என் மலர்
நீங்கள் தேடியது "young girl jewelry snatch"
வேலூர்:
லத்தேரி அடுத்த அன்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அபிலா (வயது 22). இவர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் வாகன ஷோரூமில் வேலை செய்து வருகிறார்.
அபிலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியை முடித்து கொண்டு இரவு 7.30 மணிளவில் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் ஷோரூமுக்கு அருகிலேயே அபிலோவின் கழுத்தில் இருந்த 1½ பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அபிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரின் விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சோலைச்சேரி கிராமத்தில் உள்ள முனியம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகள் ஆவுடையம்மாள் (வயது25).
இவர்களுக்கு சொந்தமான வயல் மண்ணடி கண்மாய் பகுதியில் உள்ளது. நேற்று வயல் வேலைக்கு சென்ற ஆவுடையம்மாள் பிற்பகலில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று ஆவுடையம்மாள் கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்தான்.
உடனே சுதாரித்துக் கொண்ட அவர் நகையை பிடித்துக்கொண்டு போராடினார். இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் ஆவுடையம்மாளை சரமாரியாக தாக்கி விட்டு கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினான்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.






