என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை
விருதுநகர் அருகே கோவிலுக்கு சென்றவர் வீட்டில் 31 பவுன் நகை-பணம் கொள்ளை
விருதுநகர் அருகே வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்று இருந்தவரின் வீட்டில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் சூலக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை மாடன் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மீனாட்சி.
மனோகரன் கனடாவில் வேலை பார்த்து வருகிறார். போலீசாக வேலை பார்த்து வந்த மீனாட்சி விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை மீனாட்சி தனது வீட்டை பூட்டி விட்டு தன்னுடைய உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.
இரவில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் வெளிப்புற கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மெயின் கதவு மற்றும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் அறைக்குள் சிதறிக் கிடந்தன. பீரோவுக்குள் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 31 பவுன் தங்க நகைகள் மற்றும் 44 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை.
யாரோ மர்மநபர்கள் மீனாட்சி வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சூலக்கரை போலீஸ் நிலையத்தில் மீனாட்சி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த ரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனாட்சி வீட்டில் கைவரிசை காட்டியவர்கள், அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவருக்கு தெரிந்த நபர்கள் யாராவது இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மீனாட்சி வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்று இருந்தவரின் வீட்டில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் சூலக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனாட்சி வீட்டிற்கு சற்று தொலைவில் தான், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story