என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கணவனுடன் தகராறு-பெண் மாயம்
    X

    கோப்பு படம்.

    கணவனுடன் தகராறு-பெண் மாயம்

    • புதுவை சந்தா சாகீப் வீதியை சேர்ந்தவர் சரவணன்
    • கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கும்பத்தகராறு ஏற்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சந்தா சாகீப் வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரம்யா இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கும்பத்தகராறு ஏற்படும். அப்போ தெல்லாம் கணவனிடம் கோபித்துக்கொண்டு ரம்யா உறவினர் வீட்டுக்கு செல்வது வழக்கம். பின்னர் சமாதானம் அடைந்து வீடு திரும்புவார். அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண வனிடம் கோபித்துக்கொண்டு ரம்யா கடலூரில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்றார். சில நாட்கள் கழித்து ரம்யா வீடு திரும்பினார். அப்போது அவரை சரவணன் மன்னித்து குடும்பம் நடத்துமாறு அறிவுரை கூறினார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ரம்யா சாப்பிட்டு விட்டு தனது மகளுடன் வீட்டில் தூங்கினார்.

    பின்னர் மறுநாளை காலை பார்த்த போது ரம்யாவை காணவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ரம்யா இல்லை. இதையடுத்து சரவணன் தனது மனைவி மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×