என் மலர்
விருதுநகர்
- இளம்பெண்கள் 3 பேர் மாயமானாகள்.
- இதுகுறித்து விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு கவிதா (19) என்ற மகள் உள்ளார். கவிதா எலெக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடையில் உடன் வேலைபார்க்கும் செல்வக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் காலை யில் வழக்கம்போல வேலைக்குச் சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் ராணி அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மரியபுஷ்பவள்ளி (49). இவரது மூத்த மகள் எம்.எஸ்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு திருமண ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் மகள் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு மரிய புஷ்பவள்ளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த அவர் சுவற்றில் பலமாக பலமுறை முட்டி யுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு மரிய புஷ்பவள்ளி மகளை அழைத்துச் சென்றார்.
அப்போது மருந்துச்சீட்டு வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மரியபுஷ்பவள்ளி அளித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் சூசை முத்து (38).இவர்து மகள் சாத்தூரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சூசை முத்து அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்று கவர்னர் தெரிவித்து இருக்கிறார்.
- விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கிராமிய திருவிழா நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். மேலும் அங்கு நடந்த பாரம்பரிய விளையாட்டு போட்டியில் சிறுவர்களோடு அன்புமணி ராமதாஸ் பம்பரம் விட்டு விளையாடினார். முன்னதாக நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அவரை பாட்டாளி மக்கள் கட்சியினர் குதிரை வண்டியில் பாரம்பரிய முறைப்படி அழைத்து வந்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்று கவர்னர் தெரிவித்து இருக்கிறார். இது அவரது வேலை இல்லை. கவர்னருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை.
விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். வரும் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிச்சயம் வரும். அதை சமாளிக்க தேவையான நடவடிக்கையை அரசாங்கம் இப்போதே செய்ய தொடங்க வேண்டும். நீர்மேலாண்மை திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் மீது புகார் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சீட்டு கம்பெனியில் சேர கொடுத்த ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் சுப்பையா தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 35). இவரது கணவர் ஜெயக்குமார். சீட்டு கம்பெனியில் வேலை பார்க்கும் ரோசல்பட்டியை சேர்ந்த புவனேசுவரி என்ற பெண், காளீஸ்வரிக்கு அறிமுகமாகி உள்ளார். அவர் காளீஸ்வரியிடம் ஆசைவார்த்தை கூறி சீட்டு திட்டத்தில் சேர வைத்துள்ளார்.
அதற்காக ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காளீஸ்வரி கொடுத்துள்ளார். அந்த திட்டத்தில் 3 மாதங்கள் மட்டும் பணம் கட்டி விட்டு நிறுத்தி விட்டார். இந்த நிலையில் ரூ.8 லட்சம் சீட்டு பணம் பெற்று திரும்ப செலுத்தாமல் உள்ளதாக அந்த சீட்டு கம்பெனியில் இருந்து காளீஸ்வரிக்கு தகவல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கம்பெனிக்கு சென்று விசாரித்துள்ளார். அங்கு காளீஸ்வரி பெயரில் வங்கி கணக்கு ஒன்றில் 2 திட்டங்களில் ரூ.8 லட்சம் பரிமாற்றம் செய்துள்ள தகவல்களை தெரி வித்துள்ளனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட வங்கிக்கு சென்று விசாரித்தபோது அங்கு காளீஸ்வரி பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு ரூ.8 லட்சம் பெறப்பட்டு அந்த கணக்கு மூடப்பட்டு விட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து விருதுநகர் மேற்கு போலீசில் சீட்டு கம்பெனியில் சேர கொடுத்த ஆவணங்களை பயன்படுத்தி பணம் மோசடி செய்துள்ளதாக புவனேசுவரி, அழகர்சாமி, முருகானந்தம், மணிமாறன் ஆகிய 4 பேர் மீது காளீஸ்வரி புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவர்கள் இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு படிக்க வேண்டும் என்று கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
- சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து செல்லும்போது அவர்க ளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த புத்தாண்டில் மாண வர்கள் தங்களுக்கென்று தனி ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போது ஒரு தெளிவான நோக்கத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.
கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் இலக்கை நோக்கி நகருவதற்கு எளிதாக இருக்கும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் உள்ளது போல், முன்காலத்தில் நல்வழிகாட்டுதலுக்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் தற்போது உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டுவதற்கு தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் பட்டப்படிப்பு படித்து முடித்த பிறகு இந்தியாவில் நிறைய மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளது. இந்த பல்கலைக் கழகங்களின் சேர்வதற்கு போட்டித் தேர்வுகள் உண்டு. பட்டப்படிப்பு படிக்கும் போதே இந்த தேர்வுகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும், இந்த பல்கலைகழகங்களில் சேர்ந்து பயிலும் போது வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம், இந்திய ஆட்சிப் பணித்தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.
பின்னர் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக பிரத்யேகமாக தயாரிக்க ப்பட்ட போட்டித் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டினை வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்க ளிடையே நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மகா லட்சுமி, ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின ருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் ஞானபிரபா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாலினி, உதவி பேரா சிரியர் (எஸ்.எப்.ஆர் கல்லூரி) நந்தினி, இளம் நிபுணர் சுமதி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கல்பனா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- ராஜபாளையம் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
- “வளமான பாரதத்திற்கு நலமான இளைஞர்கள்” என்ற தலைப்பில் 7 நாள் சிறப்பு முகாம் அ.முத்துலிங்காபுரம் கிராமத்தில் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பில் "வளமான பாரதத்திற்கு நலமான இளைஞர்கள்" என்ற தலைப்பில் 7 நாள் சிறப்பு முகாம் அ.முத்துலிங்காபுரம் கிராமத்தில் நடந்தது.
பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் விசுவநாதன், ஊர் நாட்டாமை மற்றும் ஊர்ப்பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பிரான்சிஸ் அருள்ராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் ரமேஷ், உதவித் தலைமையாசிரியர் இளையபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கிராமத்தில் சாலை யோரம் முட்புதர்களை அகற்றுதல், சுற்றுப்புறத்தூய்மை, கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தொடர்பு அலுவலர் செய்யது முகம்மது ஆரீப் தலைமையில், இயற்கைப் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் சத்ய சாயி அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது.
அரவிந்த் ஹெர்பல் லேப்ஸ் நிறுவனம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. அதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாமில், மாணவர்களும் நாட்டு நலப்பணித் திட்டமும் என்னும் தலைப்பில் தலைமையாசிரியர், அன்பின் வலிமை என்னும் தலைப்பில் சிவக்குமார், எழுமின் விழிமின் என்னும் தலைப்பில் கருத்தாளர்.பழனியப்பன், ''நிழல்களும் நிஜங்களும்'' என்ற தலைப்பில் மாரியப்பன், யோகக்கலை என்னும் தலைப்பில் உடற்கல்வி இயக்குநர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
ஆசிரியர் விஜயானந்தி கிராம பெண்களுக்குக் கலைப்பயிற்சி வழங்கினார். நிறைவு நாளன்று சங்கமம் பசுமை இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவித் திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரான்சிஸ் அருள்ராஜ், பழனிவேல் ராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வை உடனே தொடங்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்தது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது.
அதில் ஏராளமான சங்கு வளை யல்கள், அயல் நாட்டு வர்த்தகத்திற்கு பயன்படுத் தக்கூடிய முத்திரைகள், சதுரங்க கட்டைகள், சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சில்வட்டுகள், விசில், அணிகலன்கள், பெண்கள் அணியக்கூடிய தங்க ஆபரணங்கள், மண்பானைகள், தங்க காசுகள், சூது பவளம் தக்கலி, சுடுமண்ணால் ஆன பொம்மைகள், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பண்டைய கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 15 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதத்தில் பணிகள் நிறைவடைந்தது. முதலாவது அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விருது நகரில் நடந்த புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.
அதை ஏராளமானோர் பார்வையிட்டனர். புத்தக கண்காட்சியில் சில பொருட்கள் மட்டுமே பார்வைக்கு வைக்கப் பட்டன. முழுமையாக எடுக்கப்பட்ட பொருட்களை சிவகாசி அல்லது வெம்பக் கோட்டையில் அருங்காட்சியமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
2-வது கட்ட அகழாய்வு பணி ஜனவரி மாதத்தில் தொடங்கப்படலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இன்னும் 2-வது கட்ட பணி தொடங்கப்படாமல் உள்ளது. எப்போது தொடங்கும் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை.
2-வது கட்டப்பணி தொடங்கினால் மேலும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் கிடைப்பதுடன் பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2-ம் கட்ட அகழாய்வை உடனே தொடங்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
- மாணவர்களுக்கான சாப்ட்வேர் பயிற்சியை அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் அளித்தார்.
- சுமார் 250 மாணவ-மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட பேராசி ரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறையின் ''அசோசியேஷன் பார் கம்ப்யூட்டிங மெஷினரி'' (ஏ.எல்.எம்.) என்ற அமைப்பும் மின்னனு மற்றும் தொலைத் தொடர்பியல் துறையின் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பும் இணைந்து 2 பயிற்சி பட்டறையை ''கிரியேட்டிவ் கோடிங்- ஜாவா ஸ்கிரிப்ட்'' என்ற தலைப்பில் நடந்தது.
பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராமதிலகம், மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் துறைத் தலைவர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக அமெரி க்காவின் டாலஸ் மாகா ணத்தின், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் துறையின் இயக்குநர் ஜெய்வீராசாமி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். ஜாவா ஸ்கிரிப்ட் என்ற புேராகிராமிங் மூலமாக கோடிங் எழுதுவதற்கான எளிய வழிமுறைகளை எடுத்து கூறினார்.
இதில் சுமார் 250 மாணவ-மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட பேராசி ரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்ரமணியன், பேரா சிரியர்கள் அருண்சண்முகம், கார்த்திகேயன், பேராசி ரியை தனம் மற்றும் கணிப்பொறியியல் துறை மற்றும் மின்னனு ெதாலைத் தொடர்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- சுகாதாரத்தை கடைபிடிக்கும் அங்கன்வாடிகள், பள்ளிகளுக்கு மாதந்தோறும் பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
- ஊர் தலைவர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போன்றோர் சோப்புகள் வழங்கி இந்த திட்டத்தை ஊக்குவிக்கலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்க ளிலும் முக்கியமான நேரங்களில் கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சானிடேசன் பர்ஸ்ட் இணைந்து அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார வங்கிகள் (Soap Bank) வழங்குதல் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கி னார். தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மையங்க ளுக்கு சுகாதார வங்கிகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டிகளை வழங்கினர்.
பின்னர் அமைச்சர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி, சுகா தாரம் ஆகிய 2-ம் 2 கண்களாக பாவித்து, கல்வியையும், சுகாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
கைகளை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்வது குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க எளிய வழிமுறையாகும். சுகாதார வங்கிகளில், உங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார பெட்டகத்தில் சோப்பு திரவம், கட்டி சோப்புகள் மற்றும் சோப்பு காகிதங்கள், கை கழுவும் வழிமுறைகள் கொண்ட ஸ்டிக்கர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை குழந்தைகளிடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.
எல்லா கை கழுவும் இடங்களிலும் எப்போதும் சோப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் பொருட்கள் உபயோகித்துக் குறையும் பொழுது அவற்றை மீண்டும் நிரப்பும் முயற்சியில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஈடுபட வேண்டும்.
குழந்தைகளின் பிறந்த நாட்கள் போன்றவற்றில் அவர்களை வங்கியில் ஒரு சோப்பு கட்டி சேர்க்க வைக்கலாம். குழந்தைகள் தினம், கை கழுவும் தினம், போன்ற சிறப்பு நாட்களில் அங்கன் வாடிகள், பள்ளிகளே சோப்பு வங்கிகளை மீண்டும் நிரப்பலாம்.
ஊர் தலைவர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போன்றோர் சோப்புகள் வழங்கி இந்த திட்டத்தை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் கை கழுவுதலின் முக்கியத் துவத்தை குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோரும் கற்றுக் கொள்வார்கள். சுகாதார வங்கியிலுள்ள பொருட்களுக்கான கணக்கீடு அங்கன்வாடி பணியாளர் அல்லது பள்ளியாக இருப்பின் இரு மூத்த மாணவர்களால் பதிவு செய்யப்படும்.
கை கழுவ வழங்கப்படும் சோப்புகளும், பெறப்பட்ட சோப்புகளும் கணக்கு வைக்கப்படும். மேலும், கை கழுவும் பழக்கத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், படங்கள் ஆகியவற்றை சேர்க்கலாம்.
சுகாதார வங்கி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளுக்கு சானிடேசன் பர்ஸ்ட் மூலமாக மாதந் தோறும் பரிசுகளும், ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
- ராஜபாளையம் அருகே உள்ள என். புதூர் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த தின விழா நடந்தது.
- தே.மு.தி.க.வினரும், தங்கராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராஜபாளையம்
வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த தின விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள என். புதூர் கிராமத்தில் நடந்தது. ஊர் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தினர் மற்றும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
விருதுநகர் மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார், வக்கீல் பத்மாவதி கண்ணன் முன்னிலையில் ஏராளமான அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் எம்.பி.லிங்கம் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்தனர். ம.தி.மு.க. சார்பில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் ஞானராஜ் தலைமையில் தி.மு.க.வினரும், ஒன்றிய செயலாளர் ஹாஜா ஷெரிப் தலைமையில் தே.மு.தி.க.வினரும், தங்கராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- ராஜபாளையத்தில் தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளத்தின் மாநில குழு கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது.
- பொதுச் செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சக்திவேல் வரவேற்றார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளத்தின் மாநில குழு கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சக்திவேல் வரவேற்றார்.
அரசு உத்தரவின்படி அனைத்து பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் ஆரம்பகால முதல் தினக்கூலியாக ரூ.493- வழங்க வேண்டும், 25 ஆண்டு காலமாக பஞ்சாலை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாத நிலையில் உடனடியாக கூலி உயர்வு வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பிரதிநிதிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர். மாநிலத் துணைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 1600 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கம்மாபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனையிட்டபோது அதில், 40 மூடைகளில் 1,600 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், மதுரை அவனி யாபுரத்தை சேர்ந்த வினோத்பாண்டி (35), ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த காவேரிமணி (40) என தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் ரேசன் அரிசி கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகரில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் அந்த வழியாக செல்வோரை விரட்டிச்சென்று கடிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் பெரியகிணற்று தெருவில் வெறிநாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட னர். நாள்தோறும் விருதுநகரில் நாய் கடிக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருவில் விளையாடும் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






