என் மலர்
விருதுநகர்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திரைப்பட விழா நடந்தது.
- ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறையின் நியோ ஐடோலா இலக்கிய மன்றம் சார்பில் திரைப்பட விழா நடந்தது. ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.இலக்கிய மன்றத் துணைத் தலைவரும், ஆங்கிலத்துறை, 3-ந் ஆண்டு மாணவருமான பிரதீப் வரவேற்றார். முதல் அமர்வாக உலக சினிமாவில் இருந்து சிறந்த காட்சிகள் திரையிடப்பட்டன. ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா தலைமையில் இந்த திரைப்படங்களின் சிறப்பம்சம் குறித்த கலந்தாய்வுகள் நடந்தன.
உலகத் திரைப்படங்களின் காட்சியமைப்பு, கதையம்சம், இயக்கம், நடிப்பாற்றல் மற்றும் இசை கோர்ப்பு பற்றி மாணவர்கள் கலந்துரையாடினர். திரையிடப்பட்ட காட்சிகளில் தங்களை கவர்ந்த காட்சிகளைப் பற்றி மாணவர்கள் பேசினர். இது மாணவர்களின் விமர்சனத் திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்தது. இலக்கிய மன்ற மாணவர் தலைவரும், முதுகலை 2-ந் ஆண்டு மாணவியுமான மரியா கிரிஸ்டைனா நன்றி கூறினார்.
- விருதுநகர் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள வக்கனாங்குண்டு பகுதியை சேர்ந்தவர் காளிசெல்வி (28). இவர் பட்டமேற் படிப்பு முடித்து கோவையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார்.
6 மாதங்களுக்கு முன்பு விருதுநகர் அய்யனார் நகர் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்து அங்கு தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுக்க சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிசெல்வியை தேடி வருகின்றனர்.
பாறைப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி நாயக்கர் (95). இவர் அப்பகுதியில் உள்ள ஜக்கம்மாள் கோவிலுக்கு தினசரி சென்று வருவது வழக்கம். கடந்த 21-ந் தேதி கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் சக்கையா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமாட்சி (37). இவருக்கு திருமாணமாகிவிட்டது. ஒரே வீட்டில் இருந்த போதும் மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பு வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை தந்தையிடம் கொடுத்துள்ளார். தற்போது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்ட போது அவர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி மூலம் முத்துகாமாட்சியை காணவில்லை.பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என மனைவி உமாமகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கான 12 பசுமை வீடுகளை கலெக்டர் திறந்து வைத்தார்.
- தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அத்திக்கோவில் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்காக ரூ.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 பசுமை வீடுகள் (பசுமை வீடு திட்டத்தின் நிதி தலா ரூ.3 லட்சம், ராம்கோ நிறுவன நிதி தலா ரூ.1 லட்சம்) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலெக்டர் மேகநாதரெட்டி பங்கேற்று பசுைம வீடுகளை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது கல்வியும் சுகாதாரமும் தான். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். அவர்களை நன்றாக கல்வி பயில செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பெற்றோர்களாகிய நீங்கள் தற்போதுள்ள சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். கல்வி ஒன்றே செல்வமாகும். கல்வியின் மூலம் அனைத்தும் பெறலாம். தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து இந்த பகுதியில் இருந்து எதிர்காலத்தில் கலெக்டராகவோ, காவல் துறையில் சிறந்த அதிகாரியா கவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக்க வேண்டும்.
தங்கள் வாழ்வா தாரத்திற்கு பசு மாடுகள் வழங்கவும், மீதமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிந்து முருகன், ஜெய்ந்த் உண்டு உறைவிடப் பள்ளி ராம்கோ மேலாளர் முருகேசன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, வட்டாட்சியர் உமாமகேசுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகரில் 2,150 கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
- கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.49லட்சத்து 8 ஆயிரத்து 679 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.
கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 2,150 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.49லட்சத்து 8 ஆயிரத்து 679 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், அமைப்பு சாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 1.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
மேலும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாக 15.9.2009 முதல் கணினி மயமாக்கப்பட்டன. இவ்வாறு அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இலக்கிய மன்ற சொற்பொழிவு நடந்தது.
- உதவிப்பேராசிரியர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத் துறையின் நியூ ஐடோலா, இலக்கியமன்றத்தின் சார்பில் தொடர் சொற்பொழிவு "இலக்கிய விமர்சனம் மற்றும் கோட்பாடு" என்ற தலைப்பில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் துறைத்தலைவர் ஜான் சேகர் கலந்து கொண்டார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கிய விமர்சனம் மற்றும் கோட்பாடுகள் என்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமான அறிவுசார் இயக்கமாக இருக்கிறது.
ஆங்கில இலக்கிய விமர்சனம் கிரேக்க, ரோமானிய தத்துவவா திகளான பிளட்டோ, அரிஸ்டாட்டில்,ஹோரேஸ் மற்றும் லஜ்ஜானியஸ் போன்ற வர்களின் கருத்துகளால் கட்டமைக்க ப்பட்டது. ஆங்கில இலக்கிய விமர்சனம் சிட்னி, ட்ரைடன், ஜான்சன், வோட்ஸ்வொர்த் மற்றும் கீட்ஸ் போன்ற எழுத்தாளர்களின் பங்களிப்பால் வளர்ந்தது.
ஆங்கில இலக்கிய விமர்சன தந்தையாக கொண்டாடப்படும் மேத்யூ அர்னால்டு "தொடுகல் முறை" என்ற புதிய விமர்சன முறையை அறிமுகம் செய்தார். 20-ம் நூற்றாண்டின் புதிய விமர்சன கொள்கைகள் மேற்கு உலகில் பிரபலமானது. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பலவித விமர்சன கோட்பாடுகளான மனிதம் சார்ந்த இலக்கிய கோட்பாடுகள், கட்டமைப்பு வாதம் மற்றும் பின் கட்டமைப்புவாதம் போன்ற கோட்பாடுகள் இலக்கிய உலகில் ஆளுமை செய்வதாக கூறினார்.
ஆங்கிலத் துறைத்த லைவர் பெமினா வரவேற்றார். உதவிப்பேராசிரியர் ஸ்வப்னா நன்றி கூறினார்.
- பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்றார்.
- முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளத்தை சேர்ந்தவர் தங்கரத்தினம் (43), காய்கறி வியாபாரி. இவர் சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் பகுதியில் வியாபாரம் செய்ய சென்றார். அப்போது வசந்தாதேவி (73) என்ற மூதாட்டி இவரிடம் மொச்சைக்கடலை வாங்கி உள்ளார்.
பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றபோது தங்கரத்தினமும் அவர் பின்னால் சென்று நகையை பறிக்க முயன்றார். அப்போது வசந்தாதேவி, ''திருடன் திருடன்'' என்று கூச்சலிட்டார். கூச்சல் சத்தத்தை கேட்ட உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வெளிகதவை பூட்டிவிட்டனர்.
இதனால் தங்கரத்தினம் வசமாக சிக்கி கொண்டார். பின்னர் அவரை சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ்காரர்கள் முனிபாண்டி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோர்ட்டு அழைத்து சென்று போலீஸ் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.
சிவகாசி-களத்தூர் சாலையில் அவர்கள் வந்த போது தங்கரத்தினம் தப்பிப்பதற்காக முனிபாண்டியின் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீஸ்காரர் முனிபாண்டி மற்றும் பின்னால் வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த மணிவண்ணன் ஆகியோர் தங்கரத்தினத்தை பிடித்தனர். உடலில் காயங்களுடன் இருந்த தங்கரத்தினம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸ்காரர் முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சாத்தூர் நகராட்சியில் ரூ.60.73 லட்சத்தில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
- தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் ரூ.60.73 லட்சத்தில் விளை யாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்கா திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பூங்காவை திறந்து வைத்தார்.
சாத்தூர் நகராட்சியில் பெரியார் நகர் வார்டு 1-ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.23 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பூங்காவும், வார்டு 4-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய புதிய பூங்காவும் என மொத்தம் ரூ.60.73 லட்சம் மதிப்பிலான 2 பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், முருகேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
- தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணி யிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள வேண்டிய நபர்கள் நல்ல உடல் திறன் மற்றும் கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வயது 18 முதல் 45 வயது உடையவராகவும், எந்தவித குற்றப்பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
சாதி, மதம், அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது. அரசு ஊழியராக இருந்தால் அவர்கள் தங்கள் துறைசார்ந்த அதிகாரியிடம் தடையில்லாச்சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊர்காவல் படையில் வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவல் துறையினரின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். ஊர்காவல் படை வீரர்க ளுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும். அவ்வாறு பணிபுரியும் ஊர்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.560 வழங்கப்படும்.
நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கல்வி தகுதிக்கான அசல் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் இவைகளுக்குண்டான நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் புகைப்படம் அனைத்தும் எடுத்து வர வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 255 மாணவர்களிடம் இருந்து ரூ.966.80 லட்சம் கல்விக்கடன் பெற விண்ணப்பம் வந்துள்ளது என்று கலெக்டர் கூறினார்.
- ரூ.174.46 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வட்டார அளவிலான சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது.
சாத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த மாணவ ர்களுக்கு சவுடாம்பிகை பொறியியல் கல்லூரியிலும், ராஜ பாளையம் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ராம்கோ பொறியியல் கல்லூரியிலும், ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியிலும், வத்தி ராயிருப்பு வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கலசலிங்கம் பல்கலைக்க ழகத்திலும், காரியாபட்டி வட்டாரத்தை சேர்ந்த மாண வர்களுக்கு தனி யார் கல்லூரியிலும், நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பாலிடெக்னிக்கிலும் முகாம்கள் நடந்தன.
இதில் 156 மாணவ- மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.486.06 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. 15 மாணவ- மாணவிகளுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.75.34 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டன.மேலும், சிவகாசி வட்டாரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் நடந்த முகாமில், 99 மாணவ- மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.480.74 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. 14 மாணவ, மாணவிகளுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.99.12 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கல்விக்கடன் முகாம்களில் 255 மாணவ மாணவிகளிடம் இருந்து மொத்தம் ரூ.966.80 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது.
29 மாணவ- மாணவி களுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.174.46 லட்சம் மதிப்பிலான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காளீஸ்வரி கல்லூரியில் தபால் தலை கண்காட்சி நடந்தது.
- கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தபால் துறை விருதுநகர் பிரிவு சார்பில் ''தபால் தலை சிறப்புக் கண்காட்சி'' தொழில்நுட்ப நூலகத்தில் நடந்தது.
இந்த கண்காட்சியின் முதன்மை நோக்கமாக தபால் தலை விழிப்புணர்வு மற்றும் தபால் துறையின் முக்கியத்துவமும் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி மாணவர்களிடமும், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களிடமும் பேசினார்.
கண்காட்சியில் தபால் துறை அலுவ லர்களும் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இதில் சுமார் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டு தபால் தலைகளை பார்வை யிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி செய்திருந்தார்.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ராமசாமி ராஜா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நகர வடக்கு அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், தெற்கு செயலாளர் பரமசிவம், மாவட்ட பேரவை செயலாளர் எம்.என்.கிருஷ்ணராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ். என். பாபுராஜ் தலைமையில் தெற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, நவரத்தினம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தென்காசி சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் அழகுராணி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் வனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோகசேகரன், மேலப்பாக்கம் கரிசல்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் சோலைமலை, முன்னாள் கவுன்சிலர் குருசாமி, சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராதா கிருஷ்ணா ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
சாத்தூரை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போது சாத்தூர் ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த கார்த்தி (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் அடிக்கடி வாந்தி எடுத்ததால் பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை போக்சோவில் கைது செய்தனர்.
இதேபோல் வ.புதுபட்டியை சேர்ந்தவர் 16 வயது பிளஸ்-2 மாணவி. இவரை அரசு மருத்துவமனைக்கு உடல்நல பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மாணவியிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த அறிவரசன் மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.






