதுகுறித்து வானூர் பார் அசோசியேசன் நிர்வாகிகள் நீதிமன்ற நிர்வாகத்திலும் கேட்டபோது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்ப ட்டதாக தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து நேற்று புதுவை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட வக்கீல் சங்கத்தினர், இன்று வக்கீல் சங்கத் தலைவர் ஜானகிராமன் தலைமையில் கோர்ட் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் அகற்றப்பட்ட அம்பேத்கர் படத்தை நிறுவும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், மணிப்பூரில் நடந்த பெண்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க என கோஷன் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்க செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் தியாகராஜன், நிர்வாகிகள் ஹரிஹரன், அழகுமுருகன், தமிழரசன், தட்சிணாமூர்த்தி, திருவேங்கடம், திருவேங்கடம், முருகேசன், அய்யனார், முனுசாமி, ஆறுமுகம் செல்வம், ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார்.
    • விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரே காரில் இன்று அதிகாலை புதுவைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    வழுதாவூர் சாலையில் கார் அதிவேகமாக சென்ற போது மேட்டுப்பாளையத்தில் கே.எஸ்.பி. ரமேஷ் அலுவலகம் அருகே வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலை யோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. மேலும் அருகில் உள்ள மின்கம்பம் மீது மோதியதில் காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாய மடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காரில் பயணம் செய்தவர்களை மீட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக்கலூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதில் காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார். மேலும் திருமூர்த்தி என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படடுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுவையில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த வாரம் புதுவைக்கு சுற்றுலா வந்த சென்னை வாலிபர்கள் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்றனர். இதில் 15-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமானது.

    அதுபோல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புதுவைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்த கார்சாலையோரம் நின்றிருந்த கும்பல் மீது மோதியது. இதில் 4 மீனவ பெண்கள் பலியானார்கள்.

    மது குடித்து விட்டு காரை தாறுமாறாக ஓட்டி செல்வதால் புதுவையில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை போக்குவரத்து போலீசார் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.
    • புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகரில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மோசடி செய்யப்பட்டது.

    இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.

    மேலும் அப்போது மாவட்ட பதிவாளராக இருந்த ரமேஷ், நில அளவைத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே வில்லியனூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலையில் புதுவை மணக்குளவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.

    இதுகுறித்து அக்கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது. அதுபோல் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வானூரிலும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பு மிக்க நிலம் உள்ளது.

    தற்போது அந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மனைகளாக பிரித்து பலர் வீடு கட்டியுள்ளனர். எனவே காவல் துறை நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து உடனே அந்த இடத்தை மீட்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள்- மாணவிகள் வடம் பிடித்து இழுத்தனர்
    • விழாவில் 22-ந் தேதி தெப்பல் உற்சவமும், 23-ந் தேதி விடையாற்றி உற்சவ மும் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாள்தோறும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவு அம்மன் வீதிவுலா நடைபெற்று வந்தது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பெண்கள், மாணவிகள் மட்டும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில் 22-ந் தேதி தெப்பல் உற்சவமும், 23-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற் பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    • ஆணையில் போட்டித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
    • காலாவதியான ஆணை ளை போட்டி தேர்விற்கான பாடத்திட்டங்களாக பரிந்துரைப்பது ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நிர்வாக சீர்கேட்டை உருவாக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை கடந்த 16-2-2023 உதவி யாளர் பதவிக்கு துறை சார்ந்த போட்டித் தேர்வு நடத்த ஆணை வெளியிட்டது. அந்த ஆணையில் போட்டித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த பாடத்திட்டத்தில் 1987-ம் ஆண்டு புதுவை அரசால் வெளியிடப்பட்ட அலுவலக நடைமுறை கையேடு உள்ளடக்கிய தாகும்.

    கடந்த 36 வருடங்களில் மத்திய அரசு சட்ட திட்டம் மற்றும் விதிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து ஆணையாக பிறப்பித்துள்ளது. ஆனால் புதுச்சேரி அரசால் வெளியி டப்பட்ட அலுவலக நடைமுறை கையேட்டில் எந்த விதமான திருத்தங்களோ இன்று வரை செய்யப்பட வில்லை. 36 வருடத்திற்கு முன்பு என்னென்ன சட்ட விதிமுறைகள் இருந்ததோ அதுதான் அதில் குறிப்பிட ப்பட்டுள்ளது.

    கருக்கமாக கூறினால் தற்போது போட்டி தேர்விற்கு கொடுக்கப் பட்ட பாடமான அலுவலக நடைமுறை கையேடு காலா வதியான விதிகள் மற்றும் சட்டத்தை உட் கொண் டுள்ளது. இப்படிப்பட்ட காலாவதியான ஒரு பாடத்திட்டத்தை போட்டி தேர்வுக்கு கொடுத்திருப்பது தேர்வு எழுதுபவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    உதாரணமாக தற்போது நடைமுறையில் உள்ள ஆணையின்படி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வருடத்திற்கு 8 நாட்கள் மட்டுமே தற்காலிக விடுப்பு எடுக்க முடியும். ஆனால் தற்போது போட்டி தேர்வுக்கு பாடத்திட்டமாக குறிப்பிட்டுள்ள அலுவலக நடைமுறை கையேட்டில் வருடத்திற்கு 12நாள் தற்காலிக விடுப்பு எடுக்க லாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு நடை முறை விதிகள் மிகத் தவறாக உள்ளது.

    இத்தகைய செயல் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்துறை செயல் 36 வருடம் பின்தங்கி யுள்ளதை தெளிவாக காட்டுகிறது. காலாவதியான ஆணைகளை போட்டி தேர்விற்கான பாடத்திட்டங்களாக பரிந்து ரைப்பது ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நிர்வாக சீர்கேட்டை உருவாக்கும்.

    ஆதலால் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அலுவலக நடைமுறை கையேட்டை இன்று வரை அமுலில் உள்ள விதிகளை உள்ளடக்கி திருத்தம் செய்து வெளியிட வேண்டும். எனவே அறிவிக்கப்பட்ட துறை சார்ந்த போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல் தலைமை தாங்குகிறார்.
    • புதுவையை சேர்ந்த மக்கள் இலவசமாக தரிசித்து பெருமாள் அனுக்கிரகத்தை பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை வேதபாரதி, பஜனோத்ஷவ கமிட்டி தலைவரும், உழவர்கரை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான சிவசங்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை வேதபாரதி பாரத பண்பாட்டு அமைப்பு சார்பில் வருகிற 23-ந் தேதி சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருமலை திருப்பதி பெருமாளின் ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெற உள்ளது.

    திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல் தலைமை தாங்குகிறார்.

    தாச சாகித்யா புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோத்தமன் முன்னிலை வகிக்கிறார். ஊஞ்சல் சேவையை முன்னிட்டு 22-ந் தேதி (சனிக்கிழமை)இரவே திருமலை திருப்பதி பெருமாள் புதுவைக்கு எழுந்தருளுகிறார். மறுநாள் காலை 9 மணி முதல் சங்கமித்ரா கன்வென்சன் சென்ட ரில் ஊஞ்சல் சேவை தொடங்குகிறது.

    காலை 11 மணி வரை சகஸ்ரநாம பாராயணம், திவ்யநாம சங்கீர்த்தனம், கீர்த்தனைகள் நடக்கிறது.

    தொடர்ந்து காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வேத கோஷம், புஷ்பயாகம், சாற்றுமுறை, நாதஸ்வர சேவையும், பிற்பகல் 12 மணிக்கு மகா ஆரத்தியும் நடை பெறும். ஊஞ்சல் சேவையில் புதுவையை சேர்ந்த மக்கள் இலவசமாக தரிசித்து பெருமாள் அனுக்கிரகத்தை பெறும்படி கேட்டுக் கொள்கிறோம். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

    சேவை நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேதபாரதி செயலளார் வெங்கட்ராமன், தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் பட்டாபிராமன், பொருளாளர் வரதராஜன், துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், வேதராமன், உறுப்பினர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×