என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் பாலாஜி (வயது 24). இவர் மணல் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.
இன்று அதிகாலை பாலாஜி பாளையம்பட்டி கிழக்கு தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு லாரியில் மணல் கொண்டு வந்தார். அங்கு மணலை கொட்டிய பின் லாரியை மற்றொருவர் இயக்க, பாலாஜி பின்னால் நின்று வழி சொல்வதற்காக அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரை பாலாஜி எதிர்பாராத விதமாக மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பாலாஜி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி இறந்த பாலாஜியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் எட்டூர் வட்டம், சோதனைச்சாவடி அருகே சென்றபோது, அங்குள்ள மனமகிழ் மன்றத்தில் சிலர் காசு வைத்து சூதாடுவது தெரியவந்தது.
இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். சாத்தூர் அமீர்பாளையத்தைச் சேர்ந்த மாரீஸ்வர கண்ணன் (வயது 42) என்பவர் மனமகிழ் மன்றத்தை நடத்துவது தெரியவந்தது.
போலீசார் மேலும் விசாரணை நடத்தி மாரீஸ்வர கண்ணன், மாரிமுத்து (42), சின்னத்தம்பி (48), மேட்டமலை ஆனந்தராஜ் (45), கண்ணன் (50), ராஜூ (52), கார்த்திகேயன் (46), கணேசன் (40), மாடக்கண்ணு (55), காளிதாஸ் (45), ஜெயகண்ணன் (47), சோமசுந்தரம் (50), கணேஷ்பாபு (47), பாண்டி (33), மணி (31), கருப்பசாமி (42), செய்யது உசேன் (36), குருசாமி (33) உள்பட 23 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.97 ஆயிரத்து 330-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைத்தாய் (வயது 68), தனியாக வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே 8 வருடங்களுக்கு முன்பு மாரியம்மாள் என்பவர் வசித்தார். தற்போது அவர் வெளியூரில் உள்ளார்.
சம்பவத்தன்று மாரியம்மாள் இல்ல விசேஷத்திற்கு அழைப்பதற்காக வெள்ளைத்தாய் வீட்டிற்கு வந்தார். அங்கு இரவு தங்கிவிட்டு மறுநாள் மாரியம்மாள் சமைக்க கறி வாங்கி வருகிறேன் என கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வரவில்லை.
இந்த நிலையில் வெள்ளைத்தாயின் வீட்டில் பீரோ கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே இருந்த பையை பார்த்தபோது அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது.
இதுகுறித்து வெள்ளைத் தாய் வச்சக்கார பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் நகை, பணம் திருட்டு தொடர்பாக மாரியம்மாள் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பகுதியில் உள்ள தொழிலாளர்களை குறி வைத்து சிலர் துண்டு சீட்டில் எண்களை எழுதி கொடுத்து லாட்டரி என பணம் பெற்று வந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் வெளியானது. இந்த செய்தியை தொடர்ந்து சிவகாசி துணைபோலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு துண்டு சீட்டில் எண்களை எழுதி கொடுத்து பணம் வசூலிக்கும் கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான தனிப்படையினர் திருத்தங்கல் முத்து மாரியம்மன் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வவிமல்கனி (வயது 48), ராஜா (39) ஆகியோர் எண்களை எழுதி துண்டு சீட்டுகள் வைத்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவைகள் லாட்டரி சீட்டுக்கள் என கூறி அந்த துண்டு சீட்டுக்களை விற்றுவந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.8450 பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சாந்தி. ராஜபாளையம் 11-வது சிறப்பு காவல் படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
முத்துக்குமாரின் சகோதரர் கணேசபெருமாள் (33) தனியார் பல்கலைகழக பேராசிரியர். இவர்களது இரு சக்கர வாகனங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள சிவகாமிபுரம் தெருவில் நிறுத்தி இருந்தனர்.
நள்ளிரவில் இரு மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். தண்ணீர் கொண்டு அணைத்த பின்னர் அது முற்றிலும் எரிந்து சேத மடைந்தது.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் இருவரும் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து எரிந்த மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே தெருவுக்கு அருகே உள்ள துரைசாமிபுரம் தெருவில் 2 மாதங்களுக்கு முன்பு 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் திவான் (வயது 22). சம்பவத்தன்று இவரும், உறவினர் ஜீவா என்பவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.
அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலை அருகே சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சின்னத் துரை, மண்டையன் உள்பட 4 பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது மோதலாக வெடித்தது.
4 பேரும் திவானை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்தபுகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சாந்தி. ராஜபாளையம் 11-வது சிறப்பு காவல் படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
முத்துக்குமாரின் சகோதரர் கணேச பெருமாள் (33) தனியார் பல்கலைகழக பேராசிரியர். இவர்களது இருசக்கர வாகனங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள சிவகாமிபுரம் தெருவில் நிறுத்தி இருந்தனர்.
நள்ளிரவில் இரு மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். தண்ணீர் கொண்டு அணைத்த பின்னர் அது முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் இருவரும் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து எரிந்த மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே தெருவுக்கு அருகே உள்ள துரைசாமிபுரம் தெருவில் 2 மாதங்களுக்கு முன்பு 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி போலீசார் அங்குள்ள விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான 942 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த ராஜபாளையம் மாங்குடியைச் சேர்ந்த சாமுவேல் (46), டி.பி.மில் ரோட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் (31) ஆகியோரை கைது செய்தனர்.
இதே போல் சிவகாசி, மயிலாடுதுறை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் திருப்பதி (43), ஞானப்பழம் ஆகியோர் புகையிலை பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1,500 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் ரூ1,560 மதிப்பிலான புகையிலை பொருட்களுடன் முருகன் (47) கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர், 22-வது வார்டு அ.ம.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சுந்தர்ராஜ் இன்று காலை அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் வேகமாக ஏறினார். பின்னர் செல்போன் டவர் உச்சியில் நின்றுகொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கிராமமக்களும் அங்கு திரண்டனர்.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சுந்தர்ராஜனிடம் மைக் மூலம் சமரச பேச்சு நடத்தினார்கள். டவரை விட்டு கீழே இறங்கி வருமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் சுந்தர்ராஜ் கீழே இறங்காமல் அடம் பிடித்து வந்தார்.
சுமார் 1½ மணி நேர சமரசத்திற்கு பிறகு சுந்தர்ராஜ் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.ம.மு.க. தொண்டர் நடத்திய இந்த போராட்டத்தால் ராஜபாளையத்தில் இன்று பரபரப்பு ஏற்படுத்தியது.






