என் மலர்
விருதுநகர்
- அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை கைது செய்தனர்.
- பட்டாசு ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூலக்கரை இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்். அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் சோதனை செய்தனர். அதில் அந்த ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிவகாசியை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம்(57), ேபார்மேன் ஜெகதீசுவரன்(31) மற்றும் பணியாளர்கள் பாலமுருகன்(42), கருப்பசாமி(37), ரவிக்குமார்(34) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; புரோட்டா மாஸ்டர் பலியானார்.
- அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிலோன் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது52). இவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்றுஇரவு வேலை முடிந்த பிறகு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். எதிர்திசையில் அதே பகுதியில் வெள்ளக் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் முனியசாமி(31) பணி முடித்து பாளையம் பட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தார். பெரிய கடை வீதியில் 2 மோட்டார் சைக்கிள்களும் வந்த போது நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
முனியசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவ லறிந்தத அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமியை சிகிச்சை க்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் இறந்தது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.
- அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 158 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சிபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பாலுசாமி(54) என்பவரது வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும், பாலசுப்பிரிமணியின்(45) வீட்டில் 40 குரோஸ் பட்டாசு திரிகளும், காளிராஜ்(48) வீட்டில் 42 குரோஸ் பட்டாசு திரிகளும், சரவணன்(56) வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ேபாலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
- ராஜபாளையம் அருகே முதியவர் தாக்கப்பட்டார்.
- சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
சேத்தூர் வளையல் தெருவை சேர்ந்தவர் ஆணைக்குட்டி (65). இவர் விவசாய நிலங்களில் மாட்டுக்கிடை அமைத்து கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் அருகே உள்ள சிவக்காடு பகுதியில் மாட்டு கிடை அமைத்திருந்தார்.
நள்ளிரவு அங்கு ஆணைக்குட்டி காவல் பணி மேற்கொண்டிருந்த போது மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நீலமேகம், நாயகம் ஆகிய 2 பேர் வந்து தகராறு செய்து ஆணைக்குட்டியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
- அவர்களின் நிலை என்ன? என தெரியவில்லை.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இன்று மதியம் வைரம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
அந்தப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு விபத்து நடந்த குடோனில் 2 பேர் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவர்களின் நிலை என்ன? என தெரியவில்லை.
- ராஜபாளையம் அருகே விபத்தில் தொழிலாளி காயமடைந்தார்.
- தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சின்ன சுரைக்காய் பட்டி தெருவை சேர்ந்தவர் சுந்தர மகாலிங்கம் (40). தச்சு வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டு விசேஷத்திற்கு உறவினர்களை அழைக்க மனைவி, மகனுடன் சுந்தர மகாலிங்கம் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி சென்றார். அங்கு உறவினர்களுக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு சுந்தர மகாலிங்கம் மீண்டும் குடும்பத்தினருடன் ஊருக்கு புறப்பட்டார். ராஜபாளையம்- சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள தியேட்டர் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுந்தர மகாலிங்கம், அவரது மகன் ஹர்சன் (6) ஆகியோர் காயமடைந்தனர். இதில் ஆபத்தான நிலையில் இருந்த சுந்தர மகாலிங்கம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகிறார்.
- விருதுநகரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிச் செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பள்ளி செயலரின் வகுப்புத் தோழர் சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாணவி லட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட, ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களும், இந்நாள் ஆசிரியர்களும் பங்கேற்று பேசினர்.
முன்னாள் மாணவர்களும் அவர்களுடைய குடும்பத்தினருடன் வருகை புரிந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன.முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணிப்பொறி வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் இளையபெருமாள் மற்றும் 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
- சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியாளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஒ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி ஊழியர்களுக்கு 2022 அக்டோபர் முதல் 2023 ஏப்ரல் வரை 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
மேலும் பொங்கல் பண்டிகை தொகையான ரூ.1000-மும் வழங்காமல் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியா ளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் இல்லை.
இந்த நிலையில் நேற்று திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊழியர்கள் திடீரென்று முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். கலெக்டர் மற்றும் யூனியன் அலுவலக உயரதிகாரிகள் திருச்சுழி ஊராட்சி நிர்வா கத்தில் தலையிட்டு ஊராட்சி நிர்வா கத்தில் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கி இனிவரும் காலங்க ளில் ஊராட்சி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊராட்சி ஊழியர்கள் அடங்கிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், செல்வராஜ், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பெருமாள், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பண மோசடி வழக்கில் பா.ஜ.க. தலைவர் கைது நடவடிக்கையில் தாமதம் ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
- கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பா.ஜ.க. துணை தலைவர் பாண்டி யன். கடந்த 2017-ம் ஆண்டு இவரது 2 மகன்க ளுக்கு கப்பல் துறை முகத்திலும், ரெயில் வேயிலும் அரசு வேலை வாங்கி தருவதாக திருத்தங்கல்லை சேர்ந்த பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி யுள்ளனர்.
இதனை நம்பிய பாண்டியன் 2 பேரிடமும் பல்வேறு தவணைகளில்
ரூ.11 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை யும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பாண்டியன் இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் சுரேஷ்குமாரும், கலைய ரசனும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்திற்கு காசோலையை கொடுத்தனர். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் பண மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரையும், கலையரசனையும் கைது செய்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டில் சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். அதனை விசா ரித்து ஐகோர்ட்டு ஜாமீன் பெறுவதற்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டு மென உத்தரவிட்டது. அதற்கு கால அவகாசமும் தரப்பட்டது. ஆனால் சுரேஷ்குமார் டெபாசிட் பணத்தை செலுத்தவில்லை.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி மீண்டும் சுரேஷ்குமார் கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை உடனே வாபஸ் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து சுரேஷ்குமார் கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் தொகையை செலுத்த 2 வார காலம் அவகாசம் அளிப்பதாகவும், அப்போதும் டெபாசிட் செய்யாதபட்சத்தில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு திரும்ப பெற்றதாக கருதப்படும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் 2 வார காலம் முடிந்த பின்பும் சுரேஷ்குமார் டெபாசிட் தொகையை செலுத்த வில்லை. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சுரேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
பண மோசடி வழக்கில் சுரேஷ்குமார் ஜாமீன் பெறுவதற்கு மதுரை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து மனு செய்ததால் போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- கள்ள சாராயத்தை ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- 91500 11000 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
விருதுநகர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதைத்தொடர்ந்து கள்ள சாராயத்தை ஒழிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து ஏராளமா னோரை கைது செய்துள்ளது.
வடமாவட்டங்களில் தற்போது கள்ள சாராய விற்பனை இருக்கும் நிலையில் தென் மாவட்டங் களில் கள்ள சாராயம் 90 சதவீதம் ஒழிக்கப்பட்டு ள்ளது. இதற்கு கடந்த காலத்தில் நடந்த கள்ள சாராய சாவுகளே காரணம்.
கடந்த 1995-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கள்ள சாராயம் குடித்து 27 பேர் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கள்ள சாராய சாவு நிகழ்ந்த பின் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க போலீசார் அப்போது தீவிர நடவ டிக்கை எடுத்தனர். விருது நகர் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீசார் கள்ள சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கள்ள சாராய தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப் பணர்வு ஏற்படுத்தப் பட்டது.
தென் மாவட்டங்களில் கள்ள சாராயம் தலை தூக்காமல் இருக்க மாவட்ட போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்பவர்களையும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பவர்க ளையும் போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற தொடர் நடவடிக்கை காரணமாக தென் மாவட்டங்களில் வெகுவாக கள்ள சாராய விற்பனை தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்டத்தில் எங்கேனும் கள்ள சாராயம் தயாரித்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ள சாராயம் தொடர்பாக 91500 11000 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகாசியில் 5 நாட்கள் விமரிசையாக நடந்த பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
- பக்தர்கள் தேர் சக்கரங்களில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
சிவகாசி
சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழா தொடங்கிய நாள் முதல் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மேலும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும், பல்வேறு நேர்த்திக்கடன் களை செலுத்தியும் வழிபாடு நடத்தினர்.
இந்த திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பத்திரகாளியம்ம னும், சிறிய தேரில் விநாயக ரும் எழுந்தருளினர். 5 நாட்கள் மாலையில் நடந்த தேரோட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் ரத வீதிகளில் தேர் ஆடி அசைந்து வந்தது கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. 5 நாட்கள் வீதிகளை சுற்றி வந்த தேர் நேற்றைய தினம் நிலைக்கு வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேர் சக்கரங்களில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
- தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது.
- 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் எனவும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






