search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ
    X
    தீ

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

    ராஜபாளையத்தில் 2 மாதங்களுக்கு முன்பு 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சாந்தி. ராஜபாளையம் 11-வது சிறப்பு காவல் படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

    முத்துக்குமாரின் சகோதரர் கணேசபெருமாள் (33) தனியார் பல்கலைகழக பேராசிரியர். இவர்களது இரு சக்கர வாகனங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள சிவகாமிபுரம் தெருவில் நிறுத்தி இருந்தனர்.

    நள்ளிரவில் இரு மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். தண்ணீர் கொண்டு அணைத்த பின்னர் அது முற்றிலும் எரிந்து சேத மடைந்தது.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் இருவரும் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து எரிந்த மோட்டார் சைக்கிள்களை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே தெருவுக்கு அருகே உள்ள துரைசாமிபுரம் தெருவில் 2 மாதங்களுக்கு முன்பு 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×