என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கல்லூரி மாணவி-இளம்பெண் மாயமாகினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி முத்துமாரி (வயது 36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துமாரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகரில் உள்ள சிவகாசி ரோட்டை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் அந்தோணியம்மாள் (19). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அந்தோணியம்மாள் வீடு திரும்பாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை.

    இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • தவறி விழுந்து 2 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஆனையூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவரது மகள் ஜனனி (2). இவளுக்கு தலையில் நீர்க்கட்டி இருந்தது. இதற்காக சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று ஜனனி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாள். இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய சிறுமியை குடும்பத்தினர் மீட்டு உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசாரை கண்டித்து வக்கீல்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் ஜி.என். பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் வாங்கியுள்ளார். இவரது தவணைத் தொகை முழுவதும் செலுத்தப்பட்ட நிலையில் இந்த வாகனத்திற்கான (தடையின்மை சான்றிதழ்)வழங்கவில்லை.

    இதற்கு இரு சக்கரம் வாகனம் வாங்கியதில் நிலுவைத் தொகை பாக்கி இருப்பதாக கூறி தொடர்ந்து நிதி நிறுவனத்தில் இருந்து வழக்கறிஞருக்கு போன் வந்துள்ளது. இந்த நிலையில் இவர்தான் தனது தவணைத் தொகை முழுவதும் செலுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.

    உடனடியாக எந்தவி தமான முன் அறிவிப்பும் இன்றி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றத்திற்குள் இருந்த இருசக்கர வாகனத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றுள்ளனர்.

    பணி முடிந்து வெளியே வந்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகாரின் மீது போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். மறுநாள் காலை நிதி நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நிதி நிறுவன ஊழியர்கள்தான் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    மீண்டும் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதற்கு திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதியாமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நீதிமன்றத்திற்குள் சென்று யாருடைய அனுமதியும் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் கொடுத்த புகாரை வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு செய்த திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்தும் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வழக்கறிஞர்கள் அனைவரும் இன்று காலை நீதிமன்றத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி,திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • விருதுநகர் சின்ன பள்ளிவாசல் தெருவில் போலீசார் ரோந்து சென்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விருதுநகர் பஜார் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

    உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு 3 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் குல்லூர் சந்தை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 26), இலகேஸ்வரன் (19), கோகுல கண்ணன் (19) என தெரிய வந்தது.

    3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதேபோல் விருதுநகர் லட்சுமி நகரில் உள்ள நேருஜி தெருவை சேர்ந்த கிஷோர் (28) என்பவரை கைது செய்த பாண்டியன் நகர் போலீசார் அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா, 18 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர் சின்ன பள்ளிவாசல் தெருவில் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார், சிவா ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதில் விக்னேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சிவாவை தேடி வருகின்றனர்.

    • பட்டாசு கடைகளுக்கு புதியகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
    • கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரி இயக்குனர் சவுத்ரி, தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன், பொறியாளர் உமேத் சிங், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் தியா சங்கர் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் (டான்பாமா)கணேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

    இக்குழுவினர் பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பத்து டன் கூடிய பாதுகாப்பு, வெளிநாடுகளில் உள்ள பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் மத்திய தொழில், வர்த்தக அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசின் தொழில், வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஏற்கனவே 4 முறை குழுவினர் பங்கேற்ற கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம் இணைய வழியில் நடந்தது. அதில் பட்டாசு கடைகள் நடத்துவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில் 5 முறை இணைய வழியில் நடந்த கூட்டத்தில், பட்டாசு கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இறுதியாக தீர்மானிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதுபற்றி டான்பாமா தலைவர் கணேசன் கூறியதாவது:-

    பட்டாசு கடைகளில் 2 கே.ஜி. கொள்ளளவு உள்ள 10 மீட்டர் தூரம் பீய்ச்சி அடிக்க கூடிய தீயணைப்பான் வைக்க வேண்டும். கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனே தீயணைப்பு துறை, போலீசுக்கு தகவல் தெரிவிக்க சிக்னல் லேயர் அமைக்க வேண்டும். கடையில் 500 லிட்டர் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். கடை உரிமையாளர், தொழிலாளர்கள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனடியாக அலாரம் அடிக்க ஐ.எஸ்.ஓ., தரச் சான்று கருவி பொருத்த வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத மின் வயர் சுவிட்சுகளை கடைகளில் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசிடம் பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 இரட்டை கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
    • இந்த 2 சம்பவங்களிலும் குற்றவாளிகளை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வைத்தியநாத புரத்தில் கடந்த 16-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த தனியார் நிறுவன மேலாளர் ராஜகோபாலன். அவரது மனைவி குருபாக்கியம் ஆகியோர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

    வீட்டில் இருந்த பணம், ஆவணம் திருடு போனதாக கூறப்பட்டது. 18-ந் தேதி அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கரபாண்டியன், அவரது மனைவி ஜோதிமணி ஆகியோரும் கொலை செய்யப்பட்டார்கள். இந்த 2 இரட்டை கொலைகளும் பணம்-நகை ஆதாயத்திற்காக நடந்தது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்த 2 சம்பவங்களிலும் குற்றவாளிகளை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 20 நாட்களுக்கு மேலாகியும் இரட்டை கொலைகளுக்கு இதுவரை துப்புதுலங்கவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மர்மமான கொலைகள் விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்ட பின்பு தான் துப்புதுலங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2005-ம் ஆண்டு வருமான வரித்துறை உதவி ஆணையர் எபினேசர் பால், அவரது மனைவி லீலாபால் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட பின்பு தான் துப்புதுலங்கப்பட்டது.

    அதே ஆண்டில் விருதுநகரை சேர்ந்த தொழிலதிபர் மனைவி கனகலட்சுமி, மூதாட்டி கஸ்தூரி ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். 2010-ம் ஆண்டு நகராட்சி கவுன்சிலர் ஆரிப்அலி மகன் அகமது ரைஸ் விருதுநகர்- சிவகாசி ரோட்டில் படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்குகளில் இதுவரை துப்புதுலங்கப்படவில்லை.

    எனவே கடந்த மாதம் நடந்த 2 இரட்டை கொலைகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த இரட்டை கொலை சம்பந்தமாக தென்மண்டல ஐ.ஜி.யின் நேரடி கண்காணிப்பில் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • கல்லூரி மாணவி உள்பட 2 பேர் திடீர் மாயமாகினர்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமராஜ் ராஜா. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 20). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரியதர்ஷினி நேற்று வழக்கம்போல ஆட்டோவில் கல்லூரிக்கு சென்றவர் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் திரவுபதி ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மாயமான கல்லூரி மாணவி எங்கு சென்றார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ராஜபாளையம் பெரிய கடை பஜார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகள் முத்துமணி (24). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். முத்து மணி தனது தந்தை சுப்பிரமணியன் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

    நேற்று கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற முத்துமணி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் சுப்பிரமணி தேடினார். திடீரென இரவு அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட முத்துமணி தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துவிட்டு செல்போனை துண்டித்து விட்டார்.

    இதனால் தனது மகள் எங்கு இருக்கிறார்? என்று தெரியாத சுப்பிரமணியன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தின் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து மாயமான முத்துமணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • நியாய விலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
    • ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி கீழவரகுணராமபுரம் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலைக்கடை அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.. யூனியன் சேர்மன் சிங்கராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி கிளைச்செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.
    • மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பு ''தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்'' என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி ஆகியோர் பேசினர்.

    மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் திண்டிவனம் பொறியியல் உறுப்புக்கல்லூரி வேலை வாய்ப்புத்துறை அதிகாரி ஜெ.லட்சுமி கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் பணி நிறுவனங்களின் நேர்காணலின் போது சுயவிவரத்தை எவ்வாறு தயார் செய்யவேண்டும் என்பதை பற்றி எடுத்துரைத்தார். சுயவிவரம்-பயோடேட்டா இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை விளக்கினார்.

    நேர்காணலின்போது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள், விண்ணப்பித்த பதவிக்கான தேவைகள், தகுதி ஆகியவற்றை நன்றாக வளர்த்து கொண்டு அதன் பிறகு நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துைற பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், தனம், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பட்டாசு கடைகள் நடத்துவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • பட்டாசு கடைகளில் 2 கே.ஜி. கொள்ளளவு உள்ள 10 மீட்டர் தூரம் பீய்ச்சி அடிக்க கூடிய தீயணைப்பான் வைக்க வேண்டும்.

    சிவகாசி:

    சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரி இயக்குனர் சவுத்ரி, தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன், பொறியாளர் உமேத் சிங், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் தியா சங்கர் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் (டான்பாமா)கணேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

    இக்குழுவினர் பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பத்து டன் கூடிய பாதுகாப்பு, வெளிநாடுகளில் உள்ள பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் மத்திய தொழில், வர்த்தக அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசின் தொழில், வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஏற்கனவே 4 முறை குழுவினர் பங்கேற்ற கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம் இணைய வழியில் நடந்தது. அதில் பட்டாசு கடைகள் நடத்துவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில் 5 முறை இணைய வழியில் நடந்த கூட்டத்தில், பட்டாசு கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இறுதியாக தீர்மானிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதுபற்றி டான்பாமா தலைவர் கணேசன் கூறியதாவது:-

    பட்டாசு கடைகளில் 2 கே.ஜி. கொள்ளளவு உள்ள 10 மீட்டர் தூரம் பீய்ச்சி அடிக்க கூடிய தீயணைப்பான் வைக்க வேண்டும். கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனே தீயணைப்பு துறை, போலீசுக்கு தகவல் தெரிவிக்க சிக்னல் லேயர் அமைக்க வேண்டும். கடையில் 500 லிட்டர் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். கடை உரிமையாளர், தொழிலாளர்கள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனடியாக அலாரம் அடிக்க ஐ.எஸ்.ஓ., தரச் சான்று கருவி பொருத்த வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத மின் வயர் சுவிட்சுகளை கடைகளில் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசிடம் பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டு வேலை செய்யும் தொழிாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.
    • அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கட்டுமானத்தொழிலாளர் நலவாரியம், உடலுழைப்பு நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் இதுவரை பதிவுசெய்யாத வீட்டுப்பணியாளர்கள் தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட இணைய–தளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க இயலாத வீட்டு பணியாளர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு, பள்ளி மாற்று சான்றிதழ் ஆகிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாய்பால் வார விழா: பெண்கள் உறுதிமொழி எடுத்தனர்.
    • தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் நகர்புற வட்டாரத்தில் வட்டார அளவிலான உலகத்தாய்ப்பால் வார விழா யாதவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கலட்சுமி, மருத்துவ அலுவலர்கள் அண்ணாமலை அம்மாள், ராமலட்சுமி, நகர சுகாதார செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார மேற்பார்வையா ளர்கள், வட்டார திட்ட உதவியாளர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்,வளர் இளம் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கலட்சுமி பேசும்போது, தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் குழந்தையின் பொன்னான 1000 நாள்கள் பற்றி விளக்க உரையாற்றினார்.

    கர்ப்ப கால முன், பின் பராமரிப்பு குறித்து மருத்துவ அலுவலர் அண்ணாமலை அம்மாள் பேசினார். விழாவில் காய்கறி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஊட்டச்சத்து மிக்க உணவுகள் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    மேலும் தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. தாய்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்த பேரணியை மருத்துவ அலுவலர் ராமலட்சுமி தொடங்கிவைத்தார்.

    ×