என் மலர்tooltip icon

    வேலூர்

    ராணிப்பேட்டை அருகே பால் வியாபாரியிடம் ரூ. 82 ஆயிரம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த பொன்னை எஸ்.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). பால் வியாபாரி.

    கணேசன் வியாபார தேவைக்காக நேற்று பொன்னையில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.40ஆயிரமும் மற்றோரு தனியார் வங்கியில் ரூ.42 ஆயிரம் எடுத்தார். அந்த பணத்தை ஒரு பையில் வைத்து வங்கி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக் பெட்டியில் வைத்தார்.

    அப்போது அங்கு வந்த அவரது நண்பரிடம் கணேசன் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அங்கு பைக்கை நிறுத்தி பெட்டிடையை திறந்து பார்த்தார். அபபோது பொட்டியில் வைத்திருந்த பணப்பை காணமல் போயிருந்தது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணேசன் இது குறித்து பொன்னை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரில் இளம் பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேலூர்:

    லத்தேரி அடுத்த அன்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அபிலா (வயது 22). இவர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் வாகன ஷோரூமில் வேலை செய்து வருகிறார்.

    அபிலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியை முடித்து கொண்டு இரவு 7.30 மணிளவில் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் ஷோரூமுக்கு அருகிலேயே அபிலோவின் கழுத்தில் இருந்த 1½ பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அபிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரின் விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

    மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வியாபாரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி வேலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    வேலூர்:

    குடியாத்தம் தாலுகா தாழையாத்தம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 36). காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி ரேணுகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீசுக்கும் (35) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

    இதனையறிந்த ஜெயபால், மனைவி ரேணுகாவை கண்டித்து கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கைவிடாமல் ஜெயபாலுக்கு தெரியாமல் சதீசுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சதீஷ் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி ரேணுகாவை அவரது வீட்டில் சந்திந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த ஜெயபால் அதனை கண்டு ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியால் சதீசை சரமாரியாக குத்தினார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். அவர் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை மாவட்ட நீதிபதி ஆனந்தி விசாரித்தார்.

    நேற்று அவர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில், சதீசை கத்தியால் குத்திக் கொலை செய்த ஜெயபாலுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கினார்.

    இதையடுத்து அவர் பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    வேலூர் ஜெயிலில் இருந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று ஆண்கள் ஜெயிலில் இருந்து 12 பேர், பெண்கள் ஜெயிலில் இருந்து 2 பேர் என மொத்தம் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

    ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.
    வேலூரில் நடந்து சென்றவர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிந்தார். விபத்து குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் கொசபேட்டை கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 50). இவர் வெங்காயமண்டியில் வேலை பார்த்து வந்தார்.

    கமலக்கண்ணன் நேற்றிரவு வேலையை முடித்து விட்டு பெரியார் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி கமலக்கண்ணன் மீது மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் இறந்தார்.

    இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூரில் தொழிலதிபர்களுக்கு சொந்தமான நகைகடை, வீடுகள் உள்பட 5 இடங்களில் 3-வது நாளாக வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். #ITRaid
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பிரபல தொழிலதிபர் சகோதரர்கள் சி.லிக்மிசந்த் சிங்வி, அசோக்சந்த் சிங்வி. இதில் லிக்மிசந்த் சிங்வி ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து வருகிறார். அசோக்சந்த் சிங்வி நகைக்கடை மற்றும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயில் நிறுவனத்தை நடத்தி வருகிறார்

    இவர்களின் வீடு மற்றும் நகைக்கடை ‌ஷராப் பஜார் பகுதியில் உள்ளது. ஆயில் நிறுவனம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க்கும் உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் 8 வாகனங்களில் பெண் அதிகாரி உள்பட சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ஆம்பூர் வந்தனர். அவர்கள் நகைக்கடை, சகோதரர்களின் வீடுகள், ஆயில் நிறுவனம், பெட்ரோல் பங்க், குடோன், ரியல் எஸ்டேட் அலுவலகம் ஆகிய இடங்களிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    நகைக்கடை, வீடுகள், ஆயில் நிறுவனம், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

    அதேபோல் பணியாளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. நகைக்கடைக்கு அருகே உள்ள குடோன் கிடங்கை திறந்து சோதனை நடத்தினர்.

    நேற்று இரவிலும் தொடர்ந்த சோதனை விடிய விடிய நடந்தது. 3-வது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது.

    இதில் முக்கிய ஆவணங்கள், பணம், நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மேலும் 2 வாகனங்களில் கூடுதலாக வருமானவரித்துறை அதிகாரிகள் வரவழைக்கபட்டுள்ளனர்.

    அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 3-வது நாளாக சோதனை நடப்பதால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  #ITRaid
    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய வேலூர் ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். #Vigilance

    வேலூர்:

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமேலாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்தவர் கே.எஸ்.முரளிபிரசாத் (வயது 55). இவர் தனக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் 11 பேரிடம், அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பள நிலுவை தொகையில் கமி‌ஷன் கேட்டுள்ளார்.

    அதற்கான கமி‌ஷனை செயலர் (பொறியியல்) சேகர் என்பவர் வசூல் செய்து நேற்று முன்தினம் பொது மேலாளர் அலுவலகத்தில் வழங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முரளிபிரசாத் காரில் இருந்த ரூ.11 லட்சம், சேகரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம், அருகில் தோட்டத்தில் அனாதையாக கிடந்த ரூ.1 லட்சம் என ரூ.14 லட்சத்து 85 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முரளிபிரசாத்தை சென்னை ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். #Vigilance

    மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தக்கோலம் போலீஸ் ஏட்டு, புதுச்சேரியில் இருந்து மது கடத்திய ஆற்காடு போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் போலீஸ் நிலையத்திற்கு எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள குசஸ்தலை ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான லாரிகளில் மணல் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இதை வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் கண்காணித்து அவ்வப்போது தடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தக்கோலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு நாராயணசாமி மணல் கடத்தல்காரர்களோடு ரகசிய தொடர்பு வைத்துள்ளதாகவும் போலீசார் ஆய்வு குறித்து அவ்வப்போது கடத்தல்காரர்களுக்கு தெரியப்படுத்தி வருவதாகவும் எஸ்.பி. பிரவேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஏட்டு நாராயணசாமியை தக்கோலம் போலீஸ் நிலையத்தில் இருந்து வேலூர் ஆயுதப்படைக்கு இடமாற்றி எஸ்.பி.பிரவேஷ்குமார் கடந்த 10 தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். மேலும் அவரின் செல்லிடப்பேசியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    இதில் ஏட்டு நராயணசாமி, மணல் கடத்தல் காரர்களோடு பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு நாராயணசாமியை சஸ்பெண்டு செய்து வேலூர் எஸ்.பி.பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

    நாராயணசாமி கடந்த 3 மாதங்களுக்கு முன்தான் நெமிலி போலீஸ் நிலையத்தில் இருந்து தக்கோலத்துக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் போலீஸ்காரர் சுரேந்தர். இவர் நண்பர்களோடு சேர்ந்து புதுச்சேரியில் இருந்து மது கடத்தி வந்தார். விழுப்புரம் மாவட்டம் எல்லையில் உள்ள கோட்டகுப்பம் சோதனை சாவடியில் நடந்த சோதனையில் சிக்கி கொண்டார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்தர் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் சுரேந்தர் 4-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்.

    கைதான போலீஸ்காரர் சுரேந்தரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். #tamilnews
    ஆம்பூர் அருகே பஸ் டெப்போவில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சபரேசன் (வயது 48). தனியார் பஸ் உரிமையாளர். இவர் ஆம்பூர் விண்ணமங்கலம் அருகே பஸ் டெப்போ (மெக்கானிக் செட்) வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று சபரேசன் வேலையை முடித்து விட்டு பஸ் டெப்போவை பூட்டிச் சென்றார். நேற்று முன்தினம் காலை டெப்போவை திறக்க வந்த போது டெப்போவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சபரேசன் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது டெப்போவில் இருந்த பேட்ரி, ஜாக்கி உள்ளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சபரேசன் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது 32). சுரேஷ்குமார் (28). பிரசன்னா (27). சுரேஷ் (32). கார்த்தி (24). தினேஷ்கமார் (28) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    நாட்டறம்பள்ளியில் லாரி மீது சொகுசு பஸ் மோதியதில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    நாட்டறம்பள்ளி:

    சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பஸ் நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த பஸ்சை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த டிரைவர் அஜித் (வயது 22) ஓட்டினார். துணை டிரைவராக தேனியை சேர்ந்த சரவணகுமார் (33) உடன் வந்தார்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவர் அஜித், துணை டிரைவர் சரவணகுமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மணிகண்டன் (42), திருவண்ணாமலையை சேர்ந்த தமிழரசன் (25) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம் ஓடும் ரெயிலில் நெஞ்சு வலி ஏற்பட்டு கேண்டீன் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரக்கோணம்:

    ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 36). இவர் ரெயில்வே கேண்டீன் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். முருகன் இன்று காலை சென்னையில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த ரெயிலில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

    வலியால் துடித்து கொண்டிருந்தவரை கண்ட சக ஊழியர்கள் ரெயில் டிக்கட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களில் யாரேனும் டாக்டர்கள் உள்ளனரா? என்று விசாரித்தார்.

    அப்போது ஒருவர் தான் டாக்டர்தான் என்று கூறி முருகனுக்கு சிகிச்சையளிக்க முன் வந்தார். அவர் முருகனை பரிசோதித்த போது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

    அதற்குள்ரெயில் அரக்கோணத்திற்கு வந்தடைந்தது. டிக்கட் பரிசோதகர் ரெயில்வே போலீசாரிடம் முருகனின் உடலை ஒப்படைத்து விட்டு ரெயில் புறப்பட்டது.

    இது குறித்து ரெயில்வே போலீசார் உடலை கைபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூளியில் விளையாடிய போது சுவற்றில் மோதி 2-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்பாபு இவரது மகள் சோபியா (வயது 7). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்த சோபியா புடவையில் தொங்கவிடபட்டிருந்த தூளியில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது தூளியில் சோபியா வேகமாக விளையாடியதால் வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.

    இதில் சோபியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். மகளை கண்ட பெற்றோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சோபியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×