search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்
    X

    பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்

    • நரிக்குடி யூனியனில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்தில் நடப்பாண்டு க்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் அ.முக்குளம், வீரசோழன், அழகாபுரி, மினாக்குளம், நல்லுகுறிச்சி, வேளாநேரி, மேலப்பருத்தியூர், கீழக்கொன்றைக்குளம், நாலூர் ஆகிய 9 ஊராட்சிகள் தேர்ந்தெ டுக்கப் பட்டுள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரையிலான புன்செய் நிலங்களில் போர்வெல் அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் அமைத்து அதில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மானிய விலையில் பவர் டிரில்லர் கருவியும், 100 சதவீத மானி யத்தில் விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டையும் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு கலைஞரின் அனை த்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவசமாக ஆழ்துளைக்கி ணறு மற்றும் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த ஊராட்சிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரேசுவரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×