என் மலர்
நீங்கள் தேடியது "காட்பாடியில் வாகனம் மோதி பெண் பலி"
காட்பாடியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள செங்குட்டை சி.எம். ஜான் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 38). வாட்டர் கேன்களை விநியோகிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தரணி (வயது 30). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
ராமலிங்கம் இன்று காலை மனைவி குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வேலூர் நோக்கி வந்தார். சித்தூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக இரு சக்கர வாகனத்தை திருப்பினார்.
அப்போது, பின்னால் சிமெண்ட் ஏற்றி கொண்டு வேகமாக வந்த லாரியும், டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்குள் திரும்பியபோது, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி, குழந்தை கீழே விழுந்தனர்.
இவர்களில் ராமலிங்கத்தின் மனைவி தரணி லாரி டயரில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கணவன்-குழந்தை கண்முன் தரணி துடிதுடித்து இறந்தார். இந்த விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.