என் மலர்
புதுச்சேரி

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் டீன் செந்தில்குமார் பரிசுகள் வழங்கிய காட்சி.
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் ஆண்டு விழா
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் ஆண்டு விழா -விளையாட்டு மற்றும் கலை திருவிழா கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் டீன் . பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். இயக்குனர் (பொறுப்பு) ஆன்ட்ரூ ஜான் வரவேற்று பேசினார் மற்றும் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் கே.பி.ஒய். வினோத், பாலா மற்றும் புதுச்சேரி ஒலிம்பிக் அசோசியேஷன் தலைமை நிர்வாகி முத்துகேசவலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு விருந்தினர்களுக்கு டீன். டாக்டர் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
பிறகு விஜய் டிவி புகழ் பாலா மற்றும் வினோத் இருவரும் இணைந்து கலை நிகழ்ச்சியை நடத்தினர் . விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிக்கு வெற்றி சுழற்கோப்பை வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி திரு.சந்துரு, நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சவீதா, ஐயம்மா மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, அனிதா, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு வர்தன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.






