என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருமலை திருப்பதி பெருமாள் ஊஞ்சல் உற்சவம்
    X

    சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் வேதபாரதி அமைப்பினர் ஊஞ்சல் உற்சவத்துக்கான அழைப்பிதழை வெளியிட்டனர்.

    திருமலை திருப்பதி பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

    • திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல் தலைமை தாங்குகிறார்.
    • புதுவையை சேர்ந்த மக்கள் இலவசமாக தரிசித்து பெருமாள் அனுக்கிரகத்தை பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை வேதபாரதி, பஜனோத்ஷவ கமிட்டி தலைவரும், உழவர்கரை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான சிவசங்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை வேதபாரதி பாரத பண்பாட்டு அமைப்பு சார்பில் வருகிற 23-ந் தேதி சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருமலை திருப்பதி பெருமாளின் ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெற உள்ளது.

    திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல் தலைமை தாங்குகிறார்.

    தாச சாகித்யா புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோத்தமன் முன்னிலை வகிக்கிறார். ஊஞ்சல் சேவையை முன்னிட்டு 22-ந் தேதி (சனிக்கிழமை)இரவே திருமலை திருப்பதி பெருமாள் புதுவைக்கு எழுந்தருளுகிறார். மறுநாள் காலை 9 மணி முதல் சங்கமித்ரா கன்வென்சன் சென்ட ரில் ஊஞ்சல் சேவை தொடங்குகிறது.

    காலை 11 மணி வரை சகஸ்ரநாம பாராயணம், திவ்யநாம சங்கீர்த்தனம், கீர்த்தனைகள் நடக்கிறது.

    தொடர்ந்து காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வேத கோஷம், புஷ்பயாகம், சாற்றுமுறை, நாதஸ்வர சேவையும், பிற்பகல் 12 மணிக்கு மகா ஆரத்தியும் நடை பெறும். ஊஞ்சல் சேவையில் புதுவையை சேர்ந்த மக்கள் இலவசமாக தரிசித்து பெருமாள் அனுக்கிரகத்தை பெறும்படி கேட்டுக் கொள்கிறோம். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

    சேவை நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேதபாரதி செயலளார் வெங்கட்ராமன், தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் பட்டாபிராமன், பொருளாளர் வரதராஜன், துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், வேதராமன், உறுப்பினர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×