என் மலர்
புதுச்சேரி

திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்ற காட்சி.
கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காஞ்சி ஸ்ரீ கங்கவராக நதீஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மாலையில் திருவீதி உலா நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம லக்னத்தில் எழுந்தருளி தேரில் அமர்ந்து அருள் பாலித்தார்.
தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவிலை சுற்றி வலம் வந்த தேர் மீண்டும் கோவிலை நிறைவடைந்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.






