search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுகாதார பேரவை கூட்டம்
    X

    விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார். அருகில் ரகுராமன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    சுகாதார பேரவை கூட்டம்

    • விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
    • சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொது சுகாதாரத் துறையின் சேவைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும். அனைத்து குடிமக்களின் சுகாதார உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புரிந்துணர்வு மேம்பாட்டிற்காக மாநில மற்றும் மாவட்ட சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிதலும், சுகாதார பங்கீட்டாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதலும் இதன் முக்கியமான நோக்கம் ஆகும். ஒவ்வொரு மருத்து வர்களும், வட்டார மருத்துவர்களும் ஊராட்சி பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணி யாளர்களின் கருத்துக்களை பெற்று, முன்னுரிமை அடிப்ப டையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு மருத்துவமனை களில் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து, சிறப்பான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் தங்களது வட்டாரங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் அத்தியாவசிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருத்தியமைக்கப்பட்ட காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகிய துறைகள் மூலம் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் சங்குமணி, இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி(விருதுநகர்), கலுசிவலிங்கம்(சிவகாசி), துணை இயக்குநர் (குடும்ப நலப்பணிகள்) கவுசல்யாதேவி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சசிகலா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×