search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் நிறுவன மேலாளருடன் பேஸ்புக்கில் நிர்வாணமாக பேசிய இளம்பெண்- வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்
    X

    தனியார் நிறுவன மேலாளருடன் பேஸ்புக்கில் நிர்வாணமாக பேசிய இளம்பெண்- வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்

    • பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.
    • இளைஞர்கள் இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் அறிமுகமானார். அவர்கள் இருவரும் பேஸ்புக்கில் குறுந்தகவல் அனுப்பி நட்பை பலப்படுத்தி வந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முக அடையாளத்தை அறியும் வகையில் அந்த வாலிபர் பேஸ்புக்கில் வீடியோ காலில் அழைத்து பேசி இருக்கிறார். அந்த பெண்ணும் வீடியோகாலில் ஜாலியாக பேசி உள்ளார்.

    ஒருமுறை அப்பெண் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் அந்த வாலிபரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி உள்ளார். இருவரும் நிர்வாண கோலத்தில் இருந்தபடி பேசிய வீடியோ காட்சியை அந்த பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் அந்த பெண், வாலிபரிடம் நிர்வாணமாக இருந்தபடி பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்து ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் மேலும் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.

    தொடர்ந்து அந்த பெண் பணம் கேட்டு மிரட்டி வந்ததால் வாலிபர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகிறார்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில்,

    கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நிர்வாண வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள் என்றார்.

    Next Story
    ×