search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர் மரணம்
    X

    ராஜபாளையம் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர் மரணம்

    • 15 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
    • சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் மேலூர் துரைசாமிபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இது கிருஷ்ணன் கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளது. இந்த கோவிலை பராமரித்து வந்த ஒருவர் அந்த இடத்தை தனக்கு சொந்தம் என்று கூறியுள்ளார். கோவில் இடத்தையும், கோவிலையும் பொது என ஊர் மக்கள் கூடி முடிவெடுத்ததை அடுத்து பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் 15 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் பால்வண்ண நாதன் இறந்தார். அவரது உடலை எடுத்துச் செல்ல ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஊருக்கு கட்ட வேண்டிய வரிப்பணத்தை கட்டினால் மட்டுமே சுடுகாட்டில் இடம் கொடுக்க முடியும் என கூறியுள்ளனர்.

    இதனால் உயிரிழந்த பால்வண்ணநாதனின் உடலை எடுத்துச் செல்லும் போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த மண்டல துணை தாசில்தார் கோதண்ட ராமன், வருவாய் ஆய்வாளர் தங்கபுஷ்பம், கிராம நிர்வாக அலுவலர் முத்து ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவு வரை நடந்த பேச்சுவார்த்தையில் ஊருக்கு கட்ட வேண்டிய பணத்தை பால்வண்ண நாதன் குடும்பத்தினர் கட்ட வேண்டும் அல்லது ஊரில் மன்னிப்பு கேட்டால் உடலை எடுத்துச் செல்லலாம் என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு சமரசம் எற்பட்டது. பின்னர் இறந்தவர் உடலை எடுத்துச் சென்று நள்ளிரவில் அடக்கம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×