search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணிப்பூரில் பெண்களுக்கு கொடுமை புதுவையில் போராட்டங்கள்
    X

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ராஜா திரையரங்கம் அருகே அனைத்திந்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    மணிப்பூரில் பெண்களுக்கு கொடுமை புதுவையில் போராட்டங்கள்

    • நேரு வீதி சந்திப்பில் புதுவை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பெண்கள் அமைப்பு சார்பில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதமாக கலவரம் நீடித்து வருகிறது. பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

    புதுவையில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். மணிப்பூர் அரசை டிஸ்மிஸ்ம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி காமராஜர் சிலை, நேரு வீதி சந்திப்பில் புதுவை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் லோகு அய்யப்பன், தமிழர் களம் அழகர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பஷீர், சிவமுருகன், ஜெகன், பன்னீர்செல்வம், முருகன், கிருட்டிணன், ராஜசேகர், முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பெண்கள் அமைப்பு சார்பில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மகளிர் அமைப்பு நிர்வாகி சுதாசுந்தர்ராமன் முன்னிலை வகித்தார். மத்திய அரசையும், மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

    புதுவை ஏ.ஐ.டி.யூ.சி. உழைக்கும் பெண்கள் சார்பில் ஜென்மராக்கினி கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் ஹேமலதா மார்க்கெட் சங்க பொறுப்பாளர் லதா தலைமை வகித்தனர் உழைக்கும் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் அமுதவல்லி, அமுதா ,வசந்தி, பைரவி, லலிதா, சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா கவுரவத் தலைவர் அபிஷேகம் மாநில பொருளாளர் அந்தோணி மாநில துணைத்தலைவர் சிவகுருநாதன் மாநில செயலாளர் முத்துராமன் தயாளன் இவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதேபோல மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் வக்கீல் சங்கம் சார்பில் சரவணன் தலைமையில் கடலூர் சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    Next Story
    ×