search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "green house"

    • வத்திராயிருப்பு அருகே மலைவாழ் மக்களுக்கான 12 பசுமை வீடுகளை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அத்திக்கோவில் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்காக ரூ.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 பசுமை வீடுகள் (பசுமை வீடு திட்டத்தின் நிதி தலா ரூ.3 லட்சம், ராம்கோ நிறுவன நிதி தலா ரூ.1 லட்சம்) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் மேகநாதரெட்டி பங்கேற்று பசுைம வீடுகளை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது கல்வியும் சுகாதாரமும் தான். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். அவர்களை நன்றாக கல்வி பயில செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் கல்விக் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    பெற்றோர்களாகிய நீங்கள் தற்போதுள்ள சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். கல்வி ஒன்றே செல்வமாகும். கல்வியின் மூலம் அனைத்தும் பெறலாம். தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து இந்த பகுதியில் இருந்து எதிர்காலத்தில் கலெக்டராகவோ, காவல் துறையில் சிறந்த அதிகாரியா கவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக்க வேண்டும்.

    தங்கள் வாழ்வா தாரத்திற்கு பசு மாடுகள் வழங்கவும், மீதமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிந்து முருகன், ஜெய்ந்த் உண்டு உறைவிடப் பள்ளி ராம்கோ மேலாளர் முருகேசன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, வட்டாட்சியர் உமாமகேசுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்காக 08-01-2022 அன்று வேலை உத்தரவினை நேரில் சென்று வழங்கினார்.
    • புதிதாக கட்டப்பட்ட வீட்டினை திறந்து வைத்து, சாவியினை பானுமதியிடம் ஒப்படைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஆழிகுடி ஊராட்சிக்குட்பட்ட முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பானுமதி என்பவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் பழுதடைந்து ஆபத்தான நிலையிலுள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    இதனை அறிந்த கலெக்டர் செந்தில்ராஜ் கடந்த 29-12-2021 அன்று பானுமதி வீட்டிற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பானுமதி வசித்து வரும் வீடு 35 ஆண்டு காலம் பழமையான வீடு என்பதாலும், வீடு இருக்கும் மனைக்கு பட்டா இல்லை என்பதை கேட்டறிந்த கலெக்டர் வருவாய் துறை வாயிலாக உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் பானுமதிக்கு புதிய வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    மேலும், அவர்கள் வசிப்பதற்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்காக 08-01-2022 அன்று வேலை உத்தரவினை நேரில் சென்று வழங்கினார். தொடர்ந்து வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று முழுமை அடைந்ததையொட்டி, கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று புதிதாக கட்டப்பட்ட வீட்டினை திறந்து வைத்து, சாவியினை பானுமதியிடம் ஒப்படைத்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜா, திருவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகேஷ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×