என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 இரட்டை கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுமா?
    X

    2 இரட்டை கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுமா?

    • 2 இரட்டை கொலை விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
    • இந்த 2 சம்பவங்களிலும் குற்றவாளிகளை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வைத்தியநாத புரத்தில் கடந்த 16-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த தனியார் நிறுவன மேலாளர் ராஜகோபாலன். அவரது மனைவி குருபாக்கியம் ஆகியோர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

    வீட்டில் இருந்த பணம், ஆவணம் திருடு போனதாக கூறப்பட்டது. 18-ந் தேதி அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கரபாண்டியன், அவரது மனைவி ஜோதிமணி ஆகியோரும் கொலை செய்யப்பட்டார்கள். இந்த 2 இரட்டை கொலைகளும் பணம்-நகை ஆதாயத்திற்காக நடந்தது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்த 2 சம்பவங்களிலும் குற்றவாளிகளை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 20 நாட்களுக்கு மேலாகியும் இரட்டை கொலைகளுக்கு இதுவரை துப்புதுலங்கவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மர்மமான கொலைகள் விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்ட பின்பு தான் துப்புதுலங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2005-ம் ஆண்டு வருமான வரித்துறை உதவி ஆணையர் எபினேசர் பால், அவரது மனைவி லீலாபால் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட பின்பு தான் துப்புதுலங்கப்பட்டது.

    அதே ஆண்டில் விருதுநகரை சேர்ந்த தொழிலதிபர் மனைவி கனகலட்சுமி, மூதாட்டி கஸ்தூரி ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர். 2010-ம் ஆண்டு நகராட்சி கவுன்சிலர் ஆரிப்அலி மகன் அகமது ரைஸ் விருதுநகர்- சிவகாசி ரோட்டில் படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்குகளில் இதுவரை துப்புதுலங்கப்படவில்லை.

    எனவே கடந்த மாதம் நடந்த 2 இரட்டை கொலைகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த இரட்டை கொலை சம்பந்தமாக தென்மண்டல ஐ.ஜி.யின் நேரடி கண்காணிப்பில் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Next Story
    ×