என் மலர்
விருதுநகர்
ராஜபாளையம் அருகே ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விருதுநகர்
ராஜபாளையம் அருகே உள்ள ஆசிலா புரத்தைச் சேர்ந்தவர் சுப்புராம் (வயது51). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவரது தந்தை பெருமாள் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தில் வசிக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்புராம் தனது தந்தையை பார்த்துவிட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்புராம் தனது வீட்டில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பெருமாள் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சுப்புராம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 15-ந்தேதி வைகாசி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகிற 13-ந்தேதி (வெ ள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.
மேற்கண்ட 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தால் அன்றைய தினம் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்க ப்படமாட்டார்கள். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல கூடாது இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் அருகே வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்று இருந்தவரின் வீட்டில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் சூலக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை மாடன் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மீனாட்சி.
மனோகரன் கனடாவில் வேலை பார்த்து வருகிறார். போலீசாக வேலை பார்த்து வந்த மீனாட்சி விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை மீனாட்சி தனது வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.
இரவில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் வெளிப்புற கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மெயின் கதவு மற்றும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் அறைக்குள் சிதறிக் கிடந்தன. பீரோவுக்குள் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 31 பவுன் தங்க நகைகள் மற்றும் 44 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை.
யாரோ மர்மநபர்கள் மீனாட்சி வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சூலக்கரை போலீஸ் நிலையத்தில் மீனாட்சி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த ரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனாட்சி வீட்டில் கைவரிசை காட்டியவர்கள், அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவருக்கு தெரிந்த நபர்கள் யாராவது இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மீனாட்சி வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்று இருந்தவரின் வீட்டில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் சூலக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனாட்சி வீட்டிற்கு சற்று தொலைவில் தான், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் அருகே கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
விருதுநகர்
சிவகாசி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் சாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கல்லூரி சென்ற இளம்பெண் மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது பற்றி தெரிவயில்லை. இதுகுறித்து கருப்பசாமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
சிவகாசி நாகேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு 3மகள்கள் உள்ளனர். இதில் இளம்பெண்ணான ஒரு மகள் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுபற்றி மகாலட்சுமி மாரனேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
விருதுநகர் நந்திரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலர்விழி. இவர் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் திருமணமான மகள் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி மலர்விழி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கர்ப்பிணி பெண்ணை தேடி வருகின்றனர்.
விருதுநகரில் ஆஸ்பத்திரி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே முத்துராமப்பட்டியைச் சேர்ந்தவர் அன்புராஜா. இவர் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். அவரை பணிநீக்கம் செய்து விட்டதால் லாரியை வாங்கி அதனை ஓட்டி வந்தார். அன்புராஜா லாரிவாங்குவதற்கு காமாட்சி என்பவர் ரூ. 2 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அதற்கான வட்டியை கடந்த 3 மாதங்களாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அன்புராஜா வீட்டுக்கு காமாட்சி, வேலு ஆகிய இருவரும் வந்து பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் அன்புராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காரியாபட்டி
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கிழவனேரி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் (வயது 35), இவரிடம் நாகேந்திரன் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் விருதுநகர் ஊரக வளர்ச்சிதுறை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பணியாற்றுவதாகவும் ஊராட்சிக்கு ஒதுக்கப்ப ட்டுள்ள வீடுகள் போக கூடுதலாக வீடுகள் தேவைப்பட்டால் வீடு ஒன்றுக்கு ரூபாய் 6 ஆயிரம் வீதம் செலுத்தினால்மேலும் வீடுகள் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பி கிழவனேரி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், திட்ட இயக்குநர் அலுவலகத்தில் வேலை செய்துவருவதாக கூறிய நாகேந்திரன் கொடுத்த செல்போன் எண்ணிற்கு நாலு தவணையாக ரூபாய் 60 ஆயிரம் செலுத்தியதாகவும் பின்னர் பணத்தை பெற்றுக்கொண்ட நாகேந்திரன், கிழவனேரி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் வாட்ஸ்அப் எண்ணிற்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையை அனுப்பி வைத்துள்ளார்.
கிழவனேரிக்கு ஒதுக்கீடு செய்த ஆணையை எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் காரியாபட்டி வட்டாரவளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று காண்பித்தபோது இந்தஆணை போலியானது என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கிழவனேரி ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திக் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் இது போன்று வீடுகள் வாங்கிதருவதாக கூறி நாகேந்திரன் பல லட்சம் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் தெரியவருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சிவகாசி அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சரஸ்வதி (28) செந்தில்குமார் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் முனியாண்டி ( 35) அதே பகுதி வசித்து வந்தார். அவர் அடிக்கடி செந்தில்குமார் வீட்டுக்கு வந்து செல்வார்.
அப்போது செந்தில்குமார் மனைவி சரஸ்வதிக்கும், முனியாண்டிக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தது.
இதனால் மன முடைந்த சரஸ்வதியும் முனியாண்டியும் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த செந்தில்குமார் தனது மனைவியும், நண்பரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு பகுதியில் ஓட்டல்-கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் உள்ள உணவுப்பொருட்கள் திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், வாகன நெருக்கடி அதிகம் உள்ள முத்தாலம்மன் பஜார் பகுதி வழியாக செல்லும் வாகனங்களில் ஏற்படும் புகை மற்றும் தூசிகள் திறந்து இருக்கும் உணவுகளின் படிந்து உணவுப்பொருட்களில் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து வத்திரா யிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள், பேக்கரி ஆகியவற்றில் சாத்தூர் நகர உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மோகன் குமார், வத்திராயிருப்பு, சிவகாசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுப்பணியில் திறந்தவெளியில் உள்ள உணவுப்பொருட்களை முறையாக பாதுகாத்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் காலாவதியான பொருட்களை கைப்பற்றி அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
ஓட்டல்களில் கோழி இறைச்சியில் அதிக கலர்பொடி கலக்கப்பட்டு இருந்ததால் அந்த இறைச்சியினை கைப்பற்றி அழித்தனர். மேலும் கடைகளில் சுமார் 50 கிலோவுக்கு மேல் இருந்த பாலித்தீன் கவர்களை கைப்பற்றி கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் நின்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரும் அவரது நண்பரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் இருந்து கல்லுப்பட்டி நோக்கி சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் என்ற பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இருவர் மீதும் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் நத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோதிய காரை ஓட்டிவந்த கேரளாவை சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே இளம்பெண் மாயமானார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அசையா மணிவிலக்கு பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குடில் அமைத்து சரவணன் (வயது31)என்பவர் ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பர்வக்கொடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருடன் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் சரவ ணனின் மனைவி திடீரென மாயமாகி விட்டார் .அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் ,தனது மனைவி மாயமானது பற்றி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தொழில் அதிபர் படுகாயம் அடைந்தார்.
ராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் அருண் (வயது 32 )தொழில் அதிபர். இவர் புல்லட் மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள மயூரநாதர் கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.
எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள், லாரியின் பின்பகுதியில் மோதி அருண் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி கோவையை சேர்ந்த லாரி டிரைவர் சுவாமிநாதன் ராஜ பாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பில் கண்மாய் தலைவருக்கான தேர்தலில் விவசாயிகள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா விற்கு உட்பட்ட பிளவக்கல் நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் உள்ள கண்மாய்களின் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது.
வத்திராயிருப்பு தாலுகாவை பொருத்தவரை மொத்தம் உள்ள 20 சங்கங்களில் 14 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மண்டல உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 6 சங்கங்களுக்கான தலைவர் மற்றும் மண்டல பொறுப்பா ளர்கள் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தல் வத்திரா யிருப்பு பெரியகுளம், விராக சமுத்திரம், கொசவன்குளம், அனுப்பன்குளம், வில்வராயன் குளம், பாதரங்குளம், சித்தாறு, நத்தம்பட்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கான தேர்தல் கான்சாபுரம், வத்திராயிருப்பு, மகாராஜபு ரம், கூமாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் நடந்தது.
இந்த தேர்தல் பொதுத்தேர்தலை போன்று வாக்குச் சாவடிகள் அமைத்து நடைபெற்றது. விவசாயிகள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.வயதானவர்களை ஆட்டோவில் அழைத்து வந்தும், நடக்க முடியாத முதியவர்களை தூக்கி வந்தும் வாக்களிக்க செய்தனர்.