search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலைகளில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய மாணவர்கள் தீர்வு காண வேண்டும்
    X

    விழாவில் ஒரு மாணவிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி பட்டம் வழங்கினார். அருகில் காளீஸ்வரி கல்லூரி செயலாளர் ஏ.பி. செல்வராஜன் உள்ளார்.

    ஆலைகளில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய மாணவர்கள் தீர்வு காண வேண்டும்

    • ஆலைகளில் விபத்தில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய மாணவர்கள் தீர்வு காண வேண்டும் என ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
    • சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 18-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி கலந்து கொண்டார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பலர் அறக்கட்டளைகள் தொடங்கி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் காமராஜரே முன்னோடியாக திகழ்கிறார். பட்டம் பெற்ற நீங்கள் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? சிவகாசியில் ஏற்கனவே தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    நீங்களும் தொழில்முனைவோராக மாறி சிவகாசியின் பெயரை உலக அளவில் உச்சரிக்க உதவியாக இருக்கவேண்டும். இந்தியாவில் உள்ள பணிகளை செய்ய அதிகமானவர்கள் தேவைப்படும் நிலையில் பட்டம் பெற்ற திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வதை தவிர்க்கவேண்டும்.

    தமிழகத்தில் போதிய ஆட்கள் இல்லாத நிலையில் தான் வடமாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் நீர்நிலைகளை உருவாக்கி, பாதுகாக்க வேண்டும்.

    பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய தேவையான வழிமுறைகளையும், நிரந்தர தீர்வுகளையும் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் 1,057 மாண-மாணவிகளுக்கு பட்டங்களை நீதிபதி ஸ்ரீமதி வழங்கினார். காளீஸ்வரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிருஷ்ண மூர்த்தி, காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் வளர்மதி, மாணவர்களின் பெற்றோர்கள், உறவி னர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை துணை முதல்வர் முத்துலட்சுமி செய்திருந்தார்.

    Next Story
    ×