search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுப்பிக்கப்பட்ட கிளை நூலகம்-அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்து வைத்தார்
    X

    கிளை நூலகத்தை அமைச்சர் சந்திரபிரியங்கா, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

    புதுப்பிக்கப்பட்ட கிளை நூலகம்-அமைச்சர் சந்திரபிரியங்கா திறந்து வைத்தார்

    • பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது நூலக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
    • கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் கவிஞர் வாணிதாசன் 109-வது பிறந்தநாள் விழா சேலியமேட்டில் கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி சேலியமேடு பகுதியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் ரூ. 17 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த நூலகத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சந்திர பிரியங்கா, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    இந்த நூலகத்தில் சிறப்பு அம்சங்களான அரவிந்தர் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கான புதிய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்களுக்கான புத்தகத் தனிப்பிரிவு, வேலை வாய்ப்புக்கான தனிப்பிரிவு, செய்தித்தாளுக்கு தனிப்பிரிவு என்ன பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது நூலக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் கண்காணிப்பாளர் அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை கலை பண்பாட்டு துறை நூலகப் பிரிவு திருமாறன் செய்திருந்தார். பின்னர் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் கவிஞர் வாணிதாசன் 109-வது பிறந்தநாள் விழா சேலியமேட்டில் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அவரது நினைவிடத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

    Next Story
    ×