என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க தொடக்க விழா
    X

    கோப்பு படம்.

    பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க தொடக்க விழா

    • அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கிறார்
    • உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜ.க. மாநில துணை தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

    விழுப்புரம் மண்டல தலைவர் இளவரசன் தலைமையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு புதுவை மாநில பி.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் ஆசைத்தம்பி, மாநில செயலாளர் சிவக்குமார், பொதுச் செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் வீரமணி, ஆறுமுகம், கணேசன், நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வகிக்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பி.எம்.எஸ் சங்க தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் மற்றும் பேரவை தலைவருமான விமேஸ்வரன், மாநில செயலாளர் சி.எஸ் முருகன் ஆகியோர் சங்க கொடி ஏற்றி சிறப்புரையா ற்றுகின்றனர். இந்நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தின ர்களாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜ.க. மாநில துணை தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    நிகழ்ச்சியில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்க ண்ணன், முதலியார் பேட்டை பொறுப்பாளர் செல்வகணபதி, மாநில வணிக பிரிவு தலைவர் சத்யராஜ், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், முதலியார்பேட்டை தொகுதி தலைவர் இன்பசேகரன், உப்பளம் தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் சக்திவேல், ரவிச்சந்திரன், ஜெயரட்சகன், வெங்கடேஷ், கருணாநிதி, கார்த்திகேயன் சேகர் ஆகியோர் பங்கேற்கின்றனர். பணிமனை செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசுகிறார். பணிமனை தலைவர் ராஜசேகரன் நன்றி உரையாற்றுகிறார்.

    Next Story
    ×