என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூர் கிராமத்தில் பாப்பாத்தியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி விழா நேற்று இரவு நடந்தது.
இதில் நடிகர் ரஜினி காந்தின் அண்ணன் சத்திய நாராயணன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் திருப்பத்தூர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கிருஷ்ணகிரியில் எங்களது தாய், தந்தை கோவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. விரைவில் கோவில் திறக்கப்படும். இதில் ரஜினி கலந்து கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ரஜினி மக்கள் மன்ற திருப்பத்தூர் நகர இணை செயலாளர் கே.ஆதேஷ்குமார், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மற்றும் வேலு, கோவை ஆனந்த், கண்ணையன், பாபுராவ், சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர். #Rajinikanth #SathyaNarayanan
தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவித்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், விதிகளின்படி மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, பின்னர் அவர்களை படிப்படியாக விடுதலை செய்ய, தகுதியான நபர்களை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 பெண் கைதிகள் உள்பட 200 கைதிகளை விடுதலை செய்வதற்கான பட்டியல் கூடுதல் காவல் துறை இயக்குநர் (சிறைத் துறை) அலுவலகத்துக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
2-வது கட்டமாக மேலும் 24 பேரை விடுதலை செய்வதற்கான ஆணை நேற்று இரவு வேலூர் சிறைக்கு வந்தது. இதையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு ஜெயிலில் இருந்து 24 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
கைதிகளுக்கு உடமைகள், சிறையில் வேலை பார்த்ததற்கான கூலி பணம் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தனர்.
சிறைக்கு வெளியே காத்திருந்த கைதிகளின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவர்களை கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.
வேலூர் ஜெயிலில் இருந்து வந்த கைதிகள் கண்ணீர் மல்க கூறியதாவது:-
நாங்கள் போதையிலும், சூழ்நிலை காரணமாக தவறு செய்து ஜெயில் தண்டனை பெற்றோம். ஜெயிலுக்குள் செல்லும் போது பயமாகவும், கஷ்டமாகவும் இருந்தது.
குடும்பத்தினரை பிரிந்து மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால் ஜெயிலில் எங்களுக்கு பல தொழில்கள் கற்று தந்தனர். உள்ளே இருந்ததால் பீடி, சிகரெட், மது பழக்கங்களை அடியோடு விட்டு விட்டோம். பூமியில் இன்று மீண்டும் குழந்தையாக பிறந்தது போல உள்ளது.
ஜெயிலில் கற்று கொடுத்த தொழில்கள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இனிமேல் வாழும் வாழ்க்கைதான் எங்களுக்கு உண்மையான வாழ்க்கை எங்களை விடுதலை செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார். #MGRCenturyCeremony
ஆடிவெள்ளி, ஆடிக்கிருத்திகையொட்டி கோவில்களில் திருவிழாக்கள் நடக்கின்றது. வேலூர் மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்கள், முருகர்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதையொட்டி பொதுமக்கள் சைவ பொருட்கள் சமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை களைகட்டியுள்ளது. ஆந்திரா, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து அதிகளவில் காய்கறிவரத்து உள்ளது. ஆனாலும் தேவை அதிகரிப்பால் வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.
வரத்து மிகவும் அதிகரிப்பால் தக்காளி மட்டும் கிலோ ரூ.8 முதல் 10 வரை விற்பனை செய்யபடுகிறது. வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை 1 கிலோ விவரம் வருமாறு:
தக்காளி-ரூ.10, கத்தரிக்காய்-ரூ.50, கேரட்- ரூ.40, பீன்ஸ்-ரூ50, அவரைக்காய்-ரூ.50, முள்ளங்கி-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.20, முருங்கை-ரூ.30, சின்னவெங்காயம்-ரூ.40, பெரியவெங்காயம்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.20 க்கு விற்பனை செய்யபட்டது.
ஆடிக்கிருத்திகையொட்டி பூக்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை, முல்லைப்பூ கிலோ ரூ.200க்கும், சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.30, கேந்தி ரூ.40, ரோஜா ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்னும் 3 நாட்கள் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி தாலுகாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு தொழில், கூலித்தொழில் செய்பவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இப்பகு தியை சேர்ந்த 40 சதவீதம் இளைஞர்கள் வெளிநாட்டில் பணி புரிந்து வருகின்றனர்.
வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு செல்லும் பஸ்களும் அங்கிருந்து வேலூர் நோக்கி வரும் பஸ்களும் நாட்டறம்பள்ளி வழியாக சென்று வந்தாலும், பஸ் நிலையத்துக்கு வராமல் பைபாஸ் வழியாக சென்று வருகிறது.
நாட்டறம்பள்ளி மேம்பாலத்திலேயே பயணிகளை இறக்கிவிட்டு பஸ் நிலையத்துக்கு செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக நாட்டறம் பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலைக்கு செல்ல ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிச் செல்லும் வயதானவர்களும் குழந்தைகளும் தடுமாறி விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்படுவதால் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து போக்குவரத்து மண்டல அலுவலகம், நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம், திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் என பலரிடம் முறையிட்டும் பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்ல யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முறையிட முடிவு செய்து, கடந்த திங்கட்கிழமை நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் நாட்டறம் பள்ளி சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் வேலூரில் இருந்து பெங்க ளூருக்கு இயக்கப்படும் பஸ்களும், பெங்களூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக வேலூர் சென்னை நோக்கிச் செல்லும் அனைத்து பஸ்களும், நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். என கூறப்பட்டிருந்தன.
மனுவை பரிசிலனை செய்த கலெக்டர் ராமன் நாட்டறம்பள்ளி சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்ய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என போக்கு வரத்து துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வேலூர் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் சாலை விரிவாக்கம் செய்ய நாட்டறம்பள்ளிக்கு நேற்று காலை சென்றனர்.
இதையறிந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது அனைத்து பஸ்களும் பஸ்நிலையத்துக்கு வந்து செல்ல உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையில், பெங்குளூருவில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை பெங்களூர் நாற்கர சாலை வழியாக செல்லும் ஒரு சில பஸ்களை நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் சென்றுவர ஒரிரு நாட்களில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முருகன், கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா வரும் 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுவார்கள். திருத்தணி கோவிலுக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் இன்றிலிருந்தே அதிகளவில் காவடி எடுத்து செல்கின்றனர்.
இதற்காக வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 400 பஸ்கள் இயக்கபடுகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு (வெள்ளி, சனி, ஞாயிறு) வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 516 டிரிப் (நடை), பழைய பஸ் நிலையத்தில் இருந்து 279 டிரிப், ஆற்காட்டில் இருந்து 119 டிரிப், பேர்ணாம்பட்டில் இருந்து 42 டிரிப், திருப்பத் தூரில் இருந்து 158 டிரிப் என மொத்தம் 1,310 டிரிப்களாக சிறப்பு பஸ்கள் திருத்தணிக்கு இயக்கப்படுகிறது. அதே நேரம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானால் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த அலமேலுமங்காபுரம் புதுவசூரை சேர்ந்தவர் வசூர் ராஜா (வயது 33). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, ஆள் கடத்தல், பணம் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட ரவுடி வசூர் ராஜா சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ‘‘இனி எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன்.
குற்ற பின்னணி உள்ள நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள மாட்டேன். திருந்தி வாழப் போகிறேன்’’ என்று வசூர் ராஜா மனு கொடுத்தார்.
இந்நிலையில் புதுவசூரில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த ரவுடி வசூர் ராஜாவை, சத்துவாச்சாரி போலீசார் அதிரடியாக இன்று காலை கைது செய்தனர். திருந்தி வாழ போவதாக மனு கொடுத்த வசூர்ராஜா, மணல் கொள்ளையில் ஈடுபடுள்ளார்.அலமேலுமங்காபுரம், புதுவசூர், பெருமுகை பகுதி பாலாற்றில் லாரிகளில் மணல் கடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட ரவுடி வசூர் ராஜாவை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி அருகே உள்ள செங்குட்டை சி.எம். ஜான் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 38). வாட்டர் கேன்களை விநியோகிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தரணி (வயது 30). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
ராமலிங்கம் இன்று காலை மனைவி குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வேலூர் நோக்கி வந்தார். சித்தூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக இரு சக்கர வாகனத்தை திருப்பினார்.
அப்போது, பின்னால் சிமெண்ட் ஏற்றி கொண்டு வேகமாக வந்த லாரியும், டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்குள் திரும்பியபோது, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி, குழந்தை கீழே விழுந்தனர்.
இவர்களில் ராமலிங்கத்தின் மனைவி தரணி லாரி டயரில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கணவன்-குழந்தை கண்முன் தரணி துடிதுடித்து இறந்தார். இந்த விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி அடுத்த மேல்பாடிலத்தாலை கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பிரிஷிலா. இவர் வீரந்தாங்கல் வட்டார வள மையத்தில் துப்புரவு வேலை செய்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரிஷிலாவுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.
குடும்பத்தினர் போனில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. பிரிஷிலா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரசவத்திற்காக பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
பிரசவ வலி அதிகமாக இருந்ததால், ஓடும் ஆம்புலன்சிலேயே பிரிஷிலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாய்- குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தாயும், குழந்தையும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்பாடி கிளித்தான் பட்டறை விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் கட்டிட மேஸ்திரி. இவருக்கு சொந்தமான காரை நேற்று இரவு வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். இன்று காலையில் காரை காணவில்லை.
இதனால் திடுக்கிட்ட ரங்கநாதன் அப்பகுதியில் காரை தேடி பார்த்தார். மேலும் அவரது வீட்டின் எதிரே உள்ள மெக்கானிக் கடையில் உள்ள சி.சிடி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கார் திருடப்பட்ட காட்சி பதிவாகியிருந்தது.
நள்ளிரவு 2.12 மணிக்கு 2 வாலிபர்கள் ரங்கநாதன் வீட்டின் அருகே வந்து நோட்டமிடுகின்றனர். ஒருவர் டீ சர்ட்- சார்ட்ஸ் அனிந்துள்ளார். மற்றொருவர் லுங்கி, பனியன், அணிந்துள்ளார். சுமார் 10 நிமிடங்கள் நோட்டமிட்ட அவர்கள் காரை கள்ள சாவிபோட்டு திறந்து ஓட்டி செல்கின்றனர்.
கார் குடியாத்தம் ரோட்டில் செல்வது வரை காட்சிகள் பதிவாகி உள்ளது. இது பற்றி ரங்கநாதன் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அழகாபுரி நகரில் கடந்த சில மாதங்களில் 3 கார்கள் திருடப்பட்டன. 4-வது தடவையாக ரங்கநாதன் கார் திருடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கார் திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் ஊராட்சி துரைமூலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை (வயது 50), தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (40). துரைமூலை கிராமத்தில் ஆடி மாதத்தையொட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் தெருக்கூத்து நடைபெற்றுள்ளது.
தெருக்கூத்து பார்த்துவிட்டு செந்தாமரை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனது மனைவி ஜெயந்தியுடன், அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி (30) என்பவர் இருந்துள்ளார். இதனால் செந்தாமரை, ஜெயந்தி, தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கணவர் செந்தாமரையிடம் இருந்து, கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தியை விடுவிக்க ஜெயந்தி தனது கணவரின் மர்ம உறுப்பை கடித்துள்ளார். இதில் மர்ம உறுப்பு பாதி துண்டானது. இதனால் அவர் அலறியுள்ளார். அதற்குள் தட்சிணாமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். செந்தாமரையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் உடனடியாக செந்தாமரையை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்னை பூந்தமல்லி அருகே விபத்தில் சிக்கியது. இதில் காயம் அடைந்த செந்தாமரை மற்றும் உறவினர் ஜானகி உள்ளிட்டோர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தப்பி ஓடிய தட்சிணாமூர்த்தியை தேடி வருகிறார்.
கள்ளக்காதலனை விடுவிக்க கணவனின் மர்ம உறுப்பை, மனைவி கடித்து துண்டாக்கிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews






