search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "solicitation"

    • ஏர்வாடியை குப்பையில்லா நகரமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என கீழக்கரை வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • கடைக்காரர்கள்தான் சாலையில் கொட்டுகிறார்கள்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி ஏர்வாடி பகுதியில் உள்ள லாட்ஜ் உரிமையாளர் களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தங்கும் விடுதியில் இருந்து குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை போட வேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏர்வாடியை குப்பையில்லா நகரமாக்க லாட்ஜ் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது லாட்ஜ் உரிமையாளர்கள் கூறும்போது, குப்பைகளை நாங்கள் வெளியில் கொட்டுவதில்லை. டீ கப், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை இதர கடைக்காரர்கள் தான்சாலை யில் கொட்டுகிறார்கள்.

    போலீசார் லாட்ஜ் முன்பு நிறுத்தப்படும் வாகன ங்களை அப்புறப்படுத்து கிறார்கள். ஆனால் போக்கு வரத்துக்கு இடையூறாக கடைகளை வைக்க போலீசார் அனுமதிக் கிறார்கள். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர். அப்போது வட்டாட்சியர் பழனிக்குமார், போலீசாரி டம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பரமசிவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அதிக வட்டி தருவதாக கூறி அருப்புக்கோட்டையை சேர்ந்த 10 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
    • தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வாழவந்தான். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் பால முருகன், வீரமணி, தவமணி தேவி, பாண்டி, கோவிந்த ராஜ், வேணி உள்ளிட்டவர்க ளுடன் வாழவந்தான் நம்பிக்கை தரும் வகையில் பழகி உள்ளார்.

    அப்போது அவர் மதுரை பொன்மேனியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில், தான் முதலீடு செய்ததாக வும், அவர்கள் அதிக வட்டி தருவதால் தற்போது வீடு, கார் மற்றும் வசதியாக வாழ்வதாகவும் அவர்களி டம் தெரிவித்துள்ளார். சிறிய கூட்டம் போல் ஏற்பாடு செய்து அவர்க ளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார்.

    இதையடுத்து பாலமுரு கன் உள்ளிட்டோர் மதுரை நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ளனர். முதலில் சில மாதங்கள் வட்டி சரியாக கிடைத்ததால் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மொத்தம் 10 பேர் ரூ.57 லட்சம் அளவுக்கு முதலீடு செய்துள்ளனர். அதன்பிறகு சில மாதங்களுக்கு மட்டுமே வட்டி வந்துள்ளது.

    ஆனால் தொடர்ச்சியாக வட்டி கிடைக்கவில்லை. இதனால் முதலீடு செய்த வர்கள், தாங்கள் பணம் கட்டிய நிதி நிறுவனத்திற்கு போன் செய்து பார்த்துள்ள னர். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் நேரடியாக நிறுவ னத்திற்கு சென்றுள்ளனர்.

    ஆனால் அங்கு அந்த நிதி நிறுவனம் பூட்டிக் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வாழவந்தான் வீட்டிற்கு சென்று அதுகுறித்து தெரி வித்துள்ளனர். ஆனால் அவர் சரியாக பதில ளிக்க வில்லை. இந்தநிலையில் மீண்டும் அவரது வீட்டிற்கு முதலீடு செய்தவர்கள் விசாரிப்பதற்காக சென்றுள்ளனர்.

    அப்போது வீட்டிலிருந்த வாழவந்தானின் 2-வது மனைவி பவித்ரா மற்றும் திருப்பதி ஆகியோர் இது குறித்து தங்களிடம் வந்து விசாரிக்க வேண்டாம் என்றும், மீண்டும் வந்து விசாரித்தால் தங்களை கொலை செய்ய வந்ததாக போலீசிடம் புகார் அளித்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

    இதையடுத்து தனியார் நிதி நிறுவன மோசடி குறித்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். நிலம் மற்றும் நகைகளை அடமானம் வைத்தும், விற்றும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், தற்போது நிதி நிறுவனம் மூடப்பட்ட தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வும், அதனால் தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி பணம் கட்டியவர்களிடம் தனியார் நிதி நிறுவனம் ரூ57 லட்சம் மோசடி செய்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×