search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரை கண்டித்து வக்கீல்கள் தர்ணா போராட்டம்
    X

    சிவகாசியில் வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்

    போலீசாரை கண்டித்து வக்கீல்கள் தர்ணா போராட்டம்

    • போலீசாரை கண்டித்து வக்கீல்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் ஜி.என். பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் வாங்கியுள்ளார். இவரது தவணைத் தொகை முழுவதும் செலுத்தப்பட்ட நிலையில் இந்த வாகனத்திற்கான (தடையின்மை சான்றிதழ்)வழங்கவில்லை.

    இதற்கு இரு சக்கரம் வாகனம் வாங்கியதில் நிலுவைத் தொகை பாக்கி இருப்பதாக கூறி தொடர்ந்து நிதி நிறுவனத்தில் இருந்து வழக்கறிஞருக்கு போன் வந்துள்ளது. இந்த நிலையில் இவர்தான் தனது தவணைத் தொகை முழுவதும் செலுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.

    உடனடியாக எந்தவி தமான முன் அறிவிப்பும் இன்றி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றத்திற்குள் இருந்த இருசக்கர வாகனத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றுள்ளனர்.

    பணி முடிந்து வெளியே வந்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகாரின் மீது போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். மறுநாள் காலை நிதி நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நிதி நிறுவன ஊழியர்கள்தான் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    மீண்டும் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதற்கு திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதியாமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நீதிமன்றத்திற்குள் சென்று யாருடைய அனுமதியும் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் கொடுத்த புகாரை வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு செய்த திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்தும் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வழக்கறிஞர்கள் அனைவரும் இன்று காலை நீதிமன்றத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி,திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×