என் மலர்
விருதுநகர்
- முப்பெரும் விழா பந்தல் நுழைவு வாயில் மாளிகை போன்று அமைக்கப்படுகிறது.
- முப்பெரும் விழாவில் கலைஞரின் கடிதத்தொகுப்பு 54 புத்தகங்களாக வெளியிடப்படுகிறது.
விருதுநகர்:
விருதுநகர்-சாத்தூர் இடையே பட்டபுதூரில் வருகிற 15-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
அங்கு நடைபெறும் விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
விருதுநகர் பட்டம்புதூர் அண்ணாநகரில் அமைந்து உள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பிலான கலைஞர் திடலில் வருகிற 15-ந்தேதி தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகளை வழங்குகிறார்.
விழா நடைபெறும் பிரமாண்ட பந்தலுக்கு பிரதான முகப்பாக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேரின் உருவப்படங்களுடன் மலை முகடு போன்று அமைக்கப்படுகிறது. விழா பந்தல் நுழைவு வாயில் மாளிகை போன்று அமைக்கப்படுகிறது. பிரமாண்ட பந்தலில் 60 ஆயிரம் பேர் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் 1 லட்சம் பேர் நிகழ்ச்சியை காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி, விழாவில் கலந்து கொள்வோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. விழாவில் கலைஞரின் கடிதத்தொகுப்பு 54 புத்தகங்களாக வெளியிடப்படுகிறது.
மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி மாலை 4 மணி அளவில் வர உள்ளார். கொரோனா தொற்று குறைந்த பிறகு வெளி மாவட்டத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக இந்த முப்பெரும் விழா நடைபெற உள்ள நிலையில் இதை நடத்துவதற்கான வாய்ப்பை முதல்-அமைச்சர் இம்மாவட்ட கழகத்திற்கு தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தி.மு.க. செய்து வருகிறது. பிரமாண்ட அளவில் நடைபெறும் இந்த விழா பந்தல் மற்றும் முகப்புகளை காண்பதற்கு சுற்றி உள்ள கிராம மக்கள் வந்து செல்கின்றனர். முப்பெரும் விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து திரளாக மக்கள் கலந்துகொண்டு முதல்-அமைச்சரின் சிறப்புரையை கேட்க அழைக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மர்மமாக இறந்து கிடந்தார்.
- போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி மூலம் 4 மகள்களும், சந்திரா என்ற மனைவி மூலம் மகன், மகள் உள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியப்பட்டி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 75). போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி மூலம் 4 மகள்களும், சந்திரா என்ற மனைவி மூலம் மகன், மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டுக்குள் சென்ற குமர வேல் உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார். அதன்பின் நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பாண்டியன் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் அங்கிருந்த வர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குமரவேல் தலை குப்புற விழுந்த நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர்.
குமரவேல் எப்படி இறந்தார்? என பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 தம்பதிகள் கொலையில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
- 2 ஆதாய கொலைகள் நடந்து 2 மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்த ராஜகோபால் (வயது 75), அவரது மனைவி குருபாக்கியம் (65) ஆகியோர் கடந்த ஜூலை மாதம் வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இந்த சம்பவம் நடந்த மறு நாளே அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி சங்கரபாண்டியன் (70)-ஜோதிமணி (60) ஆகியோரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இந்த 2 கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி. பொன்னி மற்றும் போலீசார் நேரடி விசாரணை மேற்கொண்ட னர்.
2 ஆதாய கொலைகள் நடந்து 2 மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் தற்போது வரை கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்ற னர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது. எனவே ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேரடி மேற்பார்வையில் விசா ரணையை துரிதப்படுத்தி கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தி னர் வலியுறுத்தி உள்ளனர்.
- இமானுவேல் சேகரன் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
- ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டி காளைப் பாண்டியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் இமானுவேல் சேகரன் நினைவுதினத்தை முன்னிட்டு ஓ.பன்னீர் செல்வம் சார்பில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் தலைமையில் அம்மன் பொட்டல் தெரு,மலையடிப்பட்டி, இளந்திரைகொண்டான்போன்ற இடங்களில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்மன் பொட்டல் தெருவில் உள்ள தேவேந்திரகுல ஊர் நாட்டாமைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் கதிரவன் பொன்னாடை அணிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் செய்தித் தொடர்பாளர் கான்சை கண்ணன், ராஜபாளையம் நகர செயலாளர்கள் முருகதாஸ், கிராதி கோவிந்தராஜ், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டி காளைப் பாண்டியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வ ணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
- 230 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறை சார்பில் ''விலை நிர்ணயம் என்பதே தொழில் முனைவோர் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக போடிநாயக்கனூர்
சி.பி.ஏ. கல்லூரி, வணிகவியல் பேராசிரியர் சுஜாதா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், விலை நிர்ணயத்தின் யுக்திகள், விலை நிர்ணயத்திற்கான திட்டமிடல், விலை நிர்ணயத்தின் வகைகள்,எவ்வாறு விலை நிர்ணயம் செய்வது? எவ்வாறு இலாபம் மற்றும் நட்டம் இல்லாத விலையைக் கணக்கிடுவது? எந்த விலை நிர்ணயம் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உகந்தது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் அவர் அனைத்து மாணவர்களையும் சுயதொழில் தொடங்க ஊக்கப்படுத்தினார். ஜமுனா தேவி வரவேற்றார். ஜெயராசாத்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி, முனைவர் பாபு பிராங்கிளின், ராஜீவ்காந்தி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 230 வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
சிவகாசி
இமானுவேல் சேகரனின் 65-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள பெரியபொட்டல்பட்டியில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக சிவகாமிபுரம், மாரனேரியில் வைக்கப்ப ட்டிருந்த இமானுவேல் சேகரனின் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பெரியபொட்டல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார்- ரோஷினி தம்பதியினரின் பெண்குழந்தைக்கு ஜெயலட்சுமி என பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிரமணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் சரவணகுமார், கருப்ப சாமிபாண்டியன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜயஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், பள்ளபட்டி ரமேஷ், பிரியா, சசி மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன் செய்திருந்தார். பெரியபொட்டல்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசுந்தரராஜமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் சசிமலர், பள்ளபட்டி ரமேஷ். ஊர் நாட்டாமை ராஜீவ்காந்தி, உதவி நாட்டாமை மான்ராஜ் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மம்சாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தங்கமுனியான்டி, கிளை செயலாளர் சிவக்குமார், சுந்தரராஜமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாரனேரியில் வீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துலுக்கப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, அம்மாபட்டி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் சுப்புகாளை, பொன்னுசாமி, மூவேந்தர், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இமானுவேல்சேகரன் சிலைக்கு பா.ஜ.க. மரியாதை செலுத்தப்பட்டது.
- மாவட்ட துணை தலைவர் ரமேஷ்,பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
இமானுவேல் சேகரன் நினைவு நாளைெயாட்டி ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெரு, மலையடிப்பட்டி, சுந்தரராஜபுரம், இளந்துறை கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் மாவட்ட தொழில் பிரிவு பார்வையாளர் சுகந்தம் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் ஒன்றிய செயலாளர் சிவசக்தி, பட்டியல் அணி பிரிவு ராமசுப்பு, மாவட்ட துணை தலைவர் ரமேஷ்,பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்காபுரம் பகுதியில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் இங்குள்ள மில் மற்றும் தனியார் நிறுவனங்களிலும், சாலை அமைத்தல், கட்டிட வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை சொக்கலிங்காபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருபிரிவாக அவர்கள் கம்பு, கல் போன்றவற்றால் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட 28 வயது மதிக்கத்தக்க வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் சம்பவத்தன்று தனது 4 வயது மகளை வீட்டில் விட்டு, விட்டு பின்புறம் துணிகளை துவைக்க சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற வாலிபர் வீட்டுக்குள் நுழைந்து அங்கு விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் வந்த அவரது தாயார் அய்யனாரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யனாரை கைது செய்தனர்.
- விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியப்பட்டி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் குமரவேல்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியப்பட்டி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 75). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி மூலம் 4 மகள்களும், சந்திரா என்ற மனைவி மூலம் மகன், மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டுக்குள் சென்ற குமர வேல் உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார். அதன்பின் நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பாண்டியன் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குமரவேல் தலைகுப்புற விழுந்த நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குமரவேல் எப்படி இறந்தார்? என பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 15 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
- சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் மேலூர் துரைசாமிபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இது கிருஷ்ணன் கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளது. இந்த கோவிலை பராமரித்து வந்த ஒருவர் அந்த இடத்தை தனக்கு சொந்தம் என்று கூறியுள்ளார். கோவில் இடத்தையும், கோவிலையும் பொது என ஊர் மக்கள் கூடி முடிவெடுத்ததை அடுத்து பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் 15 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் பால்வண்ண நாதன் இறந்தார். அவரது உடலை எடுத்துச் செல்ல ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஊருக்கு கட்ட வேண்டிய வரிப்பணத்தை கட்டினால் மட்டுமே சுடுகாட்டில் இடம் கொடுக்க முடியும் என கூறியுள்ளனர்.
இதனால் உயிரிழந்த பால்வண்ணநாதனின் உடலை எடுத்துச் செல்லும் போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மண்டல துணை தாசில்தார் கோதண்ட ராமன், வருவாய் ஆய்வாளர் தங்கபுஷ்பம், கிராம நிர்வாக அலுவலர் முத்து ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில் ஊருக்கு கட்ட வேண்டிய பணத்தை பால்வண்ண நாதன் குடும்பத்தினர் கட்ட வேண்டும் அல்லது ஊரில் மன்னிப்பு கேட்டால் உடலை எடுத்துச் செல்லலாம் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு சமரசம் எற்பட்டது. பின்னர் இறந்தவர் உடலை எடுத்துச் சென்று நள்ளிரவில் அடக்கம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






