ரூ.60.73 லட்சத்தில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்கா

சாத்தூர் நகராட்சியில் ரூ.60.73 லட்சத்தில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பூங்கா கல்வெட்டை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.
பூங்கா கல்வெட்டை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.
Published on

சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் ரூ.60.73 லட்சத்தில் விளை யாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்கா திறப்பு விழா நடந்தது.

கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பூங்காவை திறந்து வைத்தார்.

சாத்தூர் நகராட்சியில் பெரியார் நகர் வார்டு 1-ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.23 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பூங்காவும், வார்டு 4-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய புதிய பூங்காவும் என மொத்தம் ரூ.60.73 லட்சம் மதிப்பிலான 2 பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

திறப்பு விழாவில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், முருகேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com