என் மலர்
வேலூர்
காதலனுடன் உல்லாசமாக இருந்து கர்ப்பிணியான இளம்பெண், தன்னை அவருடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தனது பெற்றோருடன் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மகமதுபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகள் சினேகா (வயது 19). பிளஸ்-1 வரை படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். சினேகாவும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய அத்தை மகன் சுதனும் (24) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சுதன் சென்னையில் தங்கி திரைப்படங்களுக்கு பின்னணி இசை சேர்க்கும் பிரிவில் சவுண்டு என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சுதன் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து படம் தயாரிப்பதாகவும், அதில் கதாநாயகனின் தங்கையாக நடிக்க வைப்பதாகக் கூறி, இளம்பெண் சினேகாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சினேகாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி சுதன் உல்லாசமாக இருந்தாகவும், இதனால் சினேகா கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுதனிடம் தெரிவித்த சினேகா தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர், திருமணம் செய்வதாகக் கூறி காலம் கடத்தி வந்தார். தான் கர்ப்பமாக இருப்பது பெற்றோர், குடும்பத்தினருக்கு தெரிந்து விடுமோ எனப் பயந்த அவர் உடனடியாக திருமணம் செய்யும்படி அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதன் திருமணம் செய்ய மறுத்ததுடன், உன் கர்ப்பத்துக்கு நான் காரணம் அல்ல, என்னை வந்து தொந்தரவு செய்யாதே எனச் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த அவர், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சினேகா வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்துள்ளார். ஆனால் சுதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் விரக்தி அடைந்த சினேகா தனது பெற்றோருடன் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை போலீசார் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சினேகா தனது காதலனுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். போலீசார் செல்போனில் சென்னையில் இருக்கும் சுதனை தொடர்பு கொண்டு பேசினர். இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காக 4 நாட்களுக்குள் போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் எனத் தெரிவித்தனர். அவரும் வேலூர் வருவதாகக் கூறினார். அதைத்தொடர்ந்து சினேகா, அவரின் பெற்றோர், குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருவலம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவலம்:
திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 60), வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்:
வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இ-பாஸ் பெற்று தர ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரை போலீஸ் தேடி வருகிறது.
வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வழங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இ-பாஸ் பெற்று தர ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரை போலீஸ் தேடி வருகிறது.
வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வழங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கே.வி.குப்பம் பகுதியில் 2 கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பத்தில் நேற்று போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வடுகந்தாங்கல் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த எலக்ட்ரீசியன் கடை, மேல்மாயில் ரோடு பகுதியில் மளிகைக்கடை ஆகியவற்றின் உரிமையாளர்கள் மீது கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6,490 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6,490 ஆக அதிகரித்துள்ளது.
வேலூரில் 65 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 5,378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6,490 ஆக அதிகரித்துள்ளது.
வேலூரில் 65 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 5,378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரேநாளில் 752 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பாதித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் சளி, இருமல் காணப்படும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாநகராட்சி பகுதியில் 11 சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
3-வது மண்டலம் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்த முகாமில் 106 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. முகாமை சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் லூர்துசாமி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். இதேபோல சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் பகுதியில் 2-வது மண்டலம் சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. அங்கு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.
மேலும் முகாம்களில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகளும் பரிசோதனை செய்து கொண்டனர். ஒரேநாளில் 752 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டதாக நகர்நல அலுவலர் சித்ரசேனா தெரிவித்தார்.
வேலூர் அருகே மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே வயலில் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி ராஜசேகர் என்பவர் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கடலை வயலில் மின்வேலி அமைத்திருந்த உரிமையாளர் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே வயலில் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி ராஜசேகர் என்பவர் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கடலை வயலில் மின்வேலி அமைத்திருந்த உரிமையாளர் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அருகே உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:
குடியாத்தம்- சித்தூர் சாலையில் உள்ள பாக்கம், ராமாலை, தாட்டிமானபல்லி, கல்லப்பாடி, கே.மோட்டூர், ஸ்ரீராமுலு பட்டி, கதிர் குளம், அனுப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விவசாயம் மற்றும் கறவை மாடுகளை நம்பியே உள்ளனர். இந்த கறவை மாடுகளில் கறக்கப்படும் பாலை ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி வந்தனர்.
தற்போது கொரோனா பாதிப்பு தடை உத்தரவு உள்ளதால் அந்த தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விலையை குறைத்து உள்ளனர். மேலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.
இதனால் விவசாயிகள் கறக்கும் பால் முழுவதையும் சப்ளை செய்ய முடியவில்லை. பால் வேண்டாம் என கூறுவதால் அந்த பாலை என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மேலும் விவசாயிகள் தங்களின் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனங்களை அந்த தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து வாங்குகின்றனர். ஆனால் அதற்கான விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
விலை கட்டுபடி ஆகாத இந்த நிலையிலும், பால் விலை குறைந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு உடனடியாக இதில் தனிக்கவனம் செலுத்தி விவசாயிகளின் முழு பாலை கொள்முதல் செய்யவும் உரிய விலை கிடைக்கவும் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனங்களை குறைந்த விலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கே.மோட்டூர் ஸ்ரீராமுலு பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 212 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,087 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 5,875 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 212 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,087 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 4,464 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 5,875 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 212 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,087 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 4,464 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.985 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர்:
மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப் பட்டு இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில்
சாலைகள் அமைத்தல், வீடுகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு, கோட்டை அழகுபடுத்துதல், பாதாள சாக்கடை திட்டம்,
வணிகவளாகங்கள் கட்டுதல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வரு கின்றன. வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று
வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.
தொரப்பாடி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் காற்றின் தரத்தை அறியும் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளதை கலெக்டர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கருவியின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த
பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி
காணப் பட்டால் சளிமாதிரி பரிசோதனை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத் தினார்.
அதைத்தொடர்ந்து சதுப்பேரியில் காணப்படும் குப்பையை தரம் பிரித்து அகற்றுவதற்காக பின்லாந்து நாட்டில் இருந்து வந்துள்ள நவீன
எந்திரத்தை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து
மாநகராட்சி அதிகாரிகள், பணி மேற்பார்வையாளர் களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கோட்டை அகழி தூர்வாருதல், புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள், நவீன வாகன நிறுத்துமிடம், வணிக வளாகங்கள்
கட்டுதல், சாலை, பூங்கா அமைக்கும் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறிய தாவது:-
வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.985 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில்
35 கிலோ மீட்டருக்கு ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி மையங்கள், பாதாள சாக்கடை திட்டம், நவீன வாகன நிறுத்துமிடம்,
140 அரசு கட்டிடங்களில் சோலார் தகடுகள் பொருத்துதல், சூரியஒளியில் மின்சாரம் தயாரித்தல், கோட்டையை அழகு படுத்துதல்
உள்ளிட்டவை முக்கியமானவைகளாகும்.
வேலூர் மாவட்டத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற் பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. தொற்றால்
உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது காணப்படும் கட்டுப்
பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து காட்பாடி காந்திநகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் சர்க்கார்
தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய பணிகளை பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் சங்கரன், உதவி கமிஷனர் செந்தில்குமார், என்ஜினீயர் சீனிவாசன், நகர்நல அலுவலர் சித்ரசேனா
மற்றும் பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 161 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுஇடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட்டமாக நிற்க கூடாது. அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் சுற்றி திரியக்கூடாது. பொதுஇடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஊரடங்கை மீறிய 161 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் விதியை மீறி திறந்த 61 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் மழைநீர் தேங்கி சேறும், சகதியாக காணப்படுகிறது. அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்:
மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோட்டை சீரமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு, நவீன வாகன நிறுத்துமிடம் அமைத்தல், மழைநீர் கால்வாய் அமைத்தல், புதிய, பழைய பஸ்நிலையங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் சாலை மற்றும் தெருவோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கப்பட்டன. அதன்பின்னர் கூட்டு குடிநீருக்காக தோண்டப்பட்ட சாலைகள், தெருக்கள் முறையாக சீரமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் வீடுகள், கடைகள், தங்கும்விடுதிகள், ஓட்டல்கள், வணிகவளாகங்கள் உள்ளிட்டவற்றின் கழிவுநீர் செல்வதற்கான பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் சத்துவாச்சாரி டபுள்ரோடு, சக்திநகர், ஆர்.டி.ஓ. அலுவலக சாலை, சாய்நாதபுரம், சங்கரன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சாலைகள், தெருக்களின் நடுவே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அதன்பின்னர் பாதாள சாக்கடை தொட்டி கட்டப்படுகிறது. சில நாட்களுக்கு பின்னர் அந்த தொட்டிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் இணைப்பு கொடுக்கப்படுகிறது.
இவ்வாறாக சாலைகள், தெருக்களில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சுற்றியுள்ள பகுதிகள் சரியாக மூடப்படவில்லை. மேலும் பள்ளங்களை ஒட்டி குவித்து வைக்கப்படும் மண்ணை சாலை முழுவதும் சமமாக பரப்பவில்லை. அதனால் மழைநீர் தேங்கி அப்பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதன்காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சத்துவாச்சாரி பகுதி-3 சக்திநகர் பொதுமக்கள் கூறுகையில், “பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தை சுற்றி மண் கொட்டி சரியாக நிரப்பவில்லை. பள்ளம் தோண்டிய இடத்தில் காணப்பட்ட மண்ணை சாலை முழுவதும் பரப்பி சீரமைக்கவில்லை. பாதாள சாக்கடை திட்ட பணியாளர்கள் அவசர கதியில் செய்து விட்டு செல்கின்றனர். அதனால் சாலையின் நடுப்பகுதி மண் குவிந்து மேடாக காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்று சேறும், சகதியுமாக உள்ளது.
அதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகிறார்கள். சில சமயங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சகதியில் வழுக்கி விழுகிறார்கள். விவசாய நிலத்தை பயிரிடுவதற்கு உழவு செய்யப்பட்டது போன்று இந்த பகுதி காணப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படாது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.






