என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் மோசடி
வீடு வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காரியாபட்டி
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கிழவனேரி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் (வயது 35), இவரிடம் நாகேந்திரன் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் விருதுநகர் ஊரக வளர்ச்சிதுறை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பணியாற்றுவதாகவும் ஊராட்சிக்கு ஒதுக்கப்ப ட்டுள்ள வீடுகள் போக கூடுதலாக வீடுகள் தேவைப்பட்டால் வீடு ஒன்றுக்கு ரூபாய் 6 ஆயிரம் வீதம் செலுத்தினால்மேலும் வீடுகள் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பி கிழவனேரி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், திட்ட இயக்குநர் அலுவலகத்தில் வேலை செய்துவருவதாக கூறிய நாகேந்திரன் கொடுத்த செல்போன் எண்ணிற்கு நாலு தவணையாக ரூபாய் 60 ஆயிரம் செலுத்தியதாகவும் பின்னர் பணத்தை பெற்றுக்கொண்ட நாகேந்திரன், கிழவனேரி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் வாட்ஸ்அப் எண்ணிற்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையை அனுப்பி வைத்துள்ளார்.
கிழவனேரிக்கு ஒதுக்கீடு செய்த ஆணையை எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் காரியாபட்டி வட்டாரவளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று காண்பித்தபோது இந்தஆணை போலியானது என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கிழவனேரி ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திக் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் இது போன்று வீடுகள் வாங்கிதருவதாக கூறி நாகேந்திரன் பல லட்சம் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் தெரியவருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Next Story






