என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சுகாதாரத்தை கடைபிடிக்கும் அங்கன்வாடிகள், பள்ளிகளுக்கு மாதந்தோறும் பரிசு
- சுகாதாரத்தை கடைபிடிக்கும் அங்கன்வாடிகள், பள்ளிகளுக்கு மாதந்தோறும் பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
- ஊர் தலைவர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போன்றோர் சோப்புகள் வழங்கி இந்த திட்டத்தை ஊக்குவிக்கலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்க ளிலும் முக்கியமான நேரங்களில் கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சானிடேசன் பர்ஸ்ட் இணைந்து அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார வங்கிகள் (Soap Bank) வழங்குதல் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கி னார். தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மையங்க ளுக்கு சுகாதார வங்கிகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டிகளை வழங்கினர்.
பின்னர் அமைச்சர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி, சுகா தாரம் ஆகிய 2-ம் 2 கண்களாக பாவித்து, கல்வியையும், சுகாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
கைகளை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்வது குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க எளிய வழிமுறையாகும். சுகாதார வங்கிகளில், உங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார பெட்டகத்தில் சோப்பு திரவம், கட்டி சோப்புகள் மற்றும் சோப்பு காகிதங்கள், கை கழுவும் வழிமுறைகள் கொண்ட ஸ்டிக்கர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை குழந்தைகளிடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.
எல்லா கை கழுவும் இடங்களிலும் எப்போதும் சோப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் பொருட்கள் உபயோகித்துக் குறையும் பொழுது அவற்றை மீண்டும் நிரப்பும் முயற்சியில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஈடுபட வேண்டும்.
குழந்தைகளின் பிறந்த நாட்கள் போன்றவற்றில் அவர்களை வங்கியில் ஒரு சோப்பு கட்டி சேர்க்க வைக்கலாம். குழந்தைகள் தினம், கை கழுவும் தினம், போன்ற சிறப்பு நாட்களில் அங்கன் வாடிகள், பள்ளிகளே சோப்பு வங்கிகளை மீண்டும் நிரப்பலாம்.
ஊர் தலைவர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போன்றோர் சோப்புகள் வழங்கி இந்த திட்டத்தை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் கை கழுவுதலின் முக்கியத் துவத்தை குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோரும் கற்றுக் கொள்வார்கள். சுகாதார வங்கியிலுள்ள பொருட்களுக்கான கணக்கீடு அங்கன்வாடி பணியாளர் அல்லது பள்ளியாக இருப்பின் இரு மூத்த மாணவர்களால் பதிவு செய்யப்படும்.
கை கழுவ வழங்கப்படும் சோப்புகளும், பெறப்பட்ட சோப்புகளும் கணக்கு வைக்கப்படும். மேலும், கை கழுவும் பழக்கத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், படங்கள் ஆகியவற்றை சேர்க்கலாம்.
சுகாதார வங்கி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளுக்கு சானிடேசன் பர்ஸ்ட் மூலமாக மாதந் தோறும் பரிசுகளும், ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்