என் மலர்
விருதுநகர்
- ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெறும் யானையை வனத்துறையினர் பராமரிக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
- யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்த வர் சேக் முகமது. இவர் 56 வயதான லலிதா என்ற யானையை வளர்த்து வருகிறார்.
கடந்த ஜனவரி 1-ந் தேதி இந்த யானை தேனி மாவட்டத்தில் இருந்து கோவில் விழாவிற்காக விருதுநகர் கொண்டு வரப்பட்டது. அந்த யானையை லாரியில் இருந்து இறக்கியபோது தடுமாறி விழுந்தது. இதில் யானைக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த வனத்துறையினர், யானையை உரிமையாளர் ராஜபாளையத்திற்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்கவில்லை. அந்த யானையை விருதுநகர் ரெயில்வே காலனி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கட்டிவைத்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அதன் காயங்கள் ஆறாமல் உள்ளது என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்குமாறு வனத்துறை தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி, மேகமலை வனச்சரகர் துணை இயக்குநர் திலிப்குமாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அந்த யானையை பராமரிப்பதற்கு ஆகும் செலவை யானையின் உரிமையா ளரிடம் இருந்து அபராதமாக பெற்று விருதுநகரிலேயே யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்தநிலையில் விருதுநகரில் சிகிச்சை பெற்று வரும் யானையை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டார். அப்போது அவர் யானையின் பராமரிப்பு, அதற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து பாகன்களிடம் கேட்டறிந்தார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போக்குவரத்து விதிகள் குறித்த கண்காட்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு கழக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றம் ''போக்குவரத்து விதிகள்'' என்ற தலைப்பில் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் போக்குவரத்து விதிகள் அடங்கிய விளக்கப்படம், போக்குவரத்து சின்னங்கள் மற்றும் வண்ணங்களுடன் கூடிய போக்குவரத்து சிக்னல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் அபராதம், போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள், போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் ஆகிய விவரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை கல்லூரி முதல்வர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 மாணவ-மாணவிகள் பார்வையிட்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு கழக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி செய்திருந்தார்.
- நூற்பாலை தொழிலாளர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் கீழ ராஜகுல ராமன் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழி லாளர்களை வேன் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவேனை தென்காசி அருகே உள்ள மலையன்குளத்தைச் சேர்ந்த சங்கர்மணி(வயது 35) என்பவர் ஓட்டி வருகிறார்.
அவர் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலா ளர்களை வேனில் அழைத்து சென்றார்.
அந்த வேன் வன்னி யம்பட்டி-ஆலங்குளம் இடையே வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், வேன் மீது மோதியது. அப்போது வேன் டிரைவர் பிரேக் போட்டார். இதில் வேனுக்குள் இருந்த தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி படுகாயம் அடைந்தனர்.
பலவேசம் என்பவர் மனைவி வேலுத்தாய் (50), மாரீஸ்வரி(39), மணி(55), காளியம்மாள் (40), கலாராணி (32) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேலுத்தாய் கவலைக்கிடமாக உள்ளதால் அவர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேன் டிரைவர் சங்கர் மணி, கற்பகராஜ் மற்றும் 8 பெண் தொழிலாளர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் கீழ ராஜகுல ராமன் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அதிக வட்டி தருவதாக கூறி அருப்புக்கோட்டையை சேர்ந்த 10 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
- தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வாழவந்தான். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் பால முருகன், வீரமணி, தவமணி தேவி, பாண்டி, கோவிந்த ராஜ், வேணி உள்ளிட்டவர்க ளுடன் வாழவந்தான் நம்பிக்கை தரும் வகையில் பழகி உள்ளார்.
அப்போது அவர் மதுரை பொன்மேனியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில், தான் முதலீடு செய்ததாக வும், அவர்கள் அதிக வட்டி தருவதால் தற்போது வீடு, கார் மற்றும் வசதியாக வாழ்வதாகவும் அவர்களி டம் தெரிவித்துள்ளார். சிறிய கூட்டம் போல் ஏற்பாடு செய்து அவர்க ளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார்.
இதையடுத்து பாலமுரு கன் உள்ளிட்டோர் மதுரை நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ளனர். முதலில் சில மாதங்கள் வட்டி சரியாக கிடைத்ததால் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மொத்தம் 10 பேர் ரூ.57 லட்சம் அளவுக்கு முதலீடு செய்துள்ளனர். அதன்பிறகு சில மாதங்களுக்கு மட்டுமே வட்டி வந்துள்ளது.
ஆனால் தொடர்ச்சியாக வட்டி கிடைக்கவில்லை. இதனால் முதலீடு செய்த வர்கள், தாங்கள் பணம் கட்டிய நிதி நிறுவனத்திற்கு போன் செய்து பார்த்துள்ள னர். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் நேரடியாக நிறுவ னத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அந்த நிதி நிறுவனம் பூட்டிக் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வாழவந்தான் வீட்டிற்கு சென்று அதுகுறித்து தெரி வித்துள்ளனர். ஆனால் அவர் சரியாக பதில ளிக்க வில்லை. இந்தநிலையில் மீண்டும் அவரது வீட்டிற்கு முதலீடு செய்தவர்கள் விசாரிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது வீட்டிலிருந்த வாழவந்தானின் 2-வது மனைவி பவித்ரா மற்றும் திருப்பதி ஆகியோர் இது குறித்து தங்களிடம் வந்து விசாரிக்க வேண்டாம் என்றும், மீண்டும் வந்து விசாரித்தால் தங்களை கொலை செய்ய வந்ததாக போலீசிடம் புகார் அளித்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து தனியார் நிதி நிறுவன மோசடி குறித்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். நிலம் மற்றும் நகைகளை அடமானம் வைத்தும், விற்றும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், தற்போது நிதி நிறுவனம் மூடப்பட்ட தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வும், அதனால் தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி பணம் கட்டியவர்களிடம் தனியார் நிதி நிறுவனம் ரூ57 லட்சம் மோசடி செய்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜபாளையம் பத்மாவதி ஆட்டோ சர்வீசில் புதிய வகை பெட்ரோல், டீசல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- கே.டி.ஆர்.பல்க் ரங்கசாமி, எம்.கே.எஸ்.பல்க் அசின் காதர், ரபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள பத்மாவதி ஆட்டோ சர்வீசில் 95 ஆக்டேன் எக்ஸ்.பி. பெட்ரோல் மற்றும் டீசல் அறிமுக விழா மேனேஜிங் டைரக்டர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. நிர்வாக இயக்குநர் என்.கே.ராம்விஷ்ணு ராஜா வரவேற்றார். என்.கே.ராம்வெங்கட் ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் விருதுநகர் மாவட்டப் பொது மேலாளர் ஸ்ரீதர், புதிய 95 ஆக்டேன் எக்ஸ்.பி. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கியதுடன் அவற்றின் விற்பனையை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், சாதாரண பெட்ரோல், டீசலை விட அதிக ஆக்டேன் மதிப்புடையது. 20 சதவீதத்திற்கு மேல் என்ஜின் சக்தியை அதிகரிக்கிறது. அதிகமான வெப்ப உமிழ்வைக் குறைத்து எரிபொருள் சிக்கனத்தை 3.95 சதவீதம் மேம்படுத்துகிறது, சிறந்த எரிப்பானாக விளங்குகிறது, ஒலி மாசுபாட்டை குறைத்து எரிபொருள் சிக்கனத்தை 5-ல் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்கிறது. இதில், அதிக மைலேஜ், குறைந்தபுகை, சொகுசான டிரைவிங், சுத்தமான என்ஜின், உடனடி பிக்அப் போன்ற சிறப்பம்சங்கள் நிறைய இருப்பதால் இன்றைய காலகட்டத்திற்கு மிக மிக அவசியமானதாகும் என்றார்.
விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் விருதுநகர் மாவட்ட துணை மேலாளர் வம்சி கிருஷ்ணன் வாகனங்களை சிறப்பாகவும் எளிமையாகவும் பராமரிக்க வேண்டிய முறைகள் குறித்து பேசினார். ஏ.கே.டி.ஆர்.பல்க் ரங்கசாமி,
எம்.கே.எஸ்.பல்க் அசின் காதர், ரபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- சிவகாசியில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.
- பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
சிவகாசி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி சிவகாசி சிவன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்குமாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான ராஜேந்தி ரபாலாஜி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிவகாசி சிவன் கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் சாமி என்ற ராஜா அபினேஷ்வரன், முன்னாள் நகர செயலாளர் அசன்ப தூரூதீன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செ யலாளர் வேண்டுராயபுரம் சுப்பிர மணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ரிசர்வ்லை யன் தேவர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட மாணவரணி அஜய்கிருஷ்ணா மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
- ஆலைகளில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய மாணவர்கள் தீர்வு காண வேண்டும் என ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
- சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 18-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பலர் அறக்கட்டளைகள் தொடங்கி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் காமராஜரே முன்னோடியாக திகழ்கிறார். பட்டம் பெற்ற நீங்கள் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.
நீங்களும் தொழில்முனைவோராக மாறி சிவகாசியின் பெயரை உலக அளவில் உச்சரிக்க உதவியாக இருக்கவேண்டும். இந்தியாவில் உள்ள பணிகளை செய்ய அதிகமானவர்கள் தேவைப்படும் நிலையில் பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வதை தவிர்க்கவேண்டும்.
தமிழகத்தில் போதிய ஆட்கள் இல்லாத நிலையில் தான் வடமாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் நீர்நிலைகளை உருவாக்கி, பாதுகாக்க வேண்டும்.
பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய தேவையான வழிமுறைகளையும், நிரந்தர தீர்வுகளையும் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் 1,057 மாண-மாணவிகளுக்கு பட்டங்களை நீதிபதி ஸ்ரீமதி வழங்கினார். காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ண மூர்த்தி, காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் வளர்மதி, மாணவர்களின் பெற்றோர்கள், உறவி னர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை துணை முதல்வர் முத்துலட்சுமி செய்திருந்தார்.
- விருதுநகர் மாவட்டத்தில் 2 சிறுமிகள் திடீரென மாயமானார்கள்.
- வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.
விருதுநகர்
ராஜபாளையம் அருகே உள்ள நத்தனேரியை சேர்ந்தவர் சின்னதுரை(21). தூத்துக்குடி கல்லூரியில் மருத்துவபடிப்பு படித்து வருகிறார். இவரது 16 வயது தங்கை தளவாய்புரத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தாயிடம் மாடியில் சென்று படிக்க போவதாக சிறுமி கூறி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மாடிக்கு சென்று பார்த்தபோது சிறுமி அங்கில்லை.
எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னதுரை கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே உள்ள வேப்பம்குளத்தை சேர்ந்தவர் வள்ளி. இவரது 16 வயது மகள் காரியாபட்டி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பேக்கிரியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகள் வேலை பார்த்த பேக்கரிக்கு வள்ளி போன் செய்து விசாரித்தபோது சிறுமி சம்பளத்தை பெற்றுக்கொண்டு வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் வள்ளி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை விழா ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர அ.தி.மு.க. சார்பில் நடந்தது. தெற்கு நகர செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட பேரவை துணைதலைவர் திருப்பதி, மேற்கு மாவட்ட மகளிரணி கவிதா, தெற்கு நகர அவைதலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
41-வது வார்டு பொன்னகரம் பகுதியில் அ.தி.மு.க. கொடியேற்றி ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் மின்சார பிரிவு மண்டல பொருளாளர் ரமேஷ்குமார், வார்டு செயலாளர் காசிராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜா, நகர துணை செயலாளர் சங்கர் ராஜ், வார்டு பொருளாளர் கணேஷ் குமார், பெருமாள், சக்தி, கோபி, விக்னேஷ்,நடராஜன், இணைசெயலாளர் யோகேஷ் ,ராஜேந்திரன், முத்துக்குமார், பாலமுருகன், கோவிந்தராஜ், வார்டு பிரதிநிதி சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசியில் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் ஆண் சிசு உடலை வீசியது யார்? என சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கிறனர்.
- தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.
சிவகாசி
சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். மகப்பேறு சிகிச்சை பிரிவு தனியாக இயங்கி வருகிறது. நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு கழிவறையை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் சென்றார்.
அப்போது 250 கிராம் எடை உள்ள குறைமாத ஆண் சிசு உடல் கிடந்தது. இதைக்கண்ட தூய்மை பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிசு உடலை மீட்டு அதனை வீசி சென்ற பெண் யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
- சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:-
பொது சுகாதாரத் துறையின் சேவைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும். அனைத்து குடிமக்களின் சுகாதார உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புரிந்துணர்வு மேம்பாட்டிற்காக மாநில மற்றும் மாவட்ட சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிதலும், சுகாதார பங்கீட்டாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதலும் இதன் முக்கியமான நோக்கம் ஆகும். ஒவ்வொரு மருத்து வர்களும், வட்டார மருத்துவர்களும் ஊராட்சி பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணி யாளர்களின் கருத்துக்களை பெற்று, முன்னுரிமை அடிப்ப டையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனை களில் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து, சிறப்பான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் தங்களது வட்டாரங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் அத்தியாவசிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருத்தியமைக்கப்பட்ட காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகிய துறைகள் மூலம் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் சங்குமணி, இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி(விருதுநகர்), கலுசிவலிங்கம்(சிவகாசி), துணை இயக்குநர் (குடும்ப நலப்பணிகள்) கவுசல்யாதேவி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சசிகலா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக "நான் முதல்வன்" என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.
இந்த திட்டம் ஆங்கிலம் பேசும் வகுப்புகள், குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ், வெளிநாட்டு மொழி வகுப்புகள், பாரம்பரிய தமிழ்நாடு கலாச்சார வகுப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய தலைப்புகளை வழங்குவது, தொழில் முறை ஆலோசனைகளை வழங்குவது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கான திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டுமென்ற நோக்கில் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் அரசு உதவு பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர் கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில், அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், இந்த திட்டத்தை செயல் படுத்தும் வகையில் 1500 மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிவகாசி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 ஒன்றியங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் மதுரையில் உள்ள தியாக ராஜர் பொறியியல் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரிகளுக்கு இலவச பஸ் மற்றும் உணவு வசதி ஏற்பாடு செய்து அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள உயர்கல்வியில் உள்ள வாய்ப்புக்கள், அதன் மூலம் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்புக்கள், உயர்கல்வி யில் உள்ள துறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வைகள் குறித்து நேரடியாக சென்று அவர்கள் அறிந்து, தெரிந்து கொள்ளும் வகையிலும், உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கும் வகையிலும், கல்லூரி நிர்வாகத்தால் எடுத்து ரைக்கப்பட்டு, விழிப்பு ணர்வு ஏற்ப டுத்தப்பட்டது.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.






