ரேசன் அரிசி பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 1600 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
ரேசன் அரிசி கடத்தி கைதான 2 பேர்.
ரேசன் அரிசி கடத்தி கைதான 2 பேர்.
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கம்மாபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனையிட்டபோது அதில், 40 மூடைகளில் 1,600 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், மதுரை அவனி யாபுரத்தை சேர்ந்த வினோத்பாண்டி (35), ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த காவேரிமணி (40) என தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் ரேசன் அரிசி கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com