search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோவில் விழா மோதலில் ஆள்மாறாட்டத்தில் வாலிபருக்கு சரமாரி வெட்டு-பிரபல ரவுடி கைது
    X

    கோப்பு படம்.

    கோவில் விழா மோதலில் ஆள்மாறாட்டத்தில் வாலிபருக்கு சரமாரி வெட்டு-பிரபல ரவுடி கைது

    • வெட்டுப்பட்ட நபர் அலறியடித்து சத்தம் போடவே அவர் காமேஷின் அண்ணன் கதிர் என்பது தெரியவந்தது.
    • வெட்டுப்பட்ட நபர் அலறியடித்து சத்தம் போடவே அவர் காமேஷின் அண்ணன் கதிர் என்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரசூரில் புத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது. நேற்று இரவு இந்தக் கோயில் திருவிழாவையொட்டி தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது பிரபல ரவுடியான மணி என்ற மாருமணியின் மைத்துனர் சின்ன அய்யப்பனுக்கும் காமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் காமேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சின்ன அய்யப்பனை சரமாரியாக தாக்கியதில் சின்ன ஐயப்பனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    மருத்துவமனையில் இருந்து இன்று அதிகாலை வந்த சின்ன அய்யப்பன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொண்டு காமேசை கொலை செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றார்.

    அங்கு போர்வையை போர்த்தி தூங்கிய நபர் காமேஷ் தான் என்பதை என்னி சின்ன அய்யப்பனும் அவரது கூட்டாளிகளும் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தலை கழுத்து கை உள்பட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். வெட்டுப்பட்ட நபர் அலறியடித்து சத்தம் போடவே அவர் காமேஷின் அண்ணன் கதிர் என்பது தெரியவந்தது.

    ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தது கதிர் என்பதை உணர்ந்த சின்ன அய்யப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கதிர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொ ள்ளப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர்.

    வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சின்ன ஐயப்பனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சின்ன அய்யப்பனும் பிரபல ரவுடி ஆவார். திருவிழாவில் நடந்த பிரச்சினையால் ஆள் மாறாட்டத்தில் வாலிபருக்கு சரமாரி விட்டு விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு பதட்டமான சூழல் வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×