என் மலர்
நீங்கள் தேடியது "nervous"
வாஷிங்டன்:
அமெரிக்கா- இந்தியா பயங்கரவாத ஒழிப்பு குழுவின் கூட்டம் வாஷிங்டனில் நேற்று நடை பெற்றது.
அமெரிக்க அரசின் பயங்கரவாத ஒழிப்பு தூதரக ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ், இந்திய வெளியுறவு துறை அமைச்சக இணை செயலாளர் மகாவீர் சிங்வி ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்துக்கு பிறகு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

சர்வதேச அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பண உதவி வழங்குவதை தடுத்தல், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தடுத்தல், இண்டர்நெட் போன்ற ஊடகங்கள் பயன்படுத்துவதை தடுத்தல், வெளிநாட்டு பயங்கரவாத குழுக்கள் நுழைவதை கட்டுப்படுத்துதல் போன்றவைகளில் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அதில், இந்தியாவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளின் மீது அர்த்தமுள்ள மிக கடுமையான நட வடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு அமெரிக்கா என்றும் ஆதரவு அளிக்கும் என அதிகாரி நாதன் சேல்ஸ் தெரிவித்தார். #Militants
வாஷிங்டன்:
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டத்தை தணிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷியையும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலேயையும் அழைத்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் பேசினார்.
அப்போது பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்- இ-முகமது மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான கடுமையான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தியாவுடனான பதட்டத்தை தணிக்க பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவரிடம் குரேஷி உறுதி அளித்தார். இந்த தகவலை ஜான் பால்டன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பி யோவுடன் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய்கோகலே சந்தித்தார். அப்போது புல்வாமா தாக்குதல் குறித்தும், பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். #Militantsattack






