மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து

மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; புரோட்டா மாஸ்டர் பலியானார். அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.
மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து
Published on

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிலோன் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது52). இவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்றுஇரவு வேலை முடிந்த பிறகு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். எதிர்திசையில் அதே பகுதியில் வெள்ளக் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் முனியசாமி(31) பணி முடித்து பாளையம் பட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தார். பெரிய கடை வீதியில் 2 மோட்டார் சைக்கிள்களும் வந்த போது நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

முனியசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவ லறிந்தத அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமியை சிகிச்சை க்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் இறந்தது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com