நியாய விலை கடை கட்ட பூமி பூஜை

நியாய விலை கடை கட்ட பூமி பூஜை நடந்தது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நியாய விலை கடை கட்ட பூமி பூஜை
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி கீழவரகுணராமபுரம் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலைக்கடை அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.. யூனியன் சேர்மன் சிங்கராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி கிளைச்செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com