search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இமானுவேல் சேகரன் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
    X

    இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.  

    இமானுவேல் சேகரன் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

    • இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    சிவகாசி

    இமானுவேல் சேகரனின் 65-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள பெரியபொட்டல்பட்டியில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

    முன்னதாக சிவகாமிபுரம், மாரனேரியில் வைக்கப்ப ட்டிருந்த இமானுவேல் சேகரனின் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பெரியபொட்டல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார்- ரோஷினி தம்பதியினரின் பெண்குழந்தைக்கு ஜெயலட்சுமி என பெயர் சூட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிரமணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் சரவணகுமார், கருப்ப சாமிபாண்டியன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜயஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், பள்ளபட்டி ரமேஷ், பிரியா, சசி மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன் செய்திருந்தார். பெரியபொட்டல்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசுந்தரராஜமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் சசிமலர், பள்ளபட்டி ரமேஷ். ஊர் நாட்டாமை ராஜீவ்காந்தி, உதவி நாட்டாமை மான்ராஜ் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் மம்சாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தங்கமுனியான்டி, கிளை செயலாளர் சிவக்குமார், சுந்தரராஜமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாரனேரியில் வீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துலுக்கப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, அம்மாபட்டி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் சுப்புகாளை, பொன்னுசாமி, மூவேந்தர், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×